“காற்றின் மொழி” – செல்ஃபோன், வேலை இழப்பு, பொருளாக பார்க்கப்படும் பெண்கள்

ராதா மோகன் இயக்கிய “காற்றின் மொழி” திரைப்படத்தை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது.

ஜோதிகா (விஜயலக்ஷ்மி), விதார்த் (பாலு) இருவரும் கணவன் மனைவியாக நடித்துள்ளார்கள். அவர்களுக்கு ஒரு ஆண் பிள்ளை, பணம் கட்டி படிக்க வைக்கும் பள்ளிக்கூடத்தில் படிக்கிறார். படத்தில் ஜோதிகாவை விஜி என்றுதான் அழைப்பார்கள்.

பெண்களை பொருளாக காட்டும் காட்சி ஊடகம்

இந்தப் படம் ஆரம்பிக்கும்போதே எலுமிச்சை பழத்தை கரண்டியில் வைத்தபடி அதை வாயில்வைத்து கொஞ்ச தூரம் விழாமல் நடக்க வேண்டும். அதுவும் வேகமாக நடக்க வேண்டும். யார் முதலில் வருகிறார்களோ அவர்கள்தான் வெற்றி. அதில் ஜோதிகாவும் கலந்துகொள்வார், இரண்டாம் பரிசு பெறுவார்.

எப்படி விஜய் தொலைக்காட்சியை தொடர்ந்து அனைத்து தொலைக்காட்சிகளிலும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்ற பெயரில் பலூன் வெடிப்பது, தண்ணீர் அடிப்பது போன்ற மொக்கை விளையாட்டு மற்றும் கூத்தாட்டத்தை நடத்தி அதையும் கவர்ச்சிகரமாக காட்டி மக்களை அதன் பக்கம் திருப்பி ரசிக்க வைத்து பணத்திற்காக இவாறாக செய்வது அதுபோலவே இதை பார்க்க வேண்டும்.

பெண்கள் கவர்ச்சிபொருளாய் காட்டக்கூடிய இயந்திரமா? ஏன் அதுபோன்ற காட்சிகளை மொக்கை என்று சொல்கிறேன்?

கடலூர் பகுதியில் விதவைகள் கிராமமே உள்ளது. சமீப காலத்தில் மதுப்பிரச்சினை மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. அதில் பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். ஆதலால் பெண்களே தமிழ்நாட்டில் பல பகுதிகளில் உள்ள கடைகளை போராட்டம் செய்து மூடினார்கள். மூடவில்லை என்றால் உடைத்து நொறுக்கினார்கள். இத்தகைய வீரமிக்க பெண்களை பலூன் வெடிக்க வைப்பதும், தண்ணீரில் ஈரமாக்கி கவர்ச்சியாக காட்டுவதும், பார்க்கிறவர்கள் உணர்வுகளை தூண்டவைத்து வியாபாரம் செய்யும் என்கிற நுகர்வு கலாச்சாரம் அவர்களை சின்னாபின்னாமாக்குகிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதை தினமும் செய்தித்தாளில் பார்த்திருப்போம் அப்படி ஒரு பாதிப்புக்குள் சிக்கியிருக்கும் பெண் சமூகத்தை யார் மீட்டெடுப்பது? கண்டிப்பாக டாஸ்மாக் கடைகளை உடைத்தெறிந்த பெண்களால் இதைச் செய்வது பெரிய விஷயம் இல்லை என்றே நினைக்கிறேன். ஆனால், படங்களில் சீரியல்களில் அவர்களை எலுமிச்சை பழத்தை விழாமல், கோலம் போட்டி போன்ற மொக்கை விளையாட்டுக்கு அடிமையாக்கினால் சமூகத்தில் நடக்கும் இப்படியொரு பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காமல் பல பெண்களை பலிகொடுக்க தயாராக வேண்டும்.

முதலாளி வேலை செய்கிறாரா?

மீண்டும் படத்திற்கு வருவோம். பாலு(விதார்த்) அந்தப் படத்தில் தையல் தொழிற்சாலையில் மேலாளராக இருப்பார். அங்கு பல பிரச்சனைகள் வரும். அதை கம்பெனி சொந்தக்காரரிடம் சொல்லச் செல்வார். அங்கு காதுகேட்காத ஒரு பெரியவரும், மணி ஆட்டிக்கொண்டு சாமிக்கு பூஜை செய்பவரும் இருப்பார்கள். பாலு சொல்வதை இருவரும் புரிந்தும் புரியாதது போல இருப்பார்கள். அதாவது கம்பெனி ஓனர் தொழிற்சாலையில் நடக்கும் எந்தவித கஷ்டங்களிலும் பங்கெடுத்து கொள்ளாமல் இருப்பதும் பூஜை செய்வதை மட்டும் கஷ்டப்பட்டு சந்தோசமாக செய்பவர் தொழிற்சாலையில் நடக்கும் எந்தவித பிரச்சனையையும் சரிசெய்ய வக்கற்றவர்களாக உள்ளனர் என்பதே நிதர்சனம்.

ஆனால் அவர்களிடம்தான் லாபம் போய் சேருகிறது. அவர்கள்தான் அதைவைத்து பல இடத்தில் முதலீடு செய்து கம்பெனி ஆரம்பித்து தொழிலாளர் உழைப்பை சுரண்டி லாபத்தை குவித்து வருகிறார்கள்ர பணக்காரர்களாய் மாறுகிறார்கள் என்பதுதான் இதில் அடங்கிய விஷயம்.

வீடியோ கேம் டச்போனின் தாக்கம்

இன்னொரு பக்கம் பாலுவின் பையன் தொடுதிரை வசதி கொண்ட கைபேசியில் விதவிதமான விளையாட்டுகள் விளையாடி பழக்கப்பட்டு அதனால் படிப்பிலும் சரியாக கவனம் செலுத்தாமல் போகிறார். தன்னுடைய பிள்ளை கைபேசியில் வீடியோ கேம் விளையாடி நேரத்தை வீணடிக்கிறார் என்பதை கவனிக்காமல் விட்ட பிறகு, அதுவே பெரிய பிரச்சனையாக உருவெடுத்து சந்தைக்கு புதிய வீடியோகேம் பணம் கொடுத்து வாங்க தந்தையின் செல்போன், தனக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர் போனையும் அவர் நண்பருடன் சேர்ந்து திருடுகிறார்.

படத்தில் காட்டியதை விட பலமடங்கு அதிகமாக குழந்தைகளின் அறியாமையில் செல்போன் மூலம் நடக்கிறது. அதன் தீவிரத்தைபற்றி தாய் தந்தைக்கும் தெளிவு இல்லாததால் குழந்தையை கவனித்து சொல்லுவதில்லை சொன்னாலும் அந்த நேரத்தில் ஏற்றுக்கொள்வதுபோல நடித்துவிட்டு பிறகு அவர்கள் நண்பர்களுடன் வழக்கம் போலத்தான் தவறுகளில் மாட்டிக்கொள்கிறார்கள்.

அதுமட்டுமில்லை வாட்சப் பேஸ்புக் யூடியூப் திரைப்படத்தில் சீரியல்களில் வரும் ஆபாச காட்சிகள் என்பவற்றின் மூலமாக பல்வேறு தவறான விஷயங்களை கற்றுக்கொள்கிறார்கள் அதற்கு பலியாகிறார்கள். அதனால், சிறிய வயதில் காதல் பற்றிய புரிதல் இல்லாமல் லவ் லெட்டர் கொடுப்பதும், வீடியோகேம் விளையாடுவதில் முழு கவனமும் செலுத்துவது, இதனால் படிப்பில் கவனம் செலுத்தாமல் போவதும் வீடியோகேம்-ல் வருவதுபோல நிஜத்தில் அடிப்பதும் உதைத்தும் பெற்றவர்களையும் சுற்று வட்டார மக்களையும் மதிக்காமல் போவதும் இதுபோன்று நுகர்வு கலாச்சாராத்தல் பலியாக்கப்படுகிறார்கள் என்கிற பலவிஷயங்கள் செய்திகளாக நாள்தோறும் வருகிறது என்கிற உள்ளடக்கமும் படத்தோடு சேர்த்து பார்க்க வேண்டும்.

மனைவி வேலைக்கு போகக்கூடாதா?

விஜயலக்ஷ்மி (ஜோதிகா)-யை இயல்பாக பாட்டு பாடுபவராகவும், மிமிக்ரி செய்பவராகவும் படத்தில் காட்டியிருப்பார்கள் அதன்கூடவே அவர்களுக்குள் ஏதோ ஒரு ஏக்கம் வேலைக்கு போகவேண்டும் அல்லது சொந்தத் தொழில் செய்யவேண்டும் என்று இருந்துகொண்டே இருக்கும்.

அதற்குக் காரணம் ஒருபக்கம் அவருடைய அப்பா ஜோதிகா பன்னிரண்டாம் வகுப்பு தோற்றுப்போனதையும் அக்காக்களோடு ஒப்பிட்டு முன்னேறவில்லை என்றும் சொல்லி காட்டுவார், மறுபக்கம் தன்னுடைய கணவர் வேலையில் சந்திக்கும் பிரச்சினையால், அக்கம்பக்கத்தில் உள்ள பெண்கள் வேலைக்கு செல்லும் காட்சிகளை பார்த்ததும் தானும் ஒரு நாகரீகமான வேலைக்கு சென்று விடவேண்டும் என்ற சிந்தனை ஓட்டம் இருந்துகொண்டே இருக்கும்.

தன்னுடைய கணவர் பாலு வேலைக்கு சென்றதும் விஜி மின்சார கட்டணம் செல்வதற்கு வெளியே செல்லும்முன் பறவையுடன் மனதில் உள்ளதை வெளிப்படையாக கொஞ்ச நேரம் பேசுகிறார். அந்தக் காட்சி நன்றாக இருக்கும்.

கல்யாணம் ஆனபிறகு பெண்கள் காலையில் குழந்தைக்கு கணவருக்கு மாமியார் மாமனாருக்கு சமயல் செய்வது வீட்டுவேலை செய்தே காலங்கள் செல்லும். சில நாட்களுக்கு பிறகு அதுவே பழகிப்போய் வீட்டுக்குள் அடங்கிக்கிடக்கும் பெண்ணாக சிறைக்குள் அடைபட்ட சிங்கமாக இருக்க வேண்டும். தன்னுடைய விருப்பங்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு கணவர் மாமியார் மாமனார் சொல்வதை கேட்டு நடந்துகொள்ள வேண்டும். கொள்ளவில்லை என்றால் அவர்களின் அரவணைப்பு கிடைப்பதில்லை. “நாங்க சொல்றத கேட்காம போன இல்ல, அதான் இப்படி ஆகிப்போச்சு” என்று சப்பகட்டுவார்கள்.

அதேபோலத்தான் விஜிக்கும் நடக்கிறது, தன்னுடைய விருப்பமான RJ வாக FM-ல் வேலை கிடைத்ததை அப்பா, அக்கா யாரும் அங்கீகரிப்பதில்லை.

செய்தித்தாள், தொலைக்காட்சிகளில் பெண்கள் பாதிக்கப்படுவது போல தனது மனைவிக்கும் நடந்துவிடுமோ என்கிற பயம், ஏதாவது அறியாமல் தவறாக விஜி மாட்டிக்கொள்வாளா என்கிற குழப்பம் கலந்த பயம் பாலுவிற்குள் இருந்துகொண்டே இருக்கும். FM-ல் வேலைபார்க்கும் விஜிக்கு மாற்றுப்பெயர் “மது” என்று வைக்கிறார்கள்.

அந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஒருவர் தொடர்பு கொண்டு பேசுவார். “நான் பெண்களின் பெண்களின் உள்ளாடை விற்கிற கடையில் வேலை பார்க்கிறேன், அதனால் பெண்ணின் முகத்தை பார்த்து பேசாமல் அவர்களின் மார்பகங்களை பார்த்து பேசுகிறேன். எவ்வளவு முயற்சி செய்தும் என்னால் அதை மாற்ற முடியவில்லை” என்ன செய்வது என்ற கேள்வியோடு தொடரும். அந்த நேரத்தில் FM கேட்டுக்கொண்டிருந்த பாலுவிற்கு தன்னுடைய மனைவியுடன் இப்படியெல்லாம் பேசுகிறார்களே என்கிற சாதாரண மனிதனின் கோபம்.

திரைப்படம், சீரியல்கள் ஆபாச படங்களின் தாக்கம்

FM-ல் விஜியோடு தொடர்பு கொண்டு பேசியவர் பெண்களின் உள்ளாடை விற்கிற கடையில் வேலை செய்வதால் அவ்வாறு பெண்களை பார்க்கிறார் என்பது மட்டுமில்லை கைபேசி வைத்துள்ள 99% சதவீத ஆண்கள் இணையத்தில் ஆபாச படங்களை நண்பர்கள் மூலமாகவோ அல்லது தானாக இணையத்தில் தேடும்போதோ பார்த்து பழகியுள்ளவர்கள் அனைவருமே பெண்களை உடல் ரீதியாக பார்க்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

பார்ப்பதுமட்டுமில்லை பெண்கள் சிறுவயது முதல் வயதானவர்கள் வரை பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் நடக்கிறது. அதைத்தான் செய்தித்தாள்களில் தொலைக்காட்சிகளில் தினமும் பார்க்கிறோம். அதன் தீவிரத்தை செய்தியாக பார்த்துவிட்டு கடந்துபோகிறோம். தனது மகள் மனைவி தங்கச்சி பாதிக்கப்படும்போது பாதிக்கப்பட்ட பிறகு இதைப்பற்றி யோசித்தால் பயனில்லை என்றே நினைக்கிறேன். ஆதலால் வீட்டில் பெண்களுக்கு எவ்வாறு நல்லது கெட்டது சொல்லிக்கொடுத்து வளர்கிறோமோ அதுபோலத்தான் ஆண் பிள்ளைகளுக்கும் சரியானவற்றை தவறானவற்றை சொல்லி வளர்க்கவேண்டும். அப்படியில்லாமல் ஆண் சிங்கம் எங்கு போனாலும் வந்துவிடுவான் ஒன்னும் பிரச்னை இல்லை என்று விட்டால் எந்த பெண்ணையாவது தாக்கி விட்டு வருவதை தடுக்க முடியாது.

பெண்களை எப்படி மதிக்க வேண்டும், அவர்களுக்கு பிரச்சனை என்றால் எவ்வாறு மதித்து செயல்பட வேண்டும், மற்ற பெண்களையும் நம்முடைய வீட்டு பெண்களை போல மதிக்க வேண்டும் என்று சொல்லும்போது இதெல்லாம் சினிமா பேச்சு நடக்காது என்று நினைத்தால் திரைப்படங்களாலும், நாடகங்களாலும், ஆபாச படங்களாலும் பாதிக்கப்பட்டுள்ள மன நோயாளியாக மாறியுள்ளாய் நீ என்பதுதான் உண்மை அதன் உச்சகட்டம் பெண்களை பாலியல் ரீதியான துன்புறுத்தலில் முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

பெரும்பான்மையான திரைப்படங்கள் பணத்திற்காக எடுப்பதால் பார்வையாளர்களின் உணர்ச்சிகளை தூண்டவைத்து வியாபாரம் பார்ப்பதே குறிக்கோளாக செயல்படுகிறார்கள். அதேபோலத்தான் இணையத்தில் வரும் படங்களும் டிவி-ல் வரும் நாடகங்களும். இந்த உண்மையோடு படங்களை புரிந்துகொள்ளவேண்டும். இப்படியான படங்களை தடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களிடம் அதிகாரம் இல்லை. அது மாறும்வரை நாம் தவறானவற்றை தவிர்த்து விலகி நிற்க வேண்டும். சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை கவனித்து நம்முடைய வாழ்க்கை முன்னேற்றத்தை பற்றி சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்பதுதான் சரியென்று நினைக்கிறன்.

தொழிலாளர்கள் வேலையை விட்டு வெளியேற்றம்

அதே படத்தில் பாலுவை வேலையை விட்டு வெளியேற்ற புதிதாக வந்த கம்பெனி ஓனர் முயற்சி செய்வார். வேலை இழப்பு தொழிலாளர்களுக்கு எந்தவிதமான பாதிப்பை தருகிறது என்பது காட்டப்படுகிறது. வேலை இழப்பால் தொழிலாளர்களின் வீட்டில் நிம்மதியான வாழ்க்கை இல்லை குடும்பமே பாதிப்புக்குள்ளாகிறது என்பதையும் படத்தில் காட்டியுள்ளார்கள். இதை விட கொடூரமாக தொழிலாளர்களை அடக்கி ஒடுக்குகிறார்கள் என்பதை அங்காடித்தெரு படத்திலும் இன்னும் சில படங்களிலும் காட்சிப்படுத்தியுள்ளார்கள்.

தொழிலாளர்கள் அவர்களாக வேலையை விட்டு வெளியேற வேண்டும் என்று அவர் செய்யாத தவறையும் செய்ததாய் சொல்லி எல்லார் முன்னிலையிலும் அசிங்கப்படுத்துவார், முதலாளி. அதனால் கோவத்தை அடக்கிக்கொண்டு வேறு வழியில்லாமல் பொறுத்துக்கொண்டு போகும் நிலைமையில் தொழிலாளர்கள் கம்பெனியில் வேலை பார்ப்பார்கள்.

ஆனால் இதற்கு வேறு வழியே இல்லையா? என்றால் உள்ளது, படத்தில் காட்டாத விஷயத்தை சொல்கிறேன், தொழிலாளர்கள் சாதிமத பேதமில்லாமல் சமத்துவமாக ஒரு சங்கமாக ஒன்றிணையும் பட்சத்தில் தொழிலாளர் சம்பந்தமாக அதாவது திடீரென்று வேலையை விட்டு நீக்குவது, ஊதிய உயர்வு தருவதில்லை, ஒப்பந்த பணியாளரின் இருந்து நிரந்தர பணியாளராக மாற்றவில்லை இப்படியாக எந்தவொரு தொழிலாளர் சம்பந்தமான பிரச்சனை என்றாலும் தொழிலாளர் நலத்துறை மூலமாக தீர்த்துக்கொள்ளலாம், ஒருவேளை தொழிலாளர்கள் ஒற்றுமையில்லை என்றால் பலநேரங்களில் தோற்றுப்போகும் நிலைமைதான் உள்ளது.

முக்கியத்துவம் பணமா பிள்ளையா?

வேலைக்கு போகவேண்டும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது தேவைதான், அதே நேரத்தில் குழந்தைகளையும் கவனித்து அவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி சரியான பாதையில் செல்லும்படி வளர்க்க வேண்டும், இல்லையென்றால் ஏதாவது பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டு வாழ்க்கையே அழிந்துபோகும் சூழ்நிலைக்கு தள்ளிவிடும்.

அதேபோலத்தான் இந்த படத்தில் பாலுவின் பையனை கவனித்து வழிநடத்தாமல் விட்டதால் வீட்டைவிட்டு வெளியேறும் சூழ்நிலை உருவாகும். குழந்தைகள் தவறுகள் செய்யும்போது அடிப்பது திட்டுவது பயமுறுத்துவது மூலம் தீர்வு கிடைக்காது, கூடவே அவர்களுக்கு பலமுறை பிரச்சினைபற்றி அதனால் வரும் தீங்குகளையும் புரிந்துகொள்ளும்வரை விளக்க வேண்டும். அதை செய்ய தவறினால் கண்டிப்பாக குழந்தைகள் வாழ்க்கை முழு புரிதலோடு இல்லாமல் வேண்டா வெறுப்பாக செல்லும்.

பல பிரச்சினைகளுக்கு பிறகு பாலுவும் விஜியை புரிந்து கொள்வார். பிறகு ஆசைப்பட்டபடியே தனக்கு விருப்பமான வேலைக்கு விஜி சந்தோசமாக செல்கிறார். ஆனால் விஜி தன்னுடைய கணவருக்கு புரிய வைக்க எடுத்துக்கொண்ட போராட்டம், அப்பா அக்கா அனைவரும் தவறாக பேசும்போது அங்கே சரியான காரணத்தை முன்வைத்து பேசியது எல்லாம் சேர்த்து பார்க்க வேண்டும். அதனால் இறுதியாக விருப்பமான வேலைக்கு செல்லும்படியான சூழ்நிலை உருவாகிறது என்பதாக இயக்குனர் படத்தை முடித்திருப்பார்.

– சுகேந்திரன்

Permanent link to this article: http://new-democrats.com/ta/kaatrin-mozhi-movie/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
நெடுவாசல் : ஒரு ஐ.டி ஊழியரின் போராட்ட அனுபவம்

ஹைட்ரோ கார்பன் போராட்டம் தொடங்கியவுடன் நாமும் ஏதேனும் செய்ய வேண்டும் என்று கருதி போராட்டத்தின் 12-ம் நாள் முதல் 19-ம் நாள் வரை நெடுவாசல் போராட்டக் களத்தில்...

அந்த 35 நாட்களும்,  ‘பரஸ்பர பிரிவு ஒப்பந்தமும்’ – காக்னிசன்டின் கட்டாய ராஜினாமா

தென்னைமரத்தில் காய்ந்த மட்டையின் முடிவை கண்டு இளங்குறுத்துக்கள் எவ்வித பரிவுமின்றி ஏளனம் செய்ததை பார்த்து காய்ந்த மட்டை சிரித்து கொண்டே கூறியதாம், 'எனது நிலை போல உனக்கு...

Close