கொடைக்கானல் பாதரச நச்சு : யூனிலீவரின் இனவெறி கொள்கை

A song to call out environmental racism என்ற தலைப்பில் டி.எம்.கிருஷ்ணா, சோஃபியா அஷ்ரஃப், நித்யானந்த் ஜெயராமன், ரதீந்திரன் பிரசாத் ஆகியோர் தயாரித்த கொடைக்கானலில் பாதரச விஷமாக்கலைப் பற்றி பிரச்சார பாடல்.

2015-ல் பிந்தைய 3 பேரும் இணைந்து Kodaikanal won’t என்ற தலைப்பில் ஒரு வீடியோ தயாரித்திருக்கின்றனர். யூனிலீவர் பாதரச நச்சுப்படுத்தலை சுத்திகரிக்கவும், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கவும் மறுப்பதை எதிர்த்த பாடல். வீடியோ வைரல் ஆகி விட, கம்பெனி 591 தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கியது.

இப்போது Kodaikanal still won’t என்ற தலைப்பில் இன்னொரு வீடியோ வெளியிட்டிருக்கின்றனர்.

நியூயார்க் மாநிலத்தின் வாட்டர்டவுன் நகரில் பிளாக் ரிவர் கரையில் அமைந்திருந்த தொழிற்சாலையை அமெரிக்க, கனடிய அரசுகள் தெரிவித்த எதிர்ப்பைத் தொடர்ந்து மூடி விட்டது. அதே போன்ற தொழிற்சாலையை கொடைக்கானலில் அமைத்திருக்கிறது.
இதை கண்ணாடி உற்பத்தி தொழிற்சாலை என்று சொல்லியிருக்கிறார்கள். பாம்பாடும் சோலை என்ற நீர் ஆதாரத்துக்கு அருகில் தொழிற்சாலை அமைத்திருக்கிறார்கள். தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவில்லை.

இங்கிலாந்தில் பாதரசம் நச்சுக்கான வரம்பு 100 கிராமுக்கு 1 மி.கி-க்கு மிகாமல் இருக்க வேண்டும் – குடியிருப்பு பகுதிகளில். ஆனால், கொடைக்கானலில் 100 கிராமுக்கு 20 மி.கி அளவு வரைதான் சுத்திகரிப்போம் என்கிறது ஹிந்துஸ்தான் யூனிலீவர். இது குடியிருப்பு நிலம் இல்லை, காட்டு நிலம், இதன் மூலம் நீர் ஆதாரங்கள் உருவாகின்றன. இதை சுத்திகரிப்பதற்கு பின்தங்கிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சோதனை ஓட்டம் நடத்தியிருக்கின்றனர். மிகச்சிறந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்பது கோரிக்கை.

இந்த வீடியோவில், கர்நாடிக், ரேப், தமிழ் ராக் போன்ற குத்து, வெட்டி வேர் கலெக்டிவ் என்ற என்.ஜி.ஓ இந்த வீடியோவை தயாரித்திருக்கிறது. 26 தொழிலாளர்கள், 300 பாதிக்கபட்ட மக்கள் பங்கேற்றிருக்கின்றனர்.

முதல் வீடியோவை 40 லட்சம் பேர் பார்த்திருக்கின்றனர். இந்த வீடியோவை இது வரை 20,000 பேர் பார்த்திருக்கின்றனர்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/kodaikanal-mercury-poisoning-treat-us-like-we-were-white-ta/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
Verizon பணிநீக்கம், மீனவர் போராட்டம், சங்க நடவடிக்கைகள்

நண்பர்களே, நமது சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் சனிக்கிழமை டிசம்பர் 14,  2017 அன்று நடைபெறும். இடம்: பெரும்பாக்கம் தேதி: 16-12-2017; நேரம்: 04: 00 PM to 06:00 PM...

ஐ.டி வேலை பறிப்பால் இன்னுமொரு உயிரிழப்பு!

Techie commits suicide தேஜஸ்வனி என்ற 25 வயது ஐ.டி ஊழியர் கொடிகஹல்லியில் உள்ள தனது ஃபிளாட்டில் வெள்ளிக் கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டார். 8...

Close