உலகம் முழுவதிலும் தொழிலாளர் உரிமைகளை நசுக்கும் முதலாளித்துவம்

2019 ஆம் ஆண்டில் மட்டும், மொத்தமுள்ள 145 நாடுகளில் 123 நாடுகள் வேலை நிறுத்தத்தைத் தடை செய்திருக்கிறது. இந்த நாடுகளில் கணிசமான எண்ணிக்கையில் தொழிற்துறை நடவடிக்கைகள் அதிகார வர்க்கத்தினரால் கொடூரமாக  அடக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் வேலை நிறுத்த உரிமையை பயன்படுத்தினால் வேலை நீக்கம், குற்றவியல் வழக்கு போன்றவற்றை எதிர்கொள்வதாக இருக்கிறது. ஆப்பிரிக்கா,அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள்/வட ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் வேலை நிறுத்தத்தை ஒடுக்குவதில் கடந்த ஆண்டு முதல்  அதிதீவிர முனைப்பில் ஈடுபட்டு வருகிறது”

 

உலகத்தில் எல்லா நாட்டிலும் தொழிலாளர்கள் உரிமைகள் அரசு மற்றும் நிறுவனங்களால் மதிக்கப்படுகிறதா? நீங்கள் எந்த நாட்டிற்குச் சென்றாலும் இல்லை என்பதே பதில். அனைத்து நாடுகளிலும் தொழிலாளர்கள் உரிமைகள் மீறப்படுவதோடு மட்டுமில்லாமல், இந்தப் போக்கு நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.

சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பு தனது 2019 ஆண்டிற்கான வருடாந்திர உரிமைகள் குறியீட்டை (GLOBAL RIGHTS INDEX) வெளியிட்டுள்ளது. இக்குறியீட்டின் முடிவுகள் கடந்த ஆண்டுகளை விட மிகவும் மோசமாக இருக்கிறது.

தொழிற்சங்கத்தை அமைப்பதற்கு தடை மற்றும் தொழிற்சங்கத்தில் இணையும் உரிமைகள் இல்லாத நாடுகளின் எண்ணிக்கை 2018ல் 92 ஆக இருந்தது. அதுவே 2019ல் 107 நாடுகளாக அதிகரித்து உள்ளது.

தொழிலாளர்கள்களின்  வேலைநிலைமைகளில் சிறந்து விளங்கக் கூடிய பிராந்தியமாக கருதப்படும் ஐரோப்பிய நாடுகளில் கூட தொழிலாளர்கள் சங்கமாக அணிதிரள்வதற்கு எதிர்ப்பு இருக்கிறது. அந்நாடுகளில் பூஜ்ய ஒப்பந்த நேரம், தற்காலிக  ஒப்பந்த தொழிலாளர்கள், போன்றவர்கள் சங்கமாக சேர்வதில் தடை விதிக்கப் படுகிறது. ஆன்லைனில் வேலை பார்க்கும் தொழிலாளர்களை சுய தொழில் செய்பவர்கள் என்று வகைப்படுத்துகிறார்கள்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிக இலாபத்திற்காக  தங்களுடைய ஊழியர்களிடமிருந்து எவ்வளவு உறிஞ்ச முடியுமோ அவ்வளவு உறிஞ்சுகிறார்கள் என்று சர்வதேச தொழிலாளர்கள் கூட்டமைப்பு தனது அறிக்கையில் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கிறது.

உலகளவில் புதிய தொழில்நுட்பமானது, முதலாளிகளிக்கு குறைந்தப்பட்ச தொழிலாளர் உரிமைகளை த் தொழிலாளர்களிடம்  இருந்து பறிப்பதில் வசதியும், தொழிலாளர் சட்டங்களிலிருந்து தொழிலாளர்களை விலக்குவதில் பல வழிமுறைகளையும்  ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. சமீப தொழில்நுட்ப முன்னேற்றங்கள், வேலைப்பிரிவினைகளை தனித்தனியே ஏற்படுத்துகிறது. இந்த தொழிற்நுட்பங்கள் மூலம் எங்கு வேண்டுமானாலும் வேலைகளை அமைக்க முடிகிறது. இதனால் நெகிழ்வுத்தன்மை என்ற போர்வையில் தொழிலாளர்கள் உரிமைகள் மறுக்கப்படுவதற்கான நிகழ்வுகள் அதிகரித்து இருக்கின்றன. இதனால் தொழிலாளர் சட்டங்கள் மறுக்கப்பட்டு குறைந்தப்பட்ச உரிமைகள் கூட இல்லாமல் போகிறது. உழைப்புச் சுரண்டலை எளிதாக்குவதில் எல்லா அரசுகளும் முதலாளிகளுக்கு உடந்தையாக இருப்பதன் மூலம் தொழிலாளர்களை முறை சாரா துறைகளில் வேலைப் பார்க்க நிர்ப்பந்திக்கிறது.

வளர்ந்து வரும் தொழில்நுட்பமானது, மிகவும் குறைந்த கூலிபெறும் தொழிலாளர்கள் வாழும் பகுதிகளுக்கு உற்பத்தியை இடப்பெயர்ச்சி செய்வதோடு  மட்டுமில்லாமல், தொழிலாளர் உரிமைகளை மிகவும் பலவீனப்படுத்துகிறது. சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பு தன் அறிக்கையில் உலக நாடுகளை ஒன்று முதல் ஐந்து வரை வரிசையாக வகைப்படுத்தியுள்ளது. இதில் ஒன்று என்றால் குறைவான அடக்குமுறை, ஐந்து என்றால் மிக அதிகமான அடக்குமுறை. ஆஸ்திரியா, டென்மார்க், பின்லாந்து, ஜெர்மனி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, இத்தாலி, நெதர்லாந்து, நார்வே, ஸ்லோவாக்கியா, சுவீடன் மற்றும் உருகுவே ஆகிய 12 நாடுகள் மட்டுமே ஒன்றில் இடம் பெற்றுள்ளன. இடையறாத அடக்குமுறையை மீறும் நாடுகள் என்று இந்த ஒன்று அட்டவணையில் இடம் பெற்றுள்ள நாடுகள் இடம்பெற்றுள்ளன. இதிலிருந்து இந்தப் புவியில் தொழிலாளர்களின் உரிமைகளை மீறாத நாடுகளே இல்லை என்பதுதான் உண்மை. சில நாடுகளுக்கு மதிப்பீடுகள் வழங்க முடியாமலும் இருக்கிறது.

சர்வதேச தொழிலாளர் கூட்டமைப்பின் தொழிலாளர் உரிமைகள் தரவரிசை;

இதில் சுவாரசியமான விசயமே என்னவென்றால், சிறந்த முதலாளித்துவ ஜனநாயகம் என்று பீற்றிக்கொள்ளப்படும் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவும் இத்தரவரிசையில் மிகவும் பின் தங்கியுள்ளன. வழக்கமாகவே உரிமைகள் மறுக்கப்படும் நாடுகளான மூன்றாம் தர அட்டவணையில் பிரிட்டன் இடம் பெற்றிருக்கிறது.  உரிமைகள் மறுக்கப்படும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா நான்காம் தரவரிசையில் உள்ளது. இதில் அமெரிக்கா பல வருடங்களாக நான்காம் தரவரிசையிலேயே இருக்கிறது. கடந்த 2017ல் பிரிட்டன் நான்காம் தரவரிசையில் இருந்தது. நான்காம் தரவரிசை என்று மதிப்பீடப்படும் ஒரு நாட்டில் அரசும், நிறுவனங்களும் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை அச்சுறுத்தி இல்லாமல் செய்வது, தொழிலாளர்களின் போராட்ட்ங்களை நசுக்குவது போன்றவற்றை  செய்து வருகின்றன. ஆனால் அந்நாடுகள் சுதந்திர நாடுகள் என்று தன்னை பிரகடனப்படுத்திக் கொள்கின்றன.

 

அந்த அறிக்கையின் தரவரிசைகள் :-

  1. அடிக்கடி தொழிலாளர் உரிமைகள் மறுக்கப்படும் நாடுகள் : இதில் 12 நாடுகள் இடம் பெற்றுள்ளன. இவை உலக வரைப் படத்தில் பச்சை நிறத்தில் இடம் பெற்றிருக்கின்றன.

 

  1. திரும்ப திரும்ப உரிமைகள் மறுக்கப்படும் நாடுகள் : இதில் ஜப்பான், பிரான்ஸ் ஆகியவற்றையும் சேர்த்து 24 நாடுகள் இடம் பெற்றிருக்கின்றன. இவை உலக வரைப் படத்தில் மஞ்சள் நிறத்தில் இடம் பெற்றிருக்கின்றன.

 

  1. வழக்கமாகவே உரிமைகள் மறுக்கப்படும் நாடுகள் : இதில் ஆஸ்திரேலியா, கனடா, ஸ்பெயினையும் ஆகியவற்றையும் சேர்த்து 26 நாடுகள் இடம் பெற்றிருக்கின்றன. இவை உலக வரைப் படத்தில் மெல்லிய ஆரஞ்சு நிறத்தில் இடம் பெற்றிருக்கின்றன

 

  1. அமைப்பு ரீதியாகவே உரிமைகள் மறுக்கப்படும் நாடுகள்: இதில் அர்ஜெண்டினா,சிலி, ஸ்பெயின் ஆகியவற்றையும் சேர்த்து 39 நாடுகள் இடம் பெற்றிருக்கின்றன. இவை உலக வரைப் படத்தில் அடர் ஆரஞ்சு நிறத்தில் இடம் பெற்றிருக்கின்றன.

 

  1. உரிமைகளுக்கு எந்தவித உத்தரவாதமற்ற நாடுகள் : பிரேசில், சீனா, கீரிஸ், இந்தியா போன்ற நாடுகளை சேர்த்து மொத்தம் 34 நாடுகள் இடம் பெற்றுள்ளன. இவை உலக வரைப் படத்தில் சிவப்பு நிறத்தில் இடம் பெற்றிருக்கின்றன

 

5+ சட்டத்தின் விதி மீறல்காரணமாக உரிமைகளுக்கு எந்தவித உத்தரவாதமற்ற நாடுகள் : லிபியா, சிரியா போன்ற நாடுகளையும் சேர்த்து மொத்தம் 9 நாடுகள் இடம் பெற்றுள்ளன. ( அடர் சிவப்பு நிறம்)

சர்வதேச தொழிலாளர் கூட்டமைப்பானது 163 நாடுகள் மற்றும் 331 அமைப்புகள் இணைந்ததாகும். சர்வதேச தொழிலாளர்களின் மாநாடுகளிலிருந்து பெறப்பட்ட 97 தரநிலைப் பட்டியல்களிலிருந்து இந்த அறிக்கையை தொகுத்து இருக்கிறது. இவ்வாறு நாடுகளை தரவாரியாக பிரிப்பது என்பது தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளான தொழிற்சங்க சுதந்திரத்திற்கான உரிமை, கூட்டு பேரம் பேசும் உரிமை, வேலை நிறுத்தம் செய்யும் உரிமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது என்று இந்த கூட்டமைப்பு தன்னுடைய அறிக்கையில் கூறுகிறது.

கடந்த ஆறு வருடங்களாக வெளிவரும் உலக நாடுகளின் உரிமைகளின் மீதான தரவரிசையானது மிகவும் மோசமாகிக் கொண்டிருக்கிறது என்று இந்த கூட்டமைப்பு கூறுகிறது.

2019 ஆம் ஆண்டில் மட்டும், மொத்தமுள்ள 145 நாடுகளில் 123 நாடுகள் வேலை நிறுத்தத்தைத் தடை செய்திருக்கிறது. இந்த நாடுகளில் கணிசமான எண்ணிக்கையில் தொழிற்துறை நடவடிக்கைகள் அதிகார வர்க்கத்தினரால் கொடூரமாக  அடக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் வேலை நிறுத்த உரிமையை பயன்படுத்தினால் வேலை நீக்கம், குற்றவியல் வழக்கு போன்றவற்றை எதிர்கொள்வதாக இருக்கிறது. ஆப்பிரிக்கா,அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள்/வட ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் வேலை நிறுத்தத்தை ஒடுக்குவதில் கடந்த ஆண்டு முதல்  அதிதீவிர முனைப்பில் ஈடுபட்டு வருகிறது”

ஆகவே உலமெங்கிலும் சமத்துவமின்மை அதிகரித்து வருதில் ஆச்சரியம் ஏதும் இருக்க முடியாது. வேலையில்லா திண்டாட்டம் என்பது அரசு தரும் புள்ளி விபரங்களை விட பல மடங்கு அதிகமாகவே உள்ளது. இன்னொருபுறம்அரசு தரப்பிலிருந்தே அறிவிக்கப்படும் பெறுநிறுவன வரி மோசடி அதிகரித்துக் கொண்டே வருகிறது. மனித வரலாற்றில், உலகமெங்கும் உழைக்கும் மக்கள் ஒரு தலைப்பட்சமான போரில் தொடர்ந்து இழப்பை மட்டுமே சம்பாதிக்கின்றனர்.

  • சின்ன மருது

 

செய்தி ஆதாரங்கள்: https://www.counterpunch.org/2019/10/04/capitalisms-triumph-labor-rights-violated-in-every-country-on-earth/

https://www.ituc-csi.org/IMG/pdf/2019-06-ituc-global-rights-index-2019-report-en-2.pdf

Permanent link to this article: http://new-democrats.com/ta/labor-rights-violation-in-every-country/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
18-ம் நூற்றாண்டின் வாரன் பஃபெட் – பங்குச் சந்தை முன்னோடி ஜான் லோ

இன்றைக்கு 300 ஆண்டுகளுக்கு முன்பு பாரிஸ் நகரத்தில் ஆரம்பிக்கப்பட்ட மிசிசிப்பி கம்பெனிதான் உலகின் முதல் பொது பங்கு நிறுவனம். அப்போது பிரான்சுக்கு சொந்தமான மிசிசிப்பி பள்ளத்தாக்கில் மக்களை...

மார்க்சைப் பார்த்து அலறும் முதலாளி வர்க்கம்

"ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் ஒரு நிலைப்பாட்டைத் தேர்ந்தெடுத்து அந்த நிலை அவர் மனிதகுலத்திற்கு சிறந்த முறையில் சேவை செய்வதற்கு இடமளிக்குமானால் அவர், தான் என்றும் தற்பெருமையுடன்...

Close