BPO-ல் சம்பள வெட்டு, மோசமான பணியிட நிலைமை – எதிர்ப்பு கடிதம்

சென்னையைச் சேர்ந்த ஒரு பி.பி.ஓ நிறுவன ஊழியர்கள் நமது யூனியனுக்கு அனுப்பிய கடிதத்தை நிறுவனத்தின் பெயரையும் ஊழியர் பெயரையும் நீக்கி விட்டு வெளியிடுகிறோம். இது தொடர்பாக நிறுவனத்துக்கு நமது யூனியன் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. நிறுவனம் இந்த பிரச்சனைகள் மீது நடவடிக்கை எடுக்கா விடில் அடுத்த கட்ட நடவடிக்கையாக பெயரை வெளியிட்டு, சட்ட ரீதியான தீர்வுகளை நாடுவதற்கு ஊழியர்கள் தயாராக உள்ளனர்.

பி.பி.ஓ ஊழியர்கள் தாம் எதிர்கொள்ளும் பணியிட பிரச்சனைகளை எங்களுக்கு எழுதும்படி கேட்டுக் கொள்கிறோம்.

வணக்கம்!

நாங்கள் COMPANY நிறுவனத்தில் வேலை செய்து வருகிறோம். இந்த நிறுவனத்தில் நாங்கள் செய்யும் வேலை Tele Caller Agent எனும் வேலை ஆகும். இந்த நிறுவனத்தில் DIV1 மற்றும் DIV2 என்று இரண்டு பிரிவுகள் உள்ளன. இரண்டிலும் ஒரே மாதிரியான BPO வேலைகளே நடைபெறுகிறது.

இதுவரை இந்த நிறுவனத்தில் வேலை செய்தவர்களுக்கு ESI, PF என்று எதுவுமே கிடையாது. இது ஒரு US Based நிறுவனம். இங்கே அமெரிக்காவில் உள்ள மக்களுக்கு வேலை வாங்கித் தருவதாக பேசி அவர்களை படிப்பில் சேர்த்துவிடுகின்ற (Education Process – Semi Voice) வேலை இரவில் நடைபெறுகிறது.

இதில் இதுவரை வேலை செய்தவர்களுக்கு அவர்கள் செய்யும் வேலைகளில் QC Reject விழுந்தாலோ அல்லது DNC விழுந்தாலோ அதற்கான நட்டத்தை கம்பெனியே எதிர்கொள்ளும். ஆனால் இந்த மாதம் QC Reject மற்றும் DNC இவற்றால் ஏற்படும் இழப்பிற்கு நிறுவனத்தில் வேலை செய்யும் ஏஜெண்டுகளின் சம்பளத்தில் பிடித்தம் செய்கிறது. சிலருக்கு 200, சிலருக்கு 300 இன்னும் சிலருக்கு 500 அதிகபட்சமாக ஒருவருக்கு 2500 வரை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் வேலை செய்யும் ஏஜெண்டுகளின் மாத சம்பளம் 8000 ரூபாய் சனி ஞாயிறு விடுமுறை ஐந்து நாட்கள் வேலை முறை. அமெரிக்காவில் விடுமுறை என்றால் மட்டுமே விடுமுறை இங்கே இந்திய பண்டிகைகளுக்கு விடுமுறை கிடையாது.

இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய அளவில் பணத்தை ஏஜெண்டுகளின் சம்பளத்தில் இருந்து திருடி உள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே அனைவரிடமும் QC Reject போட்டாலோ அல்லது DNC போட்டாலோ உங்களுடைய சம்பளத்தில் இருந்து பணம் பிடிக்கப்படும் என்று எச்சரிக்கை செய்தது. இப்போது அதை செய்துவிட்டது.

இதற்கு முந்தைய மாதங்களில் எல்லாம் இப்படி செய்தது கிடையாது. இந்த மாதம் மட்டும் இப்படி நடந்துள்ளது இனிவரும் மாதங்களிலும் இப்படித்தான் நடக்கும் என்கிறது நிறவனம்.

இந்த பிரச்சனையை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை ஒன்றிரண்டு பேர் சென்று மேனேஜ்மென்டிடம் கேட்கலாம் என்றால் எல்லாம் வெளியூரிலிருந்து இங்கு தங்கி வேலை செய்பவர்கள் அதிகம் என்பதால் அச்சப்படுகிறார்கள். பலர் கேட்பதற்கு பயந்து வேலையை விட்டு நின்று விட்டார்கள். இந்த சம்பவம் நடந்த அன்று (10-1-2019) சிலர் பாதியிலேயே நிறுவனத்திலிருந்து வெளியேறிவிட்டனர். இன்று (11-1-2019) இன்னும் சிலர் நின்று விட்டனர். இப்போது 60 பேர் மட்டுமே இங்கு வேலை செய்கின்றனர். இருப்பினும் அவர்கள் குடும்பச்சூழல் காரணமாகவும், வறுமை காரணமாகவும் இந்த நிறுவனத்தில் உடனடியாக வெளியேற முடியாமல் வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.

இதைத்தாண்டி இன்னும் பல்வேறு பிரச்சினைகள் இந்த நிறுவனத்தில் இருக்கின்றன. ஏஜென்டுகளுக்கு மட்டும் சரியாக ஏசி வேலை செய்வது இல்லை. இதை பலமுறை அவர்களிடம் புகார் அளித்தும் அவர்கள் சரி செய்வது கிடையாது. ஆனால் ஆப்பரேட்டிங் மேனேஜர், ஹெச் ஆர் மேனேஜர், CEO இவர்களுடைய அறையில் ஏசி சரியா வேலை செய்கிறது. சுமார் ஆறு, ஏழு மாத போராட்டத்திற்கு பிறகு மின்விசிறிகள் பொருத்தப்பட்டது. அதவும் அங்கு வேலை செய்யும் அனைவருக்கும் அது போதுமானதாக இல்லை. பலர் புழுக்கத்தில் பத்திரிக்கை அட்டைகளை வைத்து விசிரிக்கொண்டு வேலை செய்கின்றனர். கொசு தொல்லை உள்ளது இதற்கு அவர்கள் All Out வழங்குகிறார்கள் அதுவும் தினந்தோறும் கிடையாது; பல நாட்களில் அவர்களிடம் சண்டை போட்டு தான் இந்த All Out வாங்க வேண்டியுள்ளது. வேலை செய்யும் இடமும் தூய்மையாக இருப்பது இல்லை அதற்கு முறையான நபர்களை பணியில் அமர்த்துவது இல்லை அப்படி அமைந்தாலும் அவர்களுக்கு சரியான ஊதியம் கொடுப்பது இல்லை. கழிவறைகளை தூய்மையாக வைப்பதில்லை வெறும் மூன்றே மூன்று கழிவறைகள் மட்டுமே உள்ளது. ஆனால் இங்கு வேலை செய்கின்ற நபர்களின் எண்ணிக்கை அதிகம். சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இந்த மூன்று கழிவறைகள் போதுமானதாக இல்லை. ஆனால் அதையெல்லாம் இங்கே வேலை செய்யும் ஏஜென்டுகள் அதாவது எம்ப்ளாயீஸ் அவர்கள் பரவாயில்லை சமாளித்துவிடலாம் என்று இருக்கின்றனர்.

ஆனால் சம்பளத்தை பிடித்ததை சமாளிக்க முடியவில்லை. அதனாலேயே யாரிடமாவது உதவி கேட்கலாம் என்கின்ற முறையில் இந்த செய்தியை பதிவு செய்கிறோம். மேற்கொண்டு இந்த பிரச்சனையை எப்படி அணுகுவது என்கின்ற அனுபவமும் எங்களுக்கு கிடையாது என்கிற முறையிலேயே இந்த செய்தியை உங்களுக்கு தெரியப் படுத்துகிறோம். மேற்கொண்டு இந்த பிரச்சனையை எப்படி கொண்டு செல்ல வேண்டும், அணுக வேண்டும் என்கின்ற தங்களின் மேலான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/letter-against-pay-deduction-and-bad-working-condition-in-bpo-ta/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
அக்டோபர் 1 சீனப் புரட்சியை நினைவு கூர்வோம்!

"மேக் இன் சீனா" என்பதோடு நில்லாமல், தாம் உற்பத்தி செய்யும் பொருட்களின் தொழில்நுட்பத்தை கற்றுக் கொண்டு மாற்று பொருட்களை உருவாக்கும் வல்லமையும் சீனாவிற்கு உண்டு என்று நம்...

அப்ரைசலை எப்படி கவனமாக கையாள வேண்டும்?

அப்ரைசல் என்பது விஞ்ஞான பூர்வமானது இல்லை என்றும் இந்த முறையை மாற்ற வேண்டும் என்ற குரல்கள் கேட்கத் தொடங்கி விட்டன. ஆனால் எனது தந்தை அடிக்கடி கூறும்...

Close