திருட்டுத்தனமாக ஊழியர்களை தாக்கும் காக்னிசன்ட் (CTS) நிர்வாகம்

செலவுகளைக் குறைத்து லாபவீதத்தை அதிகரிக்க 6,000 முதல் 20,000 ஊழியர்களை வேலையிலிருந்து தூக்க, காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் (சி.டி.எஸ்) முடிவு செய்திருக்கிறது என்ற செய்தியைத் தொடர்ந்து ““ஊழியர்களின் ஊதியத்தைத் திருடும், ஆயிரக்கணக்கில் ஆட்குறைப்பு செய்யும் சி.டி.எஸ்”” என்ற தலைப்பில் மார்ச் 21-ம் தேதி ஒரு பதிவு வெளியிடப்பட்டது. இந்தப் பதிவு சமூக வலைத்தளங்களிலும், இணையத்திலும் பரவலாக பகிரப்பட்டு படிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இது தொடர்பாக நிறுவனத்திடம் விளக்கம் கோரி பின்வரும் கடிதம் நமது சங்கம் சார்பாக மின்னஞ்சலிலும் (27-03-2017), பதிவு தபாலிலும் (28-03-2017) அனுப்பி வைக்கப்பட்டது. பதிவு தபால் 29-03-2017 அன்று வழங்கப்பட்டு விட்டதாக தபால்துறை உறுதி செய்திருக்கிறது.

=======

To
The Chief Executive Officer,
Cognizant Technology Solutions,
#5/535, Old Mahabalipuram Road,
Okkiam -Thoraipakkam, Chennai 600 096
Tel: +91-44-42096000 Fax: +91-44-42096060

Dear Sir,

Sub : Seeking clarification regarding news reports suggesting deductions in variable pay and retrenchment of thousands of employees.

New Democratic Labour Front (NDLF) is a trade union functioning in Tamil Nadu and Puduchery for the past 20 years. After working among IT employees in Tamil Nadu for several years, we started IT Employees Wing of our union in January 2015. Employees from IT/ITES companies are members of our union.

We successfully appealed to the Tamil Nadu government to clarify that all state and central labour laws are applicable to IT companies and IT employees are entitled to form unions and seek redressal for their grievances under Industrial Disputes Act 1947.

We filed various legal cases on behalf of our union members on issues such as mass retrenchments without following due process, illegal increase of working hours, deduction of pay under appraisal system, and recruitment scams by HR departments of IT companies. Further, we have been campaigning among IT employees to create awareness about their rights under Indian laws such as right to form union, right to collective negotiation, right to job security, working hours within legal limits so on.

Recently, members of our union and IT employees in general were perturbed by news reports suggesting that CTS is in the process of retrenching 6,000 – 10,000 employees citing performance issues. It is also reported that the variable pay, which rightfully belongs to the employees is cut arbitrarily.

Are these news items published with your knowledge and approval? If the news of mass retrenchment is true, we request you to clarify the relevant section of Indian laws under which you are carrying out retrenchments. If the news is not true, please issue a statement denying these reports to our union or to the public media.

Media reports suggesting that thousands of employees are identified for retrenchment have caused severe mental distress to employees and their families. Your clarification will provide solace to all these employees and help them to discharge their work duties in a peaceful state of mind.

We await your reply at the earliest.

Thanking you!

Your sincerely,

S Karpaga Vinayagam,
Organizer, IT Employees Wing,
New Democratic Labour Front, Tamil Nadu

Chennai
March 23, 2017

==========
ஆனால், இன்று வரை சி.டி.எஸ் நிர்வாகத்திடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

இதற்கிடையில் பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவும், Forum For IT Employees (F.I.T.E) மற்றும் Knowledge Professionals Forum (KPF) இணைந்து சி.டி.எஸ் நிர்வாகத்தை எதிர்த்து பிரச்சாரம் என்று முடிவு செய்யப்பட்டு தமிழிலும் ஆங்கிலத்திலும் பிரசுரம் எழுதி வினியோகிக்கப்பட்டு வருகின்றது.

படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்

ஆயிரக்கணக்கான ஊழியர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் முடிவு எடுத்திருக்கும் சி.டி.எஸ் நிர்வாகம் அது குறித்து ஊழியர்களிடம் நேரடியாக பேசி கலந்தாலோசிக்காமல், செய்தித் தாள்களில் தகவலை கசிய விடுவது, இது ஆண்டுதோறும் நடக்கும் விஷயம்தான் என்று பெயர் சொல்லாமல் அறிவிப்பது என்று திருட்டுத்தனமாக நடந்து கொள்கிறது.

சி.டி.எஸ் மட்டுமின்றி அனைத்து ஐ.டி நிறுவனங்களும் தமது ஊழியர்களை மதித்து வெளிப்படையாக நிர்வாகத்தை நடத்த வைக்க தொழிற்சங்கமாக இணைந்து நாம் நடத்தும் ஒருங்கிணைந்த போராட்டங்கள்தான் வழிவகுக்கும்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர் பிரிவு

More from New Democrats

Permanent link to this article: http://new-democrats.com/ta/letter-to-cts-from-ndlf-on-layoffs-ta/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
தனியார் “தரம்” – அப்பல்லோ மருத்துவமனையின் அட்ராசிட்டி

நோயாளியின் தேவையை விட, அவரது பணம் கட்டும் திறமைதான் சிகிச்சையை தீர்மானிக்கிறது. பணம் கட்ட முடியாதவர்கள் உடனடி சிகிச்சை தேவைப்படுபவர்களாக இருந்தாலும், அந்த சிகிச்சை மருத்துவமனையில் இருந்தாலும்...

திருடுவதே வெற்றியின் இரகசியம்!

மொத்தத்தில் நம் நாட்டை ராட்சச மலைப்பாம்பு போல் சுற்றி வளைத்து நெருக்கிக் கொண்டிருக்கும் இந்தக் குடும்பம். இதெல்லாம் எப்படி சாத்தியமானது?

Close