திரிபுராவில் லெனின் சிலையை உடைத்தது போல் தமிழ்நாட்டில் பெரியார் சிலையை உடைப்போம் என்று ‘எச்ச’ ராஜா சொன்னது தான் சொன்னார், தமிழகம் முழுக்க கிளம்பிய எதிர்ப்பைக் கண்டு அடுத்த நாளே அதற்கு “அட்மினை” பலிகொடுக்க வேண்டியதாயிற்று.
இதற்கிடையே, புதுக்கோட்டையில் ஒரு திருட்டு கும்பல் பெரியார் சிலையின் தலையை உடைத்து எறிந்திருக்கிறது. சட்டம் ஒழுங்கை காப்பாற்றுகிறோம் என்று புலம்பும் எடப்பாடி அரசோ, வி.எச்.பி-யின் ர(த்)த யாத்திரைக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுப்பதில் பிசியாக உள்ளது.
பா.ஜ.க கும்பல் ஆட்சிக்கு வந்த நாள் முதலே தமிழகத்தின் மீது வன்மம் கொண்டு இந்தித்திணிப்பு, ஹைட்ரோகார்பன், கெயில் என்று மக்கள் விரோத திட்டங்களை திணித்து வருகிறது. மறுபுறம் எப்படியாவது சாதிக்கலவரத்தையோ, மதக்கலவரத்தையோ இங்கே ஏற்படுத்த சங்கப் பரிவாரங்கள் எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகின்றன. அந்த நிகழ்ச்சிப்போக்கில் இப்போது பெரியாரையும் இழுத்து விவாதத்தைக் கிளப்ப முயற்சிக்கிறார்கள்.
எச்.ராஜாவின் பேச்சுக்கு களத்தில் எழுந்த எதிர்ப்பைக் காட்டிலும் பெரும் அளவில் சமூக வலைதளங்களில் தமிழர்கள் கொத்தி எடுத்துவிட்டார்கள். பெரியாரின் கருத்துக்கள் மீம்ஸ்-களாகவும் ஸ்டேட்டஸ்-களாகவும் வலம் வந்தன. பெரியாரின் கருத்துக்களை முன்பை விட இளம் தலைமுறையினர் இன்று அதிகம் தேடுகிறார்கள் என்பதற்கு “பெரியார் இன்றும் என்றும்” என்ற விடியல் பதிப்பகம் கொண்டு வந்த வெளியீடு ஆயிரக்கணக்கில் விற்றதும் ஒரு சான்றே.
அதே நேரத்தில் பெரியார் பற்றிய அவதூறுக் கருத்துக்களை, அவர் சொன்னவற்றை திரித்துக் கூறி வாட்சப் முழுக்க பரப்பி வருகின்றனர். அந்த அவதூறுகளை மறுத்து உண்மையை விளக்குகிறது இந்த வீடியோ.
நன்றி: விகடன்
பார்ப்பனியத்தை ஒழிப்பதற்கு பெரியாரை நாம் இன்னும் முழுமையாக ஆழ்ந்து படிக்க வேண்டியிருக்கிறது. படிப்போம்!