தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வராக் கடன் ரூ 6.8 லட்ச கோடி. அதில் 70% பெருநிறுவன கடன், வெறும் 1% விவசாயக் கடன். 2012-2015-ல் ரூ 1.14 லட்சம் கோடி பெருநிறுவன கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் ரூ 4 லட்சம் கோடி தள்ளுபடி செய்யப்படலாம்.
- பூஷன் ஸ்டீல் வராக் கடன் ரூ 44,478 கோடி, பஞ்சாப் மாநில மொத்த விவசாய வரா கடன் மதிப்பீடு ரூ 36,000 கோடி.
- ஜிண்டால் ஸ்டீல் & பவர் வரா கடன் ரூ 44,140 கோடி; இது உத்தர் பிரதேச மாநிலத்தின் விவசாய வராக் கடன் மதிப்பீட்டை விட அதிகம்.
- மகாராஷ்டிரா மாநிலம் ரூ.30,500 கோடி விவசாய கடன் தள்ளுபடியை கோருகிறது. இது எஸ்ஸார் ஸ்டீல் வராக் கடன் ரூ. 34,929 கோடியை விடக் குறைவு.
பத்திரிகைகளில் வாராக் கடன் தள்ளுபடி எவ்வாறு தொழிற் சூழலுக்கு முதலீடுகளுக்கு நல்லது என்று எத்தனை கட்டுரைகள் இருக்கின்றன என்று தேடிப்பாருங்கள். முதலீட்டாளர்கள் கடன் தள்ளுபடிகளை நல்ல அறிகுறிகளாக பார்த்து அதன் மூலம் முதலீடுகளைக் கொண்டு வந்து கொட்டுவார்கள் என்று மட்டும் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் இருக்கும். வேளாண் கடன் தள்ளுபடி நியாயமில்லாதது என்று இதே லாபிகள் கட்டுரைகள் எழுதித் தள்ளுகின்றன.
(ஃபேஸ்புக்கில் இருந்து)