Lycatech சென்னை ஈக்காட்டுத்தாங்கலிலும், Plintron global technology DLF IT Park லும் அமைந்திருக்கும் மென்பொருள் நிறுவனங்கள் ஆகும். Lyca குழுமத்தின் நிறுவனங்களான Lyca Mobile மற்றும் பல நிறுவனங்களுக்கான மென்பொருள் சேவை Lycatech மற்றும் Plintron global technology மூலமாக செய்து கொடுக்கப்படுகிறது.
இந்நிறுவனங்கள் கடந்த ஒரு மாத காலமாக ஒவ்வொரு வாரமும் ஊழியர்களை அதிரடி வேலைநீக்கம் (கட்டாய பணி விலகல்) செய்து வருகின்றன. கடந்த ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான ஊழியர்களை கட்டாய பணி விலகல் (Forced Resignation) மூலம் வெளியேற்றியிருக்கின்றன.
எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீரென ஊழியர்களின் இடத்துக்கு நேரடியாக வந்து ராஜினாமா கடிதத்தில் கையெழுத்துப் பெற்றுக்கொண்டு, வெளியே அனுப்பி விடுகிறார்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் இக்கோர சம்பவம் கடந்த ஒரு மாத காலமாக நடந்து வருகிறது என்று அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கூறுகின்றனர்.
இந்த நிறுவனத்தின் முதலாளி யாரென்று தெரிகிறதா? நம்ம ஷங்கர் மற்றும் ‘சிஸ்டம் சர்வீஸ் சென்டர் ஃபேமஸ்’ ரஜினி கூட்டணியில் தயாராகும் 2.0 (எந்திரன் இரண்டாம் பாகம்) படத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பு நிறுவனமான Lyca Production மற்றும் Lyca Mobile-ன் நிறுவனர் சுபாஸ்கரன் அல்லிராஜா ஆவார்.
ரஜினிகாந்த் அவர்களுக்கு பல கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கும் நீங்கள், சில கோடி ரூபாய் மட்டும் தான் கொடுக்க முடியும் என்று சொல்லுங்கள், அதன் பின் உங்கள் நிதிச்சுமை தானாகவே சரி ஆகிவிடும், உங்கள் நிறுவனத்திற்காக உழைக்கும் ஊழியர்களின் பணியும் பாதுகாக்கப்படும்.
லைக்கா டெக் / பிளின்ட்ரான் குளோபல் டெக்னாலஜி ஊழியர்களே!
கட்டாய ராஜினாமா/வேலைப் பறிப்பை எதிர்கொள்ள நமக்கு சட்டத்தின் துணை உள்ளது.
- இது தொடர்பாக தொழில் தகராறு சட்டம் பிரிவு 2K-ன் கீழ் தொழிற்தாவா தாக்கல் செய்தால், அந்த வழக்கு முடிவது வரை வேலையை விட்டு நீக்க முடியாது என்ற சட்ட பாதுகாப்பு உள்ளது.
- நிறுவனம் பணிக்கொடை தொகையை நிறுத்தி வைத்து விடும், பணி அனுபவ கடிதம் தராது போன்றவை எந்த அடிப்படையும் இல்லாத பயங்கள்.
மேலும் விபரங்களுக்கு ஐ.டி வாழ்க்கை என்ற ஆட்குறைப்பும் ஊழியர்கள் உரிமையும் பற்றிய கட்டுரைத் தொடரை பார்க்கவும்.
உடனடியாக, நமது சங்கத்தை தொடர்பு கொண்டு கட்டாய ஆட்குறைப்பை தடுத்து நிறுத்துவோம்.
தொலைபேசி – 9003009641
மின்னஞ்சல் – combatlayoff@gmail.com