ஐ.டி துறையில் சட்டப்படி ஆட்குறைப்பு (Retrenchment) எப்படி நடக்க வேண்டும்?

மீப ஆண்டுகளில் தமது லாப வீதத்தை தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கும் ஐ.டி நிறுவனங்களின் முக்கியமான ஒரு உத்தி, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஊழியர்களை ‘பேப்பர் போட்டு விட்டு’ போகும்படி வற்புறுத்துவது. அப்படி வேலையை விட்டு போன ஊழியர் “தானாக முன் வந்து வேலையை ராஜினாமா” செய்தார் என்று பதிவு செய்து கொள்கிறார்கள்.

உண்மையில் தொழில்நுட்ப மாற்றத்தினாலோ, புராஜக்ட் குறைந்ததாலோ, ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டுமானால், அதை ஒரு ஐ.டி நிறுவனம் எப்படி செய்ய வேண்டும் என்பதற்கு இந்திய தொழில் தகராறு சட்டம் தெளிவான வழிகாட்டல்களை கொடுத்திருக்கிறது.

சட்டத்தை பின்பற்றினால், விப்ரோ பிரேம்ஜியும், டி.சி.எஸ் டாடாவும், இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி தமது பல கோடி சொத்தில் கணிசமான பகுதியை ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கும். அது அவர்களது முதலீட்டாளர்களின் மனதை கோண வைத்து விடும். எனவேதான், ஊழியர்களை வேலையை விட்டு தூக்கி எறிகிறார்கள்.

சட்டத்தை தெரிந்து கொள்வோம், ஐ.டி நிறுவனங்களின் அடாவடியை எதிர்த்து நிற்போம்.

ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு முக்கிய காரணம்

தொழிற்சாலையில் பல்வேறு (ஆலைமூடல், தொழில் நஷ்டம், புதிய நவீன எந்திரங்களின் பயன்பாடு போன்ற) காரணங்களுக்காக மேற்கொள்ளப்படும் சிக்கன நடவடிக்கையின் விளைவாக ஏற்கனவே பணியாற்றி வரும் தொழிலாளர்களில் உபரியாக கருதப்படும் தொழிலாளர்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக பணியிலிருந்து நிரந்தரமாக ஆட்குறைப்பு நடவடிக்கை மூலம் விடுவிக்கப்படுகின்றனர்.

ஆட்குறைப்பு நடவடிக்கையில் கடைசியாக பணியில் சேர்ந்த தொழிலாளர்தான் முதலில் விடுவிக்கப்பட வேண்டும். அவ்வாறில்லாமல் ஆட்குறைப்பு என்ற பெயரில் குறைந்த காலம் பணியில் சேர்ந்த தொழிலாளரை பணியில் வைத்துக் கொண்டு நீண்ட காலம் பணிபுரிந்த தொழிலாளரை பணியிலிருந்து விடுவிக்கக் கூடாது. (Last Come First Go) என்று இதனைக் குறிக்கலாம்.

பெரிய ஆலைகளில் ஆட்குறைப்பு செய்யப்படும்போது பின்பற்றப்பட வேண்டிய முன் நிபந்தனைகள்

ஓராண்டு அல்லது அதற்கு அதிகமாக பணிபுரிந்த தொழிலாளர்களை ஆட்குறைப்பு செய்யப்படும் போது கீழ்க்கண்ட விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

இதுபற்றி பிரிவு 25N விளக்குகிறது.

சராசரியாக 100 தொழிலாளர்கள் அல்லது அதற்கு மேல் பணிபுரியும் ஆலைகள், சுரங்கங்கள், மலைத்தோட்ட தொழில்கள் ஆகியனவற்றில் (பருவகால ஆலைகள், தொடர்ச்சியின்றி செயல்படும் ஆலைகளைத் தவிர்த்து) ஓராண்டு அல்லது அதற்கு அதிகமாக பணிபுரிந்த தொழிலாளர்களை ஆட்குறைப்பு செய்யப்படும் போது கீழ்க்கண்ட விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

 1. (a) ஆட்குறைப்பிற்கான காரணங்களைக் குறிப்பிட்டு சம்பந்தப்பட்ட தொழிலாளருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே எழுத்துப்பூர்வமான அறிவிப்பு வழங்கியிருக்க வேண்டும் அல்லது அதற்குப்பதிலாக மூன்றுமாத காலத்திற்கான சம்பளத்தினை வழங்கியிருக்க வேண்டும்.
  (b) உரிய அரசிடமிருந்து ஆட்குறைப்பு செய்யும் நடவடிக்கைக்கு முன்னனுமதி பெற்றிருக்க வேண்டும்.
 2. ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு மேற்படி உட்பிரிவு 1-ன் கீழ் உரிய முன்னனுமதி கோரி அதற்கான காரணங்களைத் தெரிவித்து உரிய அதிகாரிக்கு குறிப்பிட்ட வகையில் விண்ணப்பிக்க வேண்டும். மேற்படி விண்ணப்பத்தின் நகலினை தொழிலாளர்களுக்கு/ தொழிற்சங்கத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
 3. மேற்படி அனுமதி கோரிய விண்ணப்பத்தின் மீது உரிய அதிகாரி விசாரணை நடத்த வேண்டும். மேற்படி விசாரணை முதலாளி, தொழிலாளி ஆகிய இரு தரப்பினரும் மற்றும் இது தொடர்பாக அக்கறை உடைய நபர்கள் இருந்தால அவர்களுக்கும் தங்களின் வாதங்களை முன் வைக்க போதிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். சரியான காரணங்கள் இருந்தால் மட்டும் அனுமதி வழங்கப்பட வேண்டும் இல்லையெனில் மறுக்கப்பட வேண்டும். மேற்கூறிய உத்தரவு எழுத்துப்பூர்வமாக இருதரப்பினருக்கும் ஒரே நேரத்தில் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
 4. உரிய அரசிடமிருந்து விண்ணப்பம் அளிக்கப்பட்டு 60 நாட்களுக்கு மேல் எவ்வித தகவலும் வராதபட்சத்தில் உரிய அரசு ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு முன்னனுமதி அளித்ததாக கொள்ளப்படலாம்.
 5. நடவடிக்கைக்கு முன்னனுமதி வழங்குவது தொடர்பான உரிய அதிகாரியின் உத்தரவு இறுதியானது மற்றும் இருதரப்பினரையும் கட்டுப்படுத்தக் கூடியது. மேற்படி உத்தரவு ஓராண்டு காலம் வரை அமலில் இருக்கும்.
 6. நடவடிக்கைக்கு முன்னனுமதி வழங்குவது தொடர்பாக உத்தரவிட்ட அதிகாரி தானாகவோ, தொழிலாளர் / முதலாளி வேண்டுகோளின் பேரிலோ, தான் ஏற்கனவே வழங்கிய உத்தரவினை மறுஆய்வு செய்யவோ அல்லது தொழிலாளர் தீர்ப்பாயத்திற்கு அனுப்பவோ அதிகாரம் பெற்றுள்ளார்.
  தொழிலாளர் தீர்ப்பாயத்திற்கு விசாரணைக்கு அனுப்பப்பட்டால் 30 நாட்களுக்குள் தீர்க்கப்பட வேண்டும்.
 7. உரிய அரசினால் அனுமதி மறுக்கப்பட்டு அதனை மீறி செயல்படுத்தப்படும் அல்லது உரிய அரசிடம் விண்ணப்பம் அனுப்பாமல் செயல்படுத்தப்படும் ஆட்குறைப்பு நடவடிக்கை சட்டவிரோதமானது. மேலும் தொழிலாளர்கள் அனைவரும் வழக்கம்போல் அனைத்துப் பயன்களையும் வழங்கப்பெற வேண்டியவர்கள்.
 8. அசாதாரமான சூழ்நிலைகள் காரணமாக உரிய அரசு ஆட்குறைப்பு நடவடிக்கைகள் செய்யும்போது உட்பிரிவு 1ன் கீழ் உரிய முன்னனுமதி பெறுவதில் சில தொழிற்சாலைகளுக்கு விலக்களிக்கலாம். (முதலாளியின் திடீர் மரணம், பெரிய அளவிலான விபத்து போன்றவை)

இதன் கீழ் முன்னனுமதி பெற்றபின் செய்யப்படும் ஆட்குறைப்பு நடவடிக்கையினால் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு மேற்படி உட்பிரிவு 4-ன் கீழ் ஆட்குறைப்பு செய்யப்படும் தொழிலாளிக்கு அவரது 15 நாட்கள் சாரசரி சம்பளத்திற்கு சமமான தொகையை பணியாற்றிய ஒவ்வொரு முழு ஆண்டிற்கும் அல்லது 6 மாதத்திற்கு இழப்பீடாக வழங்கப்பட வேண்டும்.

ஆட்குறைப்பு செய்யப்பட வேண்டிய முறை

இதுபற்றி பிரிவு 25G விளக்குகிறது.

 1. ஆட்குறைப்பு செய்யப்படும் போது கடைசியில் வேலைக்கு சேர்ந்தவர் முதலில் ஆட்குறைப்பு செய்யப்பட வேண்டும். பணிமூப்பு அதிகமாக உள்ள தொழிலாளர்களை விட்டுவிட்டு பணிமூப்பு குறைந்த தொழிலாளர்களையே முதலில் ஆட்குறைப்பு செய்ய வேண்டும்.
 2. தொழிலாளர்களிடையே பணிமூப்பினை நிர்ணயம் செய்யும் போது அவர்கள் சம்பந்தப்பட்ட குறிப்பட்ட வகை பிரிவு தொழிலாளர்களிடையே மட்டுமே பணிமூப்பு நிர்ணயிக்கப்பட்ட வேண்டும். ஆலையின் அனைத்து தொழிலாளர்களுக்கும் மொத்தமாக நிணயிக்கக்கூடாது.
 3. ஆட்குறைப்பு செய்யப்படும் நபர் இந்தியக்குடிமகனாக இருக்க வேண்டும், தொழிலாளி என்ற வரையறையினுள் வருபவராக, ஆலையில் பணிபுரிபவராக இருக்க வேண்டும்.

மேற்கூறிய முறையில் ஆட்குறைப்பு செய்யப்படவில்லையெனில் அதற்கான காரணங்களை முதலாளி எழுத்துப்பூர்வமான முறையில் முன்னனுமதி பெற்றிருக்க வேண்டும்.

ஆட்குறைப்பு செய்யப்பட்ட தொழிலாளிக்கு மீண்டும் பணிவழங்குவதில் முன்னுரிமை

இதுபற்றி பிரிவு 25H விளக்குகிறது.

ஆட்குறைப்பு செய்யப்பட்ட தொழிலாளர் அதே ஆலையில் மீண்டும் வேலைக்கு தேவை ஏற்படும் போது பணி வழங்குவதில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். ஆனால் அத்தகைய வேலை அவர் ஏற்கனவே பணியாற்றிய பிரிவில் தேவையானதாக இருக்க வேண்டும்.

சட்டவிரோதமான ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு தண்டனை – (இது பற்றி பிரிவு 25Q விளக்குகிறது)

பிரிவு 25Nக்கு முரணான வகையில் ஆட்குறைப்பு செய்யப்பட்டால சம்பத்தப்பட்ட முதலாளிக்கு ஒருமாத கால அளவிற்கு மிகாத சிறை தண்டனையோ, ரூ.1000 க்கு மிகாத தண்டமோ அல்லது இரண்டுமோ வழங்கப்படலாம்.

இதைத் தவிர, எது எல்லாம் ஆட்குறைப்புக்குள் வராது, சிறு நிறுவனங்களில் ஆட்குறைப்புக்கு என்னென்ன விதிமுறைகள் போன்ற பிரிவுகளும் சட்டத்தில் உள்ளன.

More from New Democrats

Permanent link to this article: http://new-democrats.com/ta/mandatory-requirements-for-retrenchment-in-india-ta/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
ஆண்களின் அடிமைகளா பெண்கள் – ஒரு ஐ.டி ஊழியரின் குமுறல்!

இயற்கையாக தாய்மை பேறு உடைய பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு இயல்பானது. இதனால் இறைவனின் புனிதம் கெடும், மனித குலத்தைப் பாதிக்கும் என்று பேசும் இவர்கள் என்னதான் கல்வியறிவு...

ஆட்குறைப்புக்கு எதிராக NDLF-ல் அணிதிரண்ட விப்ரோ ஊழியர்கள் – தொழிலாளர் கூடம்

“அவர்கள் பிறந்த தேதி என்னவென்று பார்ப்பார்கள். 70-களில் பிறந்தவர் என்றால் உடனடியாக வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள்“, என்றார் அந்த ஊழியர்.

Close