மாவோயிஸ்டுகள், நக்சல்பாரிகள் – “ஏதோ தீவிரவாதிகள்ன்னுல நினச்சேன்”?

“டேய்ய்!! நான் இந்த புத்தகத்தில் நாலு பாகம் வரை படித்தேன்”,  அம்மா

மாசேதுங்

மாவோ என்பவர் சீனாபுரட்சியில் முக்கியமானவர்

“என்ன புத்தகம்?” வினவினேன்..

அதுவா “மாவோவின்இளமைக்காலம்“

(புன்னகையுடன்) “ம்.. எப்படிஇருக்கு?”

“ஒரே சீனா பெயரா வருதுடா, மத்தபடி அங்குள்ள கிராமங்கள், மக்களின் அன்றாட வாழ்க்கைனு போகுது… நல்லா இருக்கு… புது அனுவமா இருக்கு…. இங்க மாதிரி தான் சீனாவிலேயும் பாவம் விவசாயிகள் ரொம்ப சிரமப்பட்டிருக்காங்க போலடா?!”

“ஆமா அம்மா! மாவோ என்பவர் சீனாபுரட்சியில் முக்கியமானவர். அவர் முழுப்பெயர் மாசேதுங். சீனாவில் விவசாயிகளை அடிமைகளாக பயன்படுத்தி, அவர்களின் உழைப்பை பண்ணையார்கள் சுரண்டி வந்தனர். உழுபவர்களுக்கு நிலம் அவர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் என்பதை வலியுறுத்தி மாவோ, மக்களை ஒன்று திரட்டியதோடல்லாமல் வென்றும் காட்டினார். அவரின் கொள்கை, கோட்பாட்டை பின்பற்றுபவர்களை மாவோயிஸ்ட்கள் என்று உலகம் எங்கும் அழைக்கிறார்கள்.”

“என்னடா சொல்ற நான் அவங்க ஏதோ தீவிரவாதிகள்ன்னுல நினச்சேன்?! அப்படிதானடா சினிமால, நியூஸ்ல, அரசாங்கத்துல, போலீஸ்ல எல்லாம் சொல்றாங்க?”

“அப்படித்தான் சொல்லுவாங்க அம்மா, தூத்துக்குடி ஸ்டெரிலைட் ஆலைப் போராட்டத்திலே பாத்துருப்பீங்களே? எப்படி சாதாரண மக்களை, உரிமைக்காக, உயிருக்காக போராடியவர்களை சமூகவிரோதிகள் என்று சொன்னார்களே, அது போலதானம்மா.!!”

நக்சல்பாரி

நக்சல்பாரி என்பது மேற்குவங்கத்தில் உள்ள ஒரு ஊரு

“அப்ப நக்சலைட்னு சொல்ரறாங்களே அவங்களும் இப்படிதான இல்ல அவர்களாவது உண்மையான தீவிரவாதிகளா?”

“அட ஏன்மா நீங்க வேறா!!நக்சல்பாரிஎன்பது மேற்குவங்கத்தில் உள்ள ஒரு ஊரு. அந்த ஊரிலதான் முதன்முதலா இந்திய நிலப்பிரபுக்கள், ஆதிக்க சாதி வெறியர்கள், கந்துவட்டி கொடுமையாளர்களுக்கு எதிராக எளிய விவசாயிகளின் கலகக்குரல் வெடித்தது, அது புரட்சியாக பூத்தது. மக்கள்அவங்களோட வாழ்வாதாரத்திற்காக ஒன்னு சேந்தாங்க, வெற்றியும் கண்டாங்க.
இந்த மாதிரி நல்ல விஷயங்கள நாம தெரிஞ்சுக்ககூடாது என்பதற்காகவும், நாட்டை சூறையாடும் வர்க்கங்களுக்கு முட்டுக் கொடுக்கவுமே நக்சல் என்பது கெட்ட பெயர் போலவும், நக்சல்கள் மக்களுக்கு எதிராக குண்டு வைப்பார்கள், சுட்டுக் கொல்வார்கள் என்றெல்லாம் பரப்புரை செய்து மக்களை பயமுறுத்தி வச்சிருக்கானுங்க!!”

“அடப் படுபாவிகளா, இப்படியா நம்மள முட்டாளா ஆக்கி வச்சுருக்காய்ங்க!”

“சமூகமாற்றத்தை குடும்பத்திலிருந்து ஆரம்பிப்போம்! நமது குடும்பமே இந்த சமூகம்தான் என்பதை உணர்வோம்!!”

“ஆமாஅம்மா.  தாழ்த்தப்பட்ட  பெண்கள் மாராப்பு போடறதுக்கே போராடி உயிர் தியாகம் செஞ்சுதான்மா  (குமரி மாவட்டம்) அது நடந்தது. போராட்டம் இல்லாம வாழ்க்கை இல்லை. போராட்டத்தை இழிவாக பாக்கிறதுலதான் முதல் தப்பு ஆரம்பிக்குது.”

“ஆமா கண்ணு. இவங்களுக்கு வேற வேலை இல்லை, எப்ப பாத்தாலும் போராடுவாய்ங்கனு சொல்லி சோத்த தின்னுட்டு டிவி சேனல மாத்திடுறோம். ஆனா, என்ன பிரச்சனை, எதுக்கு போராடுறாங்கன்னு தெரிஞ்சுக்க முயற்சியே எடுக்கறதிலடா.”

“அரசும் அதைத்தான் விரும்புது மக்களும்அதற்கு துணை போறோம்.”

“நீ சாப்பிட்டு தூங்குடா தம்பி.. நான் அந்த புத்தகத்த இன்னைக்கே முழுசா வாசிச்சி முடிச்சிடுறேன்”

பின் குறிப்பு

என் அம்மாகிட்ட புத்தகம் வாசிக்க சொல்லி ரொம்பநாள் கேட்ருக்கேன். அவங்க, வேலை இருக்கு, வாசிச்சா தூக்கம் வருதுடா என்று பலமுறை சொல்லிருக்காங்க. நானும் அவங்களை ஒவ்வொருமுறை பேசும்போதும் கேட்பேன். அவர்களிடம் தினசரி செய்திகளைப் பற்றியும் பேசுவேன். அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்வேன்
சமீபத்தில்தான் இந்த புத்தகம் வாசிக்க ஆரம்பிச்சாங்க!!

“சமூகமாற்றத்தை குடும்பத்திலிருந்து ஆரம்பிப்போம்!
நமது குடும்பமே இந்த சமூகம்தான் என்பதை உணர்வோம்!!”

– ராஜ்

 

Permanent link to this article: http://new-democrats.com/ta/maoists-naxalbari-a-dialogue/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு உறுப்பினர் சாலை விபத்தில் மரணம்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி - ஐ.டி ஊழியர்கள் பிரிவின் ஆரம்ப கட்ட உறுப்பினர்களில் ஒருவரான திரு ஆர். சரவணன் சென்ற வாரம் ஒரு சாலை விபத்தில்...

ஸ்டெர்லைட் படுகொலை – கார்ப்பரேட் அரசை தண்டிப்பது யார்?

கார்ப்பரேட் அரசின் ஸ்டெர்லைட் படுகொலை, கொலைகார அரசை தண்டிப்பது யார்? 100 நாள் அமைதிப் போராட்டத்தை கலவரமாக மாற்றிய அரச பயங்கரவாதம்

Close