மாவோயிஸ்டுகள் : தேசத்தை பாதுகாக்க போராடுபவர்கள்

செய்தி:

மகாராஷ்டிர மாநிலத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 14 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர். தண்டகாரண்யா பகுதியில் மாவோயிஸ்ட்கள் எதிராக நடந்த தாக்குதலில் இது மிகப்பெரிய வெற்றியாகும்.

கண்ணோட்டம்:

மாவோயிஸ்ட்கள் யார் என்ற உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

கார்ப்பரேட்டுகளின் திட்டங்களுக்காக காட்டுப்பகுதிகளையும் மலைகளையும் விவசாய நிலங்களையும் அழித்து அங்கிருக்கும் பழங்குடி மக்கள் அடித்து விரட்டப்படும்போது உள்நாட்டு அகதிகளாக வாழ வழியில்லாமல் தவிக்கிறார்கள்.

அவ்வாறு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து, கார்ப்பரேட்டுகளின் திட்டங்களை நிறைவேற்றி தருவது மட்டுமில்லாமல் சொந்த நாட்டு மக்கள்மீது தாக்குதல் நடத்தி கார்ப்பரேட் அதாவது வெளிநாட்டு உள்நாட்டு முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது நமது மானங்கெட்ட அரசு. அவ்வாறு

தொடர்ச்சியாக தமது வாழ்வாதாரங்களை இழந்துவரும் மலைவாழ் மக்களுடன் கூட்டாக நின்று இயற்கை வளங்களை பாதுகாப்பதற்காக, கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக கனிம வளங்களையும் காடு மலைகளையும் அழிப்பதற்கு துணைபோகும் துணை இராணுவப் படைகள் எதிர்த்து நிற்பவர்கள்தான் மாவோயிஸ்ட்கள்; நக்சலைட்டுகள்.

 

அவர்கள் நாட்டுக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்றும் கதைகள் நாள்தோறும் வந்தவண்ணம் உள்ளன. கொள்ளையர்களை எதிர்க்கும் மாவோயிஸ்ட் போராளிகளை கொள்ளையடிப்பவர்கள் என்று ஊடகங்கள் அவதூறு பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றன.

மக்களின் வரிப்பணத்தில் நடக்கும் அரசு பாதுகாப்பு படைகளை ஏவி விட்டு உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட்டுகள் நமது நாட்டின் இயற்கை வளங்களை கொள்ளையடிக்க பாதுகாப்பு கொடுக்கிறது.

யார் மக்கள் எதிரிகள், யார் தேசப் பற்றாளர் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

– சுகேந்திரன்

Permanent link to this article: http://new-democrats.com/ta/maoists-struggle-to-protect-our-country/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
கம்பளிப்புழுவா காண்டிராக்ட் தொழிலாளி – 3

'வடமாநிலத் தொழிலாளி என்றால் நமக்கு அடங்கிப் போக வேண்டும்' என்று காண்டிராக்ட் தொழிலாளியும் நினைக்கின்ற அளவுக்கு தொழிலாளி வர்க்கம் பிளவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த பிளவுதான் முதலாளிகளது பேயாட்டத்துக்கு உரம்...

பல்லாயிரம் ஐ.டி ஊழியர்கள் வேலைபறிப்பு: கார்ப்பரேட் கனவான்களின் கழுத்தறுப்பு!

இணையத்தில் மட்டுமே குமுறல்களை பகிர்ந்து கொள்கிறோம். இணையத்தை விட்டு வெளியில் வந்தாக வேண்டிய தருணத்தில் இருக்கிறோம். நாஸ்காம் கருப்புப் பட்டியலில் சேர்த்து விட்டால் எந்த ஜென்மத்திலும் வேலை...

Close