மோடி என்னும் ஊதிப் பெருக்கப்பட்ட சோப்புக் குமிழி வெடித்து விட்டது! இது எந்த இஸ்லாமியரோ, கிருத்துவரோ, கம்யூனிஸ்டுகளோ முன்வைக்கும் வாதமல்ல!

எந்த நடுத்தர மக்களையும் குறிப்பாக படித்த இளைஞர்களையும் குறிவைத்து பிரச்சாரம் செய்யப்பட்டதோ அவர்களை கடும் அதிருப்தியில் தள்ளிவிட்டிருக்கிறது மோடினாமிக்ஸ்.
எந்த நடுத்தர மக்களையும் குறிப்பாக படித்த இளைஞர்களையும் குறிவைத்து பிரச்சாரம் செய்யப்பட்டதோ அவர்களை கடும் அதிருப்தியில் தள்ளிவிட்டிருக்கிறது மோடினாமிக்ஸ். எந்த சமூக வலைத்தளங்களின் ஆதிக்கத்தால் மோடி எனும் பிம்பம் ஊதிப் பெருக்கப்பட்டதோ அங்கெல்லாம் மோடியையும் பா.ஜ.கவையும் கழுவி ஊற்றுகின்றனர் நெட்டிசன்கள்.
பா.ஜ.க.வினரே மறைமுகமாகவும், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா போன்றோர் நேரடியாகவும் “மோடி கவர்னன்ஸ்” மற்றும் “மோடினாமிக்ஸ்” தோற்றுவிட்டது என்று பொதுவெளியில் பொரிந்து தள்ளுகின்றனர்!
“பா.ஜ.க ஆட்சியமைக்க அரும்பாடு பட்டது முட்டாள்தனம். அவர்கள் மீண்டும் என்றுமே ஆட்சியை பிடிக்க முடியாமல் போவதற்கு எனது அந்திமக் காலத்தையும் பொருட்படுத்தாது வேலை செய்வேன்” என்று கூறுகிறார் ஓய்வு பெற்று விட்ட மூத்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ராம் ஜெத் மலானி.
மோடி ஆட்சிக்கு எதிரான எதிர்ப்புகளை கொச்சைப்படுத்த, இராணுவத்தை முன்னிறுத்தி தேசபக்தி பூச்சாண்டி காட்டியவர்களுக்கு “Not in My Name” இயக்கத்தின் வாயிலாக இராணுவத்தினரே செருப்படி கொடுத்தனர்.
மேற்சொன்ன தகவல்களை, மோடி என்னும் பலூனை ஊதி அந்த பிம்பத்தைக் கட்டியமைக்க செய்யப்பட்ட சித்து வேலைகளோடு நாம் ஒப்பிட்டுபார்க்க வேண்டும். அப்போதுதான் இந்த ஒட்டுமொத்த அரசியல் விளையாட்டின் பரிணாமத்தை விளங்கிக்கொள்ள இயலும்.

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோஹன் பகவத் தாங்கள் பா.ஜ.க.வை இயக்கவில்லை என்று பேசியிருப்பது மோடி அரசின் அரசியல், பொருளாதார ஓட்டாண்டித்தனத்தை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
உதாரணமாக, அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவின் சொத்து 50,000த்திலிருந்து கடந்த 3 ஆண்டுகளில் 80 கோடியாக விஸ்வரூபம் எடுத்திருப்பது அம்பலமாகியுள்ளது. ஆனால், ஊழலுக்கு எதிராக அறப்போர் நடத்திய, நடத்திக் கொண்டிருக்கும் எந்தக் கைக்கூலி ஊடகங்களும் இது பற்றி ஆசன வாய் கூட திறந்ததாகத் தெரியவில்லை… “The Nation Wants to Know” என்று எந்தக் கதறல்களும் காற்றின் வழி நம்மை வந்து சேரவில்லை. மாறாக, முந்தைய ஆட்சியில் நடந்த ஊழல்களை பற்றிய ‘ஆழமான’ அலசல்களை அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் தொலைக்காட்சி நடத்துகிறது.
யஷ்வந்த் சின்ஹாவின் மகன் ஜெயந்த் சின்ஹா, தமிழிசை சவுந்திரராஜன் போன்றோரை வைத்து முட்டுக் கொடுத்து கொண்டிருக்கிறது, இந்த ‘தேசீய’ கட்சி.
பா.ஜ.க-வுக்கும் இந்துத்துவ அரசியலுக்கும் மக்கள் மத்தியில் செல்வாக்கை உருவாக்குவதில் வெற்றியடையும் போது “பா.ஜ.க-வும் ஆர்.எஸ்.எஸ்-ம் ஒன்றுதான்” என்று அடையாளம் காட்டிக் கொள்வது, அந்த முயற்சிகள் அம்பலமாகி செல்வாக்கு சரியும் போது “அவங்க வேற, நாங்க வேற” என்று விலகிக் கொள்வது சங்க பரிவாரங்களின் நடைமுறை. அந்த வகையில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோஹன் பகவத் தாங்கள் பா.ஜ.க.வை இயக்கவில்லை என்று பேசியிருப்பது மோடி அரசின் அரசியல், பொருளாதார ஓட்டாண்டித்தனத்தை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
“மீசையில் மண் ஒட்டவில்லை” என்ற ரேஞ்சுக்கு பக்தாளை கதற விடுகிறது சமூக வலைத்தள கலாய்ப்புகள். “எத்த தின்னா பித்தம் தெளியும்” எனத் திரிகிறார்கள், அவர்கள்; அரசியல், பொருளாதார பதிவுகளை தவிர்த்து ஆன்மீகத்தில் குளிக்கிறார்கள்.
இனிமேல் இந்த ஒட்டு மொத்த கூட்டமும் மோடி என்ற மோசடியிலிருந்து “யோகி என்னும் உஜாலாவுக்கு” மாறி பிரச்சாரம் ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! ஆனால் யோகியின் யோக்கியதையோ உ.பி மருத்துவமனைகளில் நிர்வாக சீர்குலைவால் குழந்தைகள் மரணத்தின் மூலம் சந்தி சிரிக்கிறது.

தேசிய வெங்காய கட்சிகள் அனைத்தின் யோக்கியதையும் ஒன்றுதான். கட்சி பெயர்களே வேறு. இவர்கள் அனைவரும் உள்நாட்டு, பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யும் மக்கள் விரோதக் கொள்கையில் கூட்டாளிகள்தான்.
இந்நிலையில்தான் அடுத்த இரண்டு வருடத்திற்குள் மோடிக்கு பதிலாக வேறு ஒரு முகமூடியை தயார் செய்து களமிறக்க வேண்டும்.
இவர்களுக்கு எஞ்சியிருக்கும் துருப்புச் சீட்டுக்கள் “அயோத்தியில் மசூதியை இடித்த இடத்தில் ராமர் கோயில் கட்டுவோம்”, “மதுராவில் மசூதி இருக்கும் இடத்தில் கிருஷ்ணர் கோயில் அமைப்போம்” “தாஜ் மகாலை மீட்போம்” என்பன போன்ற இந்துத்துவ முட்டாள்தனங்களும், அதை ஒட்டி தூண்டி விடும் கலவரங்களுமே.
மேலும், மோடி-அமித்ஷா கூட்டணிக்கு வசதியாக இன்னும் 2 வருடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களும் முன்னேறிவிடும் என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
“மக்கள் வாக்குகள்தான் ஆட்சியாளர்களைத் தீர்மானிக்கிறது” என்று இன்னும் பாமர இந்தியா நம்பிக்கொண்டுதான் இருக்கிறது! அதனால்தான் உள்ளாட்சி தேர்தல் முதல் பிரதமர் தேர்தல் வரை தமது “ஜனநாயக”க் கடமையை தவறாமல் ஆற்றுகிறார்கள், அல்லது ஆற்ற வைக்கப்படுகிறார்கள்.
அதனால்தான், சமூக வலைத்தளங்களில் ஒரு போக்கு காணப்படுகிறது. அது, காங்கிரஸ்-மன்மோகன் சிங் ஆட்சியின் மீதான ஏக்கமாக வெளிப்படுகிறது. India Resists என்னும் முகநூல் பக்கம் சில மாதங்களுக்கு முன் “BJP has made the country feel nostalgic about Congress’s Rule” என்று பதிவிட்டிருந்தது.
இது நம் தலையில் நம் கையாலேயே தீ வைத்துக் கொள்வதற்கு நிகரானது. மன்மோகன் சிங் – ப சிதம்பரம் – ராகுல் காந்தி கும்பல் 10 வருடங்களாக மூத்திரச் சந்தில் வைத்து அடித்துதான் மோடி-அமித்ஷா-அருண் ஜெட்லி கும்பல் வீட்டுக்குள் வைத்து அடிக்க அனுப்பி வைத்தார்கள் என்பதை மறந்து விடக் கூடாது.
“மன்மோகன் சிங், ப.சிதம்பரம், ரகுராம் ராஜன் ஆகியோர் அறிவாளிகள், பொருளாதார வல்லுனர்கள்” என்பதைப் பேசும் பலரும் அந்த அறிவு யாருக்காக, எதற்காகப் பயன்பட்டது என்று புரிந்து கொள்வது அவசியம். அவர்களுக்கும் மோடிக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
“குறைந்தபட்சமாக மக்கள் உயிர் வாழ்ந்தால்தான் அவர்களைச் சுரண்ட முடியும்” என்று புரிந்து வைத்திருந்தார்கள், காங்கிரஸ் ஆட்சியாளர்கள். அதனால் தண்ணீர் தெளித்து தெளித்து அடித்தார்கள்.
மோடி கும்பலோ ஹிட்லரின் வாரிசுகள்… ஒட்டு மொத்தமாக கேஸ் சேம்பரில் வைத்துக் கொளுத்தாமல், தவணை முறையில் கொல்கிறார்கள்.
எனவே, காங்கிரஸ் ஆட்சி என்னும் எண்ணெய் சட்டிக்கு தப்பித்து மோடி ஆட்சி என்ற எரியும் நெருப்பில் விழுந்த நாம், இதிலிருந்து தப்பிப் பிழைத்து மீண்டும் எண்ணெய் சட்டிக்குள் விழுந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
தேசிய வெங்காய கட்சிகள் அனைத்தின் யோக்கியதையும் ஒன்றுதான். கட்சி பெயர்களே வேறு. இவர்கள் அனைவரும் உள்நாட்டு, பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யும் மக்கள் விரோதக் கொள்கையில் கூட்டாளிகள்தான். மன்மோகன் சிங் ஆரம்பித்து வைத்த ஆதார், உங்கள் பணம் உங்கள் கையில், ஜி.எஸ்.டி, “நீட்” போன்றவைதான் மோடி அரசால் மூர்க்கமாக அமல்படுத்தப்பட்டது என்பதை மறந்து விடக் கூடாது.
மாநில அளவில் இது தி.மு.க / திருமா / சீமான் / திருமுருகன் காந்தி / கமலஹாசன் என்று வரிசை கட்டி நிற்கிறது, மாற்று அரசியல். இந்த முன்னிறுத்தல்கள் பரிசீலிப்பதற்குக் கூட இலாயக்கற்றவை.
இவர்களது பொருளாதார கொள்கை என்ன, நம் நாட்டை கொள்ளை அடித்துச் செல்லும் கார்ப்பரேட்டுகளுக்கு பாய் விரிக்கும் கொள்கைக்கு மாற்றாக என்ன முன் வைக்கிறார்கள் என்று கேட்டால் அவர்களது இடம் காலியாகி விடும். சாதி, மதம், இனம் என்ற பெயரில் உழைக்கும் மக்களை பிரிக்கும் அரசியலையும், கூடவே பன்னாட்டு நிறுவனங்களுக்கு தரகு வேலை செய்யும் பணியையும்தான் ஓட்டரசியல் கட்சிகள் அனைத்தும் செய்து வருகின்றன. அதில் புதிதாக ஒரு கமலஹாசனை அல்லது விஜயை நம்புவது எந்த பலனையும் தராது.
நிலவும் இந்த அமைப்பு முறையில் ஆதாயமடைந்தவர்களே எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று இந்த சாக்கடையில் குதிக்கின்றனர். இதை விட்டு வெளியில் சிந்திக்கத் தெரியாத படித்த வர்க்கமும், “வேறு மாற்று இருக்க முடியாது இதுவே உச்சபட்ச ஜனநாயகம்” என்று இன்னும் நம்பிகொண்டிருப்பவர்களும் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துபவர்களே!
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சியாளர்கள் மாறினாலும், திட்டங்களை தீட்டுவதும், அமல்படுத்துவதும், அதிகாரிகள், போலீஸ், நீதித்துறை அடங்கிய அரசுக் கட்டமைப்புதான். இந்த ஒட்டு மொத்த கட்டமைப்பும் எதற்கும் பயன்படாத அளவுக்கு அழுகி விட்டது என்பதுதான் மன்மோகன் சிங், அதற்கு பின்னர் மோடி என்ற அவலங்கள் தெரிவிக்கும் உண்மை.
இந்த சீழ் பிடித்த புண்ணை ஆற்றுவதற்கு தேவை ஒரு அறுவை சிகிச்சை !
– பிரியா
படங்கள் : இணையத்திலிருந்து