மக்கள் மீது மோடியின் தாக்குதல் : கருப்புப் பணத்தை ஒழித்து விடுமா?

This entry is part 14 of 22 in the series பண மதிப்பு நீக்கம்
 1. கருப்புப் பணத்தின் மீது மோடியின் “சர்ஜிகல் ஸ்டிரைக்”
 2. டாலர்-ரூபாய், அமெரிக்கா-இந்தியா பற்றி இந்துத்துவ பிதற்றல்கள்
 3. ரூபாய் நோட்டு செல்லாததானது – உழைப்பாளிகளுக்கு ஐ.டி சங்கத்தின் மடல்
 4. கருப்புப் பண ஒழிப்பு மோசடி – மக்கள் அதிகார நிலைப்பாடு
 5. கருப்புப் பணத்தை ஒழிக்க முடியுமா?
 6. “10 நாட்களில் பிறக்குமா புதிய இந்தியா” தொலைக்காட்சி விவாதம்
 7. வங்கியில் பணத்தை எடுப்போம், வங்கிக் கணக்கை முடிப்போம் – மக்கள் அதிகாரம் அறைகூவல்
 8. டெல்டா விவசாயம் நெருக்கடியில்! விவசாயிகள் தற்கொலை! ரூபாய் நோட்டு பிடில் வாசிக்கிறார் மோடி!
 9. செல்லாத நோட்டு, கருப்புப் பணம், டிஜிட்டல் பணம் – யதார்த்தம் சொல்லும் பெண்கள்
 10. வங்கிப் பணத்தை எடுப்போம்! வங்கிக் கணக்கை முடிப்போம்!
 11. பணமதிப்பு நீக்கம் – மோடிக்கு பொறுப்பில்லையாம்!
 12. ரூபாய் நோட்டு சாவுகள் : இப்போது வேலைப் பளுவால் வங்கி மேலாளர் இறப்பு
 13. கருப்புப் பண ஒழிப்பு : ஆட்டோ தொழிலாளியின் சவுக்கடி
 14. மக்கள் மீது மோடியின் தாக்குதல் : கருப்புப் பணத்தை ஒழித்து விடுமா?
 15. ரூ 500, 1000 செல்லாது! மோடியின் கருப்புப் பண மோசடி!
 16. பண மதிப்பு நீக்கம் பற்றி ப. சிதம்பரம் – நீங்க நல்லவரா… கெட்டவரா…?
 17. பண மதிப்பு நீக்கமும், முதலாளித்துவமும் – ஐ.டி சங்கக் கூட்டம்
 18. மலையைக் கெல்லி எலியைக் கோட்டை விட்ட ‘திறமை’சாலி மோடி!
 19. “மோடியின் 2000 ரூபாய் திட்டம்” – உழைக்கும் மக்கள் சவுக்கடி, குமுறல் – வீடியோ
 20. பண மதிப்பு நீக்கம் : பணமும் இல்லை, வாழ்வும் இல்லை
 21. 5% வளர்ச்சியை 7% ஆகக் காட்டி மோசடி செய்யும் மோடி அரசு!
 22. நீரவ் மோடியின் 11,200 கோடி ஆட்டை – தேவை நரேந்திர மோடியின் “துல்லிய தாக்குதல்”

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து நாம் இன்னும் மீளவில்லை. அந்த அதிர்ச்சிக்கு பின்னால் நாட்டின் நலன் இருப்பதாக மோடி அவர்கள் கூறியதால் சிலர் அதை ஆதரிக்கிறார்கள். தாங்கள் சிரமப்பட்டால்கூட பரவாயில்லை என்கிறார்கள். அந்த நலன் என்ன? மோடி மற்றும் பிறர் கூறியதுதான்.

1. கருப்புப் பணம் ஒழிக்க
2. ஊழலை ஒழிக்க
3. தீவிரவாதத்தை ஒடுக்க
4. பாக், சீனாவிலிருந்து வரும் கள்ள நோட்டை ஒழிக்க.

கருப்புப்பணம் என்றால் என்ன? ஊழல் என்றால் என்ன?

முதலாளிகள் வரி கட்டாமல் ஏமாற்றி மறைத்து வைத்திருக்கும் பணம், அரசியல்வாதிகள் அடித்த கொள்ளை, அதிகாரிகள் வாங்கிய லஞ்சம், கணக்கில் காட்டாமல் மறைத்து வைத்திருக்கும் பணம். இதுதான் என்கிறார்கள். இப்போது எடுத்திருக்கும் நடவடிக்கை இந்த வகையில் சேமித்து வைத்திருக்கும் பணம் எல்லாத்தையும் வெளிக்கொண்டு வந்துவிடும் அல்லது செல்லாக் காசாக்கிவிடும் என்கிறார்கள்.

இத்தகைய கருப்புப் பணப் புழக்கம் எவ்வாறு உருவாகிறது?

உதாரணமாக, மதுரை கிரானைட் கொள்ளை விசயத்தில் பி.ஆர். பழனிச்சாமி பல வகையில் முறைகேடாக அரசை ஏமாற்றி பணம் சம்பாதித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இவர் எப்படி சம்பாதித்தார்? கிரானைட் உரிமம் இல்லாத இடங்களில் கிரானைட் வெட்டி எடுத்தது, விளை நிலங்களை அனுமதியின்றி தோண்டி கல்லை எடுத்தது, அதை தடுத்தவர்கள் மீது குண்டர்களை ஏவி தாக்கியது, பல நீர் நிலைகளை அழித்தது, நரபலி கொடுத்தது மற்றும் இன்னும் பல சட்ட விரோத செயல்கள் புரிந்து, கணக்கில் காட்டாமல் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கிரானைட் கற்களை ஏற்றுமதி செய்திருக்கிறார். ஆனால், இதற்காக நடந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்டார். அதற்காக பெரும்பணம் கொடுத்து நீதிபதியை கவனித்திருக்கிறார்கள் என்று அந்த சமயம் மதுரை பற்றும் பிற மாவட்ட வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

இதன்மூலம் அவர் சம்பாதித்தது பல ஆயிரம் கோடி ரூபாய்

இவ்வளவு பணமும் பழனிச்சாமியின் வீட்டு கிடங்கில் குவிக்கப்பட்டிருக்குமா?

இந்த நடவடிக்கைகளை பழனிச்சாமி தனி ஒரு ஆளாக செய்திருக்க முடியாது. அதற்கு துணையாக பல்வேறு தரப்பினர் இருந்திருக்க வேண்டும். இப்போது திரு.பழனிச்சாமியின் பல்லாயிரம் கோடி ரூபாய் தொழில் நடைபெறுவதற்கு, சொத்து உருவாக துணை புரிந்த அத்தனை பேரிடமும் பரவி அவர்கள் வழியாக பொருளாதாரத்தில் ஏற்கனவே பலமுறை சுற்றி வந்து கொண்டிருப்பதுதான் கருப்புப்பணம். இது உருவான இடத்தின் பெயர் ஊழல்.

கையிலிருக்கும் பணத்தை மீண்டும் முதலீடு செய்து லாபம் சம்பாதிக்க நினைப்பார்களா அல்லது வெறுமனே இதற்காக ஒரு பங்களா கட்டி பாதுகாப்பார்களா அல்லது கிடங்கில் போட்டு வைத்திருப்பார்களா? அடுத்த வாங்கலுக்கு தேவையான அளவு மட்டும் ரொக்கமாக இருக்கலாம், எஞ்சிய பெரும்பகுதி ரியல் எஸ்டேட் சொத்துக்களாக, தங்கமாக, நிறுவன பங்குகளாக மாற்றப்பட்டிருக்கும்.

சரி இப்போது அரசு எடுத்திருக்கும் இந்த நடவடிக்கையால் இவர்களிடமிருந்து பதுக்கி வைத்திருக்கும் பணத்தையாவது கறந்துவிட முடியுமா?

பழனிச்சாமி போன்றோருக்கு சேவை செய்யவும், அவர்களின் சொத்தை பாதுகாக்கவும்தான் பல்வேறு ஆடிட்டர்கள் இருக்கிறார்கள். கருப்புப் பணத்தை வெள்ளையாக்க பல்வேறு வழிகளை தினசரி யோசிப்பதுதான் ஆடிட்டர்களின் வேலை. இது பழனிச்சாமி என்பவருக்கு மட்டுமல்ல இதுபோன்ற அனைத்து பெரும் பணக்காரர்களுக்குமான பொது விதி.

உலகம் முழுவதுமுள்ள பெரும் முதலாளிகள் தங்களது கருப்புப் பணத்தை சுற்றுக்கு விடுவதற்கென்றே என்றே மொரீசியஸ் போன்ற நாடுகளின் சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. பார்டிசிபேட்டரி நோட் என்ற வழியில் இந்தியாவில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் இது போன்ற நாடுகளுக்கு மாற்றப்பட்டு மீண்டும் அந்நிய முதலீடு என்ற பெயரில் நமது நாட்டிற்கே வந்துவிடுகிறது.

மேலும் உள்நாட்டில் பினாமி பெயர்களில் நிலமாகவும், பங்கு பத்திரமாகவும், தங்கமாகவும் வைத்திருக்கிறார்கள். ஆக கருப்புப் பணம் புழங்கும் இதுபோன்ற இடங்கள் பாதுகாப்பாகவே இருக்கின்றன. இதற்கு துணைபோகும் உயர் அதிகாரிகளும் தமது லஞ்சப் பணத்தை இவ்வாறே ஆடிட்டர்கள் உதவியோடு பாதுகாத்துக் கொள்வார்கள்.

கொஞ்சம்கூட மீட்க முடியாதா? செல்லாக் காசாகாதா?

ஏன் முடியாது? இவர்கள் தரும் எச்சில் காசுக்கு ஆசைப்பட்டு ஓடி ஓடி உழைத்த, ஊழையிட்ட ரியல் எஸ்டேட் புரோக்கர்கள், கடைநிலை ஊழியர்கள் சிலரின் பணத்தை மீட்கலாம் அல்லது செல்லாக் காசாகலாம். இவை அரிசி கழுவும்போது நீரில் மிதந்தோடும் அளவுதான். அரசியல்வாதிகள் சிலர் வரவிருக்கும் தேர்தலுக்காக வைத்திருக்கும் கொஞ்சம் பணம் மாட்டலாம், மாட்டாமலும் போகலாம்.

சரி இந்த அளவாவது முடிந்ததே என நினைக்க முடியுமா?

முடியாது, ஏனென்றால் இழந்த பணத்தை மீண்டும் பெறுவதற்காக இந்த சில்லறைகள் பெரும் பணக்காரர்களிடம் மீண்டும் தலையைச் சொறிவார்கள். மீண்டும் ஆரம்பித்த இடத்திலேயே வந்து நிற்கும். இதனால் நாட்டிற்கோ மக்களுக்கோ என்ன நன்மை?

இதற்காக மக்கள் இழந்தவைகள் ஒருபோதும் திரும்பப் போவதில்லை. ஏமாற்றம்தான் மிச்சம்.

3. தீவிரவாதிகள்.

உள்ளூர் ரவுடிகள் முதல் உலக ரவுடிகள் வரை மக்கள் யாரிடமும் உதவிகேட்டு நாடிச் செல்லவில்லை. மக்கள் யாரை தேடிச் செல்கிறார்களோ அவர்கள் மக்களிடமே பெற்றுக் கொள்கிறார்கள். தேர்தல் அரசியல் கட்சிகளுக்கும், கொள்ளையடிக்கும் முதலாளிகளுக்கும்தான் உள்ளூர், வெளிநாட்டு ரவுடிகளின் செயல்பாடு தேவை. அவர்கள்தான் உள்ளூர் ரவுடிகளையும்,  எளிநாட்டு தீவிரவாதிகளையும் வளர்த்துவிடுகிறார்கள். எனவே அவர்களின் தேவையை முதலாளிகளும் அரசியல்வாதிகளும்தான் பார்த்துக் கொள்கிறார்கள்.

4. கள்ள நோட்டு
இதுவரை சம்பாதித்ததில் சில லட்சங்கள் வீணாகும். மீண்டும் சில வாரங்கள் இதற்காக உழைக்க வேண்டியிருக்கும். மறுபடியும் ஜோராக ஆரம்பித்துவிடுவார்கள்.

இதெல்லாம் அரசுக்குத் தெரியாதா?

ஏன் தெரியாது. நன்றாகவே தெரியும்.

இந்த நடவடிக்கையின் உண்மையான நோக்கம் என்ன?

விவசாயிகளுக்கு கொடுத்த கடன், கல்விக் கடன், பெரும் முதலாளிகளுக்கு கொடுத்த கடன் இவை அனைத்தும் மக்கள் வங்கிகளில் சேமித்து வைத்திருக்கும் பணத்திலிருந்துதான் கொடுக்கப் படுகிறது. விவசாயிகளிடமும், மாணவர்களிடமும் ஆள் வைத்து வசூலிக்கும் வங்கிகள் முதலாளிகளிடம் அவ்வாறு வசூலிப்பதில்லை. அதனால் 7.5 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வங்கிகளுக்கு வரவேண்டிய கடன் தொகை திருப்பி வரவில்லை. இதற்கு பெயர்தான் வாராக்கடன்.

இப்போது மீண்டும் முதலாளிகள் கடன் கேட்கிறார்கள். ஆனால் வங்கிகளால் கொடுக்க முடியவில்லை. எனவே மக்கள் கைகளில் வைத்திருக்கும் சிறு தொகைகளை வசூலிப்பதன் மூலமாக தற்காலிகமாக இதை சமாளிக்கலாம் என்பதும் இந்த நடவடிக்கையின் ஒரு நோக்கம்.

எது செஞ்சாலும் குறை சொல்லுறீங்களே இதற்கு தீர்வு என்ன உங்களால் சொல்ல முடியுமா?

தீர்வு என்ன? ஊழலின் துவக்க இடத்தை அடைத்துவிட்டால் போதும். இதைத் தடுத்து விடலாம். இதன் துவக்க இடம் தனியார் என்ற புள்ளியில் உள்ளது. தனியார்மயத்தை ஒழித்துக் கட்ட வேண்டும்.

அதுமட்டும் போதாது. அரசு அதிகாரிகளை இப்படியே விட்டு வைத்தால் மீண்டும் வேறுவிதமாக பிரச்சினை வரும். எனவே அரசையும் புதிதாக மாற்றி அமைக்க வேண்டும்.

– செல்வின்

Series Navigation<< கருப்புப் பண ஒழிப்பு : ஆட்டோ தொழிலாளியின் சவுக்கடிரூ 500, 1000 செல்லாது! மோடியின் கருப்புப் பண மோசடி! >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/modis-attack-on-people-will-it-eradicate-black-economy/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
யூனியன் பொறுப்பேற்கும் முன்னணி ஐ.டி நிறுவன ஊழியர்கள்

இந்தியாவின் சுமார் 40 லட்சம் ஐ.டி/ஐ.டி சேவைத் துறை ஊழியர்களை சங்கமாக திரட்டும் முயற்சியில் இந்நிகழ்வு ஒரு முக்கியமான மைல்கல். ஐ.டி நிறுவனங்கள் இந்தியா முழுவதிலும் அலுவலகங்களைக்...

நான் ஒரு பெண், பெண்ணாக இருப்பதற்காகப் பெருமைப்படுகிறவள்!

நூல்: நான் ஒரு பெண், பெண்கள் தொடர்பான "சரிநிகர்" கட்டுரைகளின் தொகுப்பு (1990 – 1996) மூலம்: ஜக்குலின் அன் கரின், தமிழில் : செல்லம்மா, பாரதி...

Close