«

»

Image

ரூ 500, 1000 செல்லாது! மோடியின் கருப்புப் பண மோசடி!

This entry is part 15 of 21 in the series பண மதிப்பு நீக்கம்

மக்கள் அதிகாரம், தமிழ்நாடு வெளியிட்டிருக்கும் துண்டறிக்கை

ரூ 500, 1000 செல்லாது!
மோடியின் கருப்புப் பண மோசடி!

ரொக்கப் பணம் மட்டுமா கருப்புப் பணம்?
கருப்புப் பண முதலைகளின்
எந்த வகை முதலீடுகளையும் முடக்காது
சாமானிய மக்களின் சேமிப்பையும் சம்பளத்தையும்
வழிப்பறி செய்வதே மோடியின் திடீர்த் தாக்குதல்!

மோடி அரசின் அனைத்தும் தழுவிய தோல்வியை
மூடி மறைக்கவே இந்த சர்ஜிகல் ஸ்ட்ரைக் – அறுவை சிகிச்சை!
மோடியின் கருப்புப் பண மீட்பு மோசடி
சாதாரண மக்களை நடுத்தெருவில் தள்ளியுள்ளது.

மோடியின் இந்த நடவடிக்கை
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும்
பதுக்கப்பட்ட பணத்தை வெளிக் கொண்டு வராது.
நகைகளாகவும் சொத்துக்களாகவும் நிலங்களாகவும்
பதுக்கப்பட்ட கருப்புப் பண முதலீடுகளை ஒன்றும் செய்யாது

இந்தியாவின் 90 விழுக்காடு முதலீடுகள்
பல வகைகளிலும் இரண்டு சதவீத
பணக்காரர்களின் கையில்தான் உள்ளன

அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் தரகு முதலாளிகள்
கருப்புப் பணத்தை 500, 1000 ரூபாய் நோட்டுகளாக வைத்திருப்பதில்லை

கார்ப்பரேட் தரகு முதலாளிகளின்
வாராக் கடன் ஏழரை லட்சம் கோடி ரூபாய்
இந்த மோசடிப் பேர்வழிகளின்
பெயரைக் கூட வெளியிடாமல் பாதுகாக்கும்
மோடியா, கருப்புப் பணத்தை மீட்கப் போகிறார்?

கள்ளப்பணம், கருப்புப்பணம் குவியவும்,
லஞ்ச ஊழல் பெருகவும் மக்களா காரணம்?
கருப்புப் பண முதலைகள் செய்யும் குற்றங்களுக்காக
சாமானிய மக்கள் சாப்பாடும், மருந்தும்
வாங்க வழியில்லாம் ஏன் தண்டிக்கபடப வேண்டும்?

அம்பானி, அதானி, ரஜினி, நத்தம், ஓ.பி.எஸ்
பேங்க் வாசலில் நிற்கவில்லை!
நீயும் நானும்தான் நிற்கிறோம்!
நாம் என்ன கருப்புப் பண முதலைகளா?
மோடி என்றால் மோசடி என்பது மீண்டும் நிரூபணம்!

சாமானிய மக்கள் மீதான
தற்போதைய பொருளாதாரத்
தாக்குதலை எதிர்க்கா விட்டால்
அரசியல் பாசிச பயங்கரவாதத்
தாக்குதலாக வரும், எச்சரிக்கை
அனைத்துப் பிரிவினரும் போராடாமல்
மோடியின் பாசிச நடவடிக்கையை
முறியடிக்க முடியாது!

 

Series Navigation<< மக்கள் மீது மோடியின் தாக்குதல் : கருப்புப் பணத்தை ஒழித்து விடுமா?பண மதிப்பு நீக்கம் பற்றி ப. சிதம்பரம் – நீங்க நல்லவரா… கெட்டவரா…? >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/modis-black-money-swindle/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
சி.டி.எஸ் வேலை நீக்கத்திலும் விவசாயிகளின் துயரிலும் லாபமீட்டுவது யார்?

நம்மை கூடுதல் நேரம் வேலை செய்யச்சொல்கிறார்கள், கடனில் தள்ளி வட்டியை உறிஞ்சுகிறார்கள், கல்விக்காகவும் மருத்துவத்திற்காகவும் மேலும் செலவு செய்ய வைக்கிறார்கள்.

மண்ணின் மைந்தர்களை இழிவுபடுத்தும் தீபாவளியைக் கொண்டாடாதீர்!

8 மணிநேர வேலை உரிமைக்காக ரத்தம் சிந்திய தியாகிகளது நினைவாக மே தினத்தை போராட்ட தினமாக உயர்த்திப் பிடிக்கிறோம். முதலாளித்துவம் உருவாக்கிய வறுமை, நோய், வேலையின்மை போன்றவற்றிலிருந்து...

Close