வங்கியில் பணத்தை எடுப்போம், வங்கிக் கணக்கை முடிப்போம் – மக்கள் அதிகாரம் அறைகூவல்

 1. கருப்புப் பணத்தின் மீது மோடியின் “சர்ஜிகல் ஸ்டிரைக்”
 2. டாலர்-ரூபாய், அமெரிக்கா-இந்தியா பற்றி இந்துத்துவ பிதற்றல்கள்
 3. ரூபாய் நோட்டு செல்லாததானது – உழைப்பாளிகளுக்கு ஐ.டி சங்கத்தின் மடல்
 4. கருப்புப் பண ஒழிப்பு மோசடி – மக்கள் அதிகார நிலைப்பாடு
 5. கருப்புப் பணத்தை ஒழிக்க முடியுமா?
 6. “10 நாட்களில் பிறக்குமா புதிய இந்தியா” தொலைக்காட்சி விவாதம்
 7. வங்கியில் பணத்தை எடுப்போம், வங்கிக் கணக்கை முடிப்போம் – மக்கள் அதிகாரம் அறைகூவல்
 8. டெல்டா விவசாயம் நெருக்கடியில்! விவசாயிகள் தற்கொலை! ரூபாய் நோட்டு பிடில் வாசிக்கிறார் மோடி!
 9. செல்லாத நோட்டு, கருப்புப் பணம், டிஜிட்டல் பணம் – யதார்த்தம் சொல்லும் பெண்கள்
 10. வங்கிப் பணத்தை எடுப்போம்! வங்கிக் கணக்கை முடிப்போம்!
 11. பணமதிப்பு நீக்கம் – மோடிக்கு பொறுப்பில்லையாம்!
 12. ரூபாய் நோட்டு சாவுகள் : இப்போது வேலைப் பளுவால் வங்கி மேலாளர் இறப்பு
 13. கருப்புப் பண ஒழிப்பு : ஆட்டோ தொழிலாளியின் சவுக்கடி
 14. மக்கள் மீது மோடியின் தாக்குதல் : கருப்புப் பணத்தை ஒழித்து விடுமா?
 15. ரூ 500, 1000 செல்லாது! மோடியின் கருப்புப் பண மோசடி!
 16. பண மதிப்பு நீக்கம் பற்றி ப. சிதம்பரம் – நீங்க நல்லவரா… கெட்டவரா…?
 17. பண மதிப்பு நீக்கமும், முதலாளித்துவமும் – ஐ.டி சங்கக் கூட்டம்
 18. மலையைக் கெல்லி எலியைக் கோட்டை விட்ட ‘திறமை’சாலி மோடி!
 19. “மோடியின் 2000 ரூபாய் திட்டம்” – உழைக்கும் மக்கள் சவுக்கடி, குமுறல் – வீடியோ
 20. பண மதிப்பு நீக்கம் : பணமும் இல்லை, வாழ்வும் இல்லை
 21. 5% வளர்ச்சியை 7% ஆகக் காட்டி மோசடி செய்யும் மோடி அரசு!
 22. நீரவ் மோடியின் 11,200 கோடி ஆட்டை – தேவை நரேந்திர மோடியின் “துல்லிய தாக்குதல்”

மக்கள் அதிகாரம் அமைப்பு வெளியிட்டிருக்கும் நோட்டீஸ்

நாம் போட்ட பணத்தை எடுக்க நமக்கேன் தடை?
வங்கியில் பணத்தை எடுப்போம்! வங்கிக் கணக்கை முடிப்போம்!

கடுகு டப்பா சேமிப்பையும் வழிப்பறி செய்யுது, மோடி அரசு!
கார்ப்பரேட் முதலாளிக்காக கொள்ளை போகுது, நமது பணம்!

ன்புடையீர் வணக்கம்,

இந்தியாவில் 86 சதவீத பணப்புழக்கமாக இருந்த ரூ 500, ரூ 1000 நோட்டுக்களை செல்லாது என்ற மோடி அரசின் திடீர் அறிவிப்பு சுனாமியை விட பயங்கரமான விளைவுகளை நாடு முழுவதும் ஏற்படுத்தி வருகிறது. ரொக்கப் பணத் தட்டுப்பாட்டால் இலட்சக்கணக்கான சிறுதொழில்கள் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. கோடிக்கணக்கான மக்களும், தொழிலாளர்களும் வேலை இழந்து, வறுமையில் சாகும் நிலை ஏற்படும் என அறிஞர்கள் எச்சரிக்கிறார்கள்.

முதலீட்டுக்கு அதிக வட்டி, இரட்டிப்பு பலன், ஒருமுறை பணம் கட்டினால் மாதாமாதம் பணம் வீட்டுக்கு வரும், நகை பாலிசு இப்படி பல நூதன கொள்ளைகள் தொடர்கின்றன. குடும்ப பெண்கள் முதல் படித்தவர்கள் வரை பலரும் ஏமாந்து கொண்டுதான் வருகிறார்கள். இவை போன்றதுதான் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பும். கருப்புப் பணம், கள்ளப் பணம், லஞ்ச ஊழல் ஒழிப்பு என்ற பெயரில் மிகப்பெரிய நூதனக் கொள்ளை நடக்கிறது. தொழில்கள் செய்யவோ, அவசியப் பொருட்கள் வாங்கவோ வழியின்றி கோடிக்கணக்கான மக்கள் முடங்கிக் கிடக்கின்றனர்.

உழைத்து சேமித்து வங்கியில் போட்ட நமது பணத்தை எடுப்பதற்கு கட்டுப்பாடுகளும் தடைகளும் ஏற்படுத்துவது உலகில் எந்த நாட்டிலும் நிகழாத ஒன்று. மத்திய ஆட்சியாளர்களும், அதிகாரிகளும், ஆளும் கட்சியனரும் நாளும் அறிவித்து வரும் புதிய புதிய ஆணைகளும், விளக்கங்களும், வாக்குறுதிகளும் அறுத்த காயத்தில் மிளகாய்த்தூள் தூவியதைப் போல எரிச்சலைத்தான் தூண்டுகின்றன.

‘கருப்புப் பண ஆசாமிகள்தான் பயப்பட வேண்டும், முறையாக சம்பாதித்தவர்கள் கணக்கில் காட்டி வங்கிகளில் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம்’ என்கிறார்கள். ஆனால் வங்கிகளில், ஏ.டி.எம்.-களில் பணம் இல்லையெனத் துரத்துகிறார்கள். 10, 12 மணி நேரம் கால்கடுக்க மக்கள் காத்துக் கிடக்கிறார்கள். தொழில் பாதித்த சிறு வணிகர்கள், கல்யாணம் நின்று போன பெண்கள், கட்டணம் கட்ட முடியாத மாணவர்கள், கூட்டுறவு வங்கியில் பணம் பெற முடியாத விவசாயிகள் என தினந்தோறும் பலர் சாகிறார்கள்.

ஆனால், மக்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை, 90 சதவீதம் பேர் அரசின் திட்டங்களை ஆதரிக்கிறார்கள் என்று ஆளும் கட்சி, ஆட்சியைப் பிடிக்க தேர்தலின் போது புளுகியதைப் போலவே இப்போதும் செய்கிறது. “சினிமாவுக்காக பல மணிநேரம் காத்துக் கிடக்கும் மக்கள், நாட்டுக்காகக் கொஞ்ச நேரம், சில நாட்கள் வங்கிகளில் சிரமப்படக் கூடாதா? எல்லையில் தேசத்துக்காக இராணுவ வீரர்கள் பனிமலையில் நிற்கவில்லையா?” என்று வக்கிரமாகக் கேட்கிறார்கள். அரசாங்கம் சொல்லுவதை எல்லாம் ஆதரிப்பதுதான் புத்திசாலித்தனம், தேசபக்தி என்று பல படித்த முட்டாள்கள் நம்புகிறார்கள்.

இவை எல்லாம் எதற்காக? உண்மையில் கருப்புப் பணம், கள்ளப் பணம், இலஞ்ச ஊழலை ஒழிக்கவா? ஆட்சிக்கு வந்த 100 நாளில் 80 லட்சம் கோடி வெளிநாட்டு கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் கணக்கில் போடுகிறேன் என மோடி வாக்குறுதி அளித்தார். ஏன் செய்யவில்லை?

இந்தியாவில் யாரிடம் கருப்புப் பணம் உள்ளது என்ற விபரம் வருமானவரித்துறை, சி.பி.ஐ, வருவாய் புலனாய்வுத் துறை, நிதி அமைச்சகம் ஆகிய துறைகளுக்கு நன்கு தெரியும். ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? வெளிநாடுகளில் பல லட்சம் கோடி கருப்புப் பணமாக பதுக்கியவர்களின் பெயரைக் கூட மோடி சொல்ல மறுக்கிறார். பல லட்சம் கோடிகளை வாராக் கடனாக்கிய கிரிமினல் முதலாளிகளின் பெயரையும் சொல்ல மறுக்கிறார். இவரா கருப்புப் பணத்தை ஒழிக்கப் போகிறார்?

பனிரெண்டு லட்சம் கோடி ரூபாய் அம்பானி, அதானி போன்ற தரகு முதலாளிகளின் வாராக்கடனால் வங்கிகள் திவாலாக வேண்டிய அபாயத்தை, முட்டுக் கொடுக்கவே கோடிக்கணக்கான மக்களுடைய சேமிப்புப் பணத்தை, சம்பளப் பணத்தை பலவந்தமாக வழிப்பறி செய்கிறது மோடி அரு.

ஊரில் ஒரு குற்றம் நடந்தால் போலீசார் குற்றத்தை புலனாய்வு செய்து குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டுமா? அல்லது தெருவில் உள்ள மக்களை எல்லாம் ஸ்டேசனில் வைத்து அடித்து விசாரிக்க வேண்டுமா? கருப்புப் பண முதலைகளை பிடிக்காமல் குளத்து நீர் முழுவதையும் இறைத்த கதைதான் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மோடி அரசின் உத்தரவு.

கார்ப்பரேட் முதலாளிகள் ஏற்றுமதி, இறக்குமதி செய்யாமலேயே செய்ததாகவும், உற்பத்தியை குறைத்துக் காண்பித்தும் மின்னணு பரிவர்த்தனையில்தான் சூமார் 56 லட்சம் கோடி கருப்புப் பணம் இந்த ஒரு ஆண்டில் மட்டும் உருவாகி உள்ளது. இதை ஒழிக்க என்ன நடவடிக்கை?

ஆற்று மணல், தாது மணல், கிரானைட் கொள்ளை, தனியார் கல்வி நிறுவனஙள், ஆன்மீகத்தை பரப்பும் மடங்கள் ஆகியவற்றில் பல லட்சம் கோடிகள் கருப்புப் பணமாகவும், ஊழல் பணமாகவும் உருவானதில், தலையாரி முதல் தலைமைச் செயலர் வரை, வார்டு கவுன்சிலர் முதல் முதலமைச்சர் வரை அனைவரும் பங்காளிகள். இந்நிலையில் யாரை வைத்து, யாரிடம் இருந்து கருப்புப் பணத்தை, ஊழல் பணத்தை, எப்படி மீட்கப் போகிறது மோடி அரசு?

பெரும்பான்மை மக்களின் ரொக்கப் பொருளாதாரத்தை ஒழித்துக் கட்டி, வங்கியின் மூலமாகத்தான் கண்டிப்பாக வரவு செலவு செய்ய வேண்டும் என உத்தரவு போடும் மக்கள் மீதான மோடியின் இந்த அதிரடித் தாக்குதல் கூலித் தொழிலாளர்கள், சிறு வணிகர்கள், விவசாயிகள் உட்பட அனைவருக்கும் வரிவிதிப்பை கட்டாயமாக்கவும், சில்லறை வணிகத்தில் சிறு வியாபாரிகளை ஒழித்து ரிலையன்ஸ், வால்மார்ட், பிக் பஜார் போன்ற பெரும் வணிக நிறுவனங்களை கொழிக்க வைக்கவும், மேலும் வங்கியின் வருமானத்தைப் பெருக்கி வங்கி முதலாளிகளை வளர்க்கவும், மக்கள் பணத்தை கார்ப்பரேட்டுகளுக்கு இன்னும் அதிகமாக வாரி வழங்கி வாராக் கடனாக தள்ளுபடி செய்யவுமே.

நாம் போட்ட பணத்தை எடுக்க நமக்கேன் தடை?

வங்கியில் பணத்தை எடுப்போம்! வங்கிக் கணக்கை முடிப்போம்!

நமது சேமிப்புப் பணத்தை கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்க அனுமதியோம்.

நன்றி : மக்கள் அதிகாரம், விருத்தாசலம் வட்டம். 97912 86994

Series Navigation<< “10 நாட்களில் பிறக்குமா புதிய இந்தியா” தொலைக்காட்சி விவாதம்டெல்டா விவசாயம் நெருக்கடியில்! விவசாயிகள் தற்கொலை! ரூபாய் நோட்டு பிடில் வாசிக்கிறார் மோடி! >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/money-in-bank-is-for-corporate-loot-people-power/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
மாடுகளுக்காக மனிதர்கள் வேட்டையாடப்படும் புதிய இந்தியா!

"நாலு வர்ண சாதிக்கொரு நீதி வைச்சு மேல் என்றும் கீழ் என்றும் தள்ளி வைச்சு பூணுலால் கட்டப்படுது புதிய இந்தியா!"

வேலை போச்சு, நிவாரணம் வேண்டும் – நடுவர் மன்றம் அமைப்பு

ஒரு சாதாரண ஐ.டி ஊழியர் வேலையிலிருந்து நீக்கப்பட்டால் அடுத்து என்ன செய்ய முடியும்? பொதுவாக, ரிசியூமை துடைத்து, மெருகேற்றி புதிய ஒரு வேலை தேடுவதற்கு இறங்க வேண்டியதுதான்....

Close