விவசாயிகள் ஏன் டெல்லியில் போராடுகிறார்கள்?
ஏனென்றால், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மோடி அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கிறது!
ஏனென்றால், நெடுவாசல் விவசாயிகள் போராட்டத்தின் போது பொய் வாக்குறுதி கொடுத்து விட்டு பின்னர் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது, மோடி அரசு!
ஏனென்றால், மோடி அரசு விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்ய மறுக்கிறது!
ஏனென்றால், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மோடி அரசு மறுக்கிறது!
மாநில அரசுக்கு பொறுப்பு இல்லையா?
தமிழ்நாடு அரசு முழுக்க செயலிழந்து போயிருக்கிறது என்று நம் அனைவருக்கும் தெரியும். இல்லா விட்டாலும், மாநில அரசுகளின் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு விட்டன. சாலை போடுவதற்கும், பேருந்து விடுவதற்கும் கூட மத்திய அரசின் கையை எதிர்நோக்கு்ம நிலையில்தான் அனைத்து மாநில அரசுகளும் உள்ளன.
மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகள் கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாகவும், விவசாயிகள், உழைக்கும் மக்களுக்கு எதிராக மாற்றப்பட்டுள்ளன. அதை மோடி அரசு இன்னும் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது.
நாம் என்ன செய்ய வேண்டும்?
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், கூட்டங்கள் நடத்துவோம். விவசாயிகளுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கில் கூடுவோம்.
பிரதமரை வறுத்தெடுக்கும் நடிகர் மயில்சாமியின் கோபம்
படங்கள் ஃபேஸ்புக்கிலிருந்து
[படங்கள் ஃபேஸ்புக்கிலிருந்து]