மும்பையில் ‘பயங்கரவாதிகள்’ உலாவுவதாக வந்த செய்தி பொய்

பள்ளி மாணவி பயங்கரவாதிகளை பார்த்ததாகச் சொன்னது பொய்

தான் உடை தரித்த ஆயுதங்கள் ஏந்திய சில நபர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடுவதாக வந்த தகவலைத் தொடர்ந்து செப்டம்பர் 22-ம் தேதி மகாராஷ்டிராவின் மும்பை, நவி மும்பை, தானே, ராய்காட் கடற்கரை பகுதிகளில் உச்சகட்ட கண்காணிப்பை அறிவித்தது மேற்கு கடற்படை ஆணையகம்.

mumbai_759அந்தத் தகவலை கொடுத்த 12 வயது சிறுமியிடம் இரண்டு நாட்களுக்கு பிறகு மீண்டும் விசாரித்தபோது,  கருப்பு உடையுடன், தானியங்கி துப்பாக்கிகளை ஏந்தியிருந்த சில ஐ.எஸ் பயங்கரவாதிகளின் புகைப்படங்களை தான் பார்த்ததாகவும், அதை வைத்துக் கொண்டு விளையாட்டுக்காக பொய்யான தகவலை கொடுத்ததாகவும் கூறியிருக்கிறாள். அந்தச் சிறுமியைத் தொடர்ந்து அதே பள்ளியில் படிக்கும் இன்னும் சில மாணவர்களும் பயங்கரவாதிகளை பார்த்ததாக கூறியதால் தகவலுக்கு மேலும் நம்பகத்தன்மை கூடியிருக்கிறது.

தொலைக்காட்சியில் செய்தி வெளியாக ஆரம்பித்ததும், வதந்திகள் வேகமாக பரவின. பல பகுதிகளிலிருந்து பயங்கரவாதிகள் நடமாட்டத்தை பார்த்ததாக தகவல் வர ஆரம்பித்திருக்கிறது.

பயங்கரவாதத்துக்கு எதிரான போர், நாட்டுப் பற்று என்ற பெயரில் பகுத்தறிவுக்கு எதிரான, வதந்திகளில் வாழ்கிற சமூகமாக நாம் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோமா? இது போன்ற ஆதாரமற்ற, பொய்யான எச்சரிக்கைகள், நமது சமூகத்தையும், பொருளாதாரத்தையும் பாதிக்கின்ற முக்கிய  பிரச்சனைகளிலிருந்து நமது கவனத்தை திருப்பி விடுகின்றனவா?

 செய்தி ஆதாரம்:

Permanent link to this article: http://new-democrats.com/ta/mumbai-terror-alert-was-a-prank-ta/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
டி.சி.எஸ்-ஐ கறந்து ஆட்டம் போடும் டாடா குடும்ப அரசியல்!

சமாஜ்வாதி கட்சி குடும்பச் சண்டையில் அகிலேஷ் யாதவ், முலாயம் சிங் யாதவ், அமர் சிங் என்று யார் ஜெயித்தாலும் தோற்கப் போவது உத்தர பிரதேச மக்கள்தான் என்பது...

சங்கக் கூட்டம் – ஜூலை 21, 2018

பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு -  உறுப்பினர் கூட்டம்  தேதி: 21-7-2018, சனிக்கிழமை. நேரம்: மாலை 4 முதல் 6 மணி வரை இடம் :...

Close