சி.டி.எஸ்-ன் சட்டவிரோத செயலுக்கு எதிராக பு.ஜ.தொ.மு.வின் போராட்டம்

சி.டி.எஸ் செய்து வந்த சட்டவிரோத செயல் ஒன்றை எதிர்த்து நமது சங்கம் போராடி வருகின்றது.

இனிமேல் 9 மணி நேரம் வேலை செய்தாக வேண்டும் (உணவு இடைவேளை சேர்க்காமல்) என அந்நிறுவனம் ஈமெயில் வழியாகவே
உத்தரவிட்டிருந்தது. எட்டு மணிநேர வேலைக்கு எதிரான இச்செயலைத் தடுத்து அந்நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி தொழிலாளர் ஆய்வரிடம் புகார் தந்திருந்தோம். அதன் மீதான நினைவூட்டல் கடிதம் அனுப்பியும் பதில் இல்லை.

எந்த ஒரு விசயத்திலும் இறுதிவரை போராடிப்பார்த்து விடுவது என்ற நடைமுறைப்படி நமது சங்க அமைப்பாளர் திரு கற்பகவிநாயகம், சி.டி.எஸ் மீதான புகார் மீது நடவடிக்கை என்ன என்பதைக் கண்டறிய காஞ்சிபுரத்தில் இருக்கும் தொழிலாளர் ஆய்வர் அலுவலகத்துக்கு கடந்த வியாழன் நேரில் சென்று விசாரணை செய்தார். இன்னும் ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக ஆய்வர் அலுவலகம் உறுதி கூறியுள்ளது..

சங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு பக்கபலமாக சங்கத் தோழர்களின் ஒத்துழைப்பைக் கோருகிறோம்.

பு.ஜ.தொ.மு – ஐ.டி. ஊழியர்கள் பிரிவு

Series Navigationஐ.டி ஊழியர்கள் சங்கம் அமைக்க தடை தகர்ந்தது! >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-it-employees-wing-fight-against-illegal-cts-action-ta/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
18-ம் நூற்றாண்டின் வாரன் பஃபெட் – பங்குச் சந்தை முன்னோடி ஜான் லோ

இன்றைக்கு 300 ஆண்டுகளுக்கு முன்பு பாரிஸ் நகரத்தில் ஆரம்பிக்கப்பட்ட மிசிசிப்பி கம்பெனிதான் உலகின் முதல் பொது பங்கு நிறுவனம். அப்போது பிரான்சுக்கு சொந்தமான மிசிசிப்பி பள்ளத்தாக்கில் மக்களை...

பன்றி தொழுவத்திற்கு பன்னீர் தெளிக்கும் அருமை அங்கிள் வைத்தி – தினமணி தலையங்கம்

இப்போதிருக்கும் இந்தப் பாராளுமன்ற ஜனநாயகம் என்பது உள்நாட்டு, பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு பூஜை செய்யும் தரகர்களால் நடத்தப்படுகிறது, ஆகவே அது அப்படித்தான் இருக்கும்!  நமக்குத் தேவை, மக்களால் மக்களுக்காக...

Close