சென்னை ஆவடியில் திருவள்ளூர் (மேற்கு) மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நடத்திய மே தின பேரணியில் பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஆலைத் தொழிலாளர் என்றாலும் ஐ.டி ஊழியர் என்றாலும் ஆட்குறைப்பும் வேலைபறிப்பும் அன்றாட நிகழ்வாச்சு! தீராது, தீராது தனித்தனியே போராடினால் பிரச்சினைகள் தீராது

மாணவனுக்கு கல்வியில்ல இளைஞனுக்கு வேலையில்ல! மீனவனுக்கு கடலில்ல! விவசாயிக்கு நிலமில்ல! தொழிலாளித் தோழனுக்கோ சங்கம் வைக்கவே உரிமையில்ல! எங்கடா இருக்கு ஜனநாயகம்? எங்க உயிரை எடுக்குது பணநாயகம்!