ஊழியர்களை பிரித்து வைத்து சுரண்டும் அப்ரைசல் முறை : ஐ.டி சங்கக் கூட்ட விவாதம்

னிக்கிழமை 17.02.2018 அன்று மாலை 3 மணி முதல் 7 மணி வரை நடைபெற்ற சங்கத்தின் மாதாந்திர கூட்டம் – குறிப்புகள். கூட்டத்தில் சுமார் 20 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Appraisal – An unscientific unethical method

5 பேர் வேலை செய்யும் ஒரு Project ல் அனைவரும் மிகவும் திறமையாக வேலை செய்து முடிக்கும் பட்சத்தில், இவர்கள் அனைவருக்கும் ‘1st Rating’ கொடுக்கப்பட வேண்டும். ஆனால் எந்தவொரு நிறுவனத்திலும் அது நடப்பதில்லை, ஏனென்றால் ஊழியர்களுக்கு Rating வழங்குவது என்பது Appraisal க்கு முன்பே யாருக்கு என்ன Rating கொடுக்கப்பட வேண்டும் என்பது முன்கூட்டியே திட்டமிடப்பட்டு முடிவெடுக்கப்படுகிறது, எனவே இது அறிவியல் பூர்வமற்றது, அநீதியானது.

பொதுவாக, அப்ரைசல் முறை என்பது ஊழியர்களின் திறனை மதிப்பிடுவதற்கோ, மேம்படுத்துவதற்கோ, அவர்களது பணி வாழ்க்கையை திட்டமிடுவதற்கோ பயன்படுவதில்லை. நிர்வாகம் பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு தர வேண்டிய லாபத்தின் அடிப்படையில் முன் கூட்டியே தீர்மானிக்கும் முடிவுகளை அமல்படுத்துவதற்கான கருவியாகவே பயன்படுத்தப்படுகிறது.

ஐ.டி ஊழியர்கள் வேலையில் எதிர்கொள்ளும் அழுத்தத்தின் வேர் நிறுவனத்துக்கு ஆள் எடுக்கும் எச்.ஆர் நடைமுறையில் இருந்து ஆரம்பிக்கிறது, வாடிக்கையாளர்களிடமிருந்து புராஜக்ட் பெறும் விற்பனை நடைமுறையில் தீவிரமாகிறது.

  • பலகட்ட நேர்முகம், தேர்வுகள் நடத்தி எடுக்கப்படும் ஊழியர்கள் நிறுவனத்தில் வேலை செய்ய ஆரம்பித்த பிறகு, ஒரு பிரிவினர் குறைந்த திறன் உடையவர்களாக ரேட்டிங் பெறுவது எந்த அடிப்படையில்? வேலைக்கு ஆள் சேர்க்கும் எச்.ஆர் அதிகாரிகள் மீது என்ன விதமான நடவடிக்கை எடுக்கப்படுகிறது?
  • பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டு புராஜக்ட் பெறு முயற்சிக்கும் போது, நடைமுறையில் சாத்தியமற்ற விலையில், சாத்தியமற்ற கால அளவில் புராஜக்டுகளை ஏற்றுக் கொள்கிறார்கள். டெலிவரி மேலாளர்கள் இத்தகைய புராஜக்ட்-களில் இருந்துதான் தமக்கான புராஜக்ட்டை தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது. இந்த அவசர கதியிலான, சரியான திட்டமிடப்படாத விற்பனை விளைவுகள் ஊழியர்கள் மீது வந்து விடிகிறது. டெலிவரி மேலாளர்கள், குறைந்த ஊழியர்களை வைத்து அதிக நேரம் வேலை வாங்கி புராஜக்டை முடிக்க வேண்டியிருக்கிறது.
  • இதற்கிடையில், மகப்பேறு விடுப்பில் போகும் பெண் ஊழியர்கள், உடல்நிலை பிரச்சனைகளை எதிர்கொள்ளும் ஊழியர்கள் மோசமாக பாதிக்கப்படுகிறார்கள். ஒரு ஆண்டில் ஒரு சில மாதங்கள் விடுப்பு எடுத்த ஊழியருக்கு இந்த ரேட்டிங் முறையில் நியாயம் கிடைப்பதில்லை. அவரது திறமை, அதுவரை அவர் செய்த வேலைகளின் தரம் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டு அவருக்கு குறைந்த ரேட்டிங் வழங்கப்பட்டு விடுகிறது.
  • இந்த அப்ரைசல் முறை ஊழியர்களிடையே ஆரோக்கியமற்ற போட்டியை உருவாக்கி, டீம் உணர்வையும், ஒற்றுமையையும் குலைக்கிறது மன உளைச்சலை அதிகரிக்கிறது. சங்கமாக இணைந்த தமது உரிமைகளுக்காக போராடுவதை தடுக்கிறது.

நமது ஐ. டி. துறை நண்பர்கள் Appraisal system என்பது சம்பள மற்றும் பதவி உயர்வுக்காக வருடா வருடம் கடைப்பிடிக்க பட்டு வரும் முறை அதனை மாற்ற முடியாது, நாம் தான் அதனை அனுசரித்து செல்ல வேண்டும் என்று கடந்து செல்கிறார்கள், அதே நேரம் பல ஊழியர்களின் வேலைக்கு ‘வேட்டு’ வைப்பது இந்த Appraisal முறை என்பதை மறந்து விடுகிறார்கள்.

18 மற்றும் 19 ம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்கள் வரை 18 மணி நேரம், 12 மணி நேரம், 10 மணி நேர வேலை என்பது யதார்த்தமாகவும், அதுதான் நியதி என்றும், அதனை மாற்ற முடியாது என்றும் நினைத்து கொண்டிருந்த காலத்தில், 8 மணி நேர வேலையை, உழைப்பாளர்களின் ரத்தம் சிந்தி, மற்றும் பல உயிர்களை தியாகம் செய்து அதனை சட்டமாக்கியது தொழிலாளர்களின் போராட்டம். இந்தியாவின் பிற துறைகளிலும் தொழிலாளர்களின் விடாப்பிடியான போராட்டம்தான் உரிமைகளை வெல்வதற்கு வழி வகுத்தது.

அது போல Appraisal முறையையே முற்றிலுமாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்பதை இலக்காக கொள்வது என்று சங்க உறுப்பினர்களால் விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

BPO/BPS வேலைகளில் இருக்கும் ஊழியர்களுக்கான Appraisal I. T. ஊழியர்களிடமிருந்து வேறுபடுவதாகவும், இதனை பற்றி  விவாதிக்கப்பட வேண்டும் என உறுப்பினர்களால் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சங்க நடவடிக்கைகள்

  • விப்ரோ 2K வழக்கில் புரொஃபைல் லாக், QPLC, அப்ரைசல் ரேட்டிங் ஆகியவை தொடர்பான விபரங்களை தொகுத்து கடிதம் வழங்குவதற்கான தயாரிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.
  • எச்.சி.எல், எம்ஃபசிஸ் நிறுவனங்களைச் சேர்ந்த இரண்டு ஊழியர்களின் வழக்கில் Failure notice பெறப்பட்டு, Labour Court ல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்து.
  • விப்ரோவைச் சேர்ந்த 3 ஊழியர்களின் Failure Notice பெறப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது.
  • நிதிநிலை அறிக்கை: வரவு செலவு விவரங்கள் வாசிக்கப்பட்டது.

தயாரிப்பு : ராஜதுரை, பொருளாளர்

Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-it-employees-wing-meeting-february-2018/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
டிஜிட்டல் பொருளாதாரம் – அவசியம் பார்க்க வேண்டிய விவாதம்

பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன், பொருளாதார பேராசிரியர் ஜோதி சிவஞானம் ஆகியோரின் ஆணித்தரமான கருத்துக்கள் பலமுறை கேட்டு புரிந்து கொள்ள வேண்டியவை. நிதி ஆலோசகர் நாகப்பனும், முதலீட்டு ஆலோசகர்...

மேல் சாதிக்கு 10% இட ஒதுக்கீடு – ஆதரித்து ‘கம்யூனிஸ்ட்’ ஓட்டு ஏன்?

முதலாளித்துவம், தனியார்மய ஏகபோகம் ஆகியவை சேர்ந்து மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கும்போது முதலாளித்துவத்தை வீழ்த்த கூடிய வர்க்க போராட்ட அரசியலுடன் இணைத்து சமூக நீதிக்காக போராடுவது சரியானதா இல்லை...

Close