பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு அறைக்கூட்டம்

இந்திய கரன்சி நோட்டுகள் முடக்கம்,

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் – ஐ.டி துறை மீது தாக்கம்

ஐ.டி சங்க செயல்பாடுகள் – விவாதம்

அன்பார்ந்த நண்பர்களே,

தொழிற்சங்கக் கூட்டம் என்பது ஒரு சடங்கு அல்ல. அங்குதான் தொழிலாளர்களின் அடிமைத்தனங்கள் உணர்த்தப் படுகின்றது. அங்குதான் பல்வேறு தொழிலாளர்களின் குரலை கேட்க முடிகிறது. தன் மனதுக்குள் பேசிக்கொள்ளும் தொழிலாளி நான்கு சுவர்களுக்குள், தனது தொழிலாளி வர்க்கத்துக்குள், பேசுவதுதான் நாளை அவரை வெளியில் பேச வைக்கும். தன் லாபத்திற்காக பச்சைக் குழந்தை குடிக்கும் பாலில் கூட கலப்படத்தையும் நஞ்சையும் கலக்கும் ஒரு சமூகத்தில் வாழும் தொழிலாளி தனக்கு பிரச்சினை இல்லை என்று ஒதுங்க முடியுமா? நஞ்சை நீ அருந்துகிறாய், உன் குடும்பமே அருந்துகிறது.

இன்றைய பொழுதும் கடந்தது என்பதல்லவே வாழ்க்கை. “அரசியலில் நீங்கள் தலையிடாவிட்டால் அரசியல் உங்கள் வாழ்க்கையில் தலையிடும்”.  தோழர் லெனின் சொன்ன வார்த்தை எத்தனை உண்மையானது என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

நாம் கருப்புப் பண முதலைகளா என்ன? நம்மை வரிசையில் நிற்க வைத்தது எது?
டிரம்பை நாமா தேர்ந்தெடுத்தோம்? டிரம்ப் எப்படி நம் வாழ்க்கையில் தலையிட முடியும்?

வாருங்கள் விவாதிப்போம்.

பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு அறைக்கூட்டம்

நாள் : சனிக்கிழமை நவம்பர் 19, 2016
நேரம் : காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை

அழைக்க :

ndlf-it-employees-wing-meeting-november

Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-it-employees-wing-meeting-november-2016-ta/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
சீறும் செவிலியர் போராட்டம் – பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு ஆதரவு

உழைப்பில் தேய்ந்து வறுமையில் காய்ந்த வாழ்க்கையை மீட்டெடுக்க போராட்டத் தீ பற்றிக்கொண்டது எங்கும் பரவட்டும் எலும்புகள் கூட விட்டு வைக்காமல் கொள்ளையர்களின் கூடாரம் உடனே சாம்பலாகட்டும் வயிற்றில்...

நிர்வாகங்களே ஊழியர்களை, யூனியனை ஆதரியுங்கள்!

இப்பொழுது நடக்கும் பணிநீக்க நடவடிக்கைகளில் நிறுவனங்கள் அதிக அனுபவம் உடைய ஊழியர்களை பணிநீக்க முயற்சி செய்கின்றன, நிறுவனங்கள். இதன் பொருள் தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள் 40...

Close