மெதுவாக, உறுதியாக, மலர்ந்து விரிகின்றது பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு

யூனியன் மூலமாக சட்டரீதியாக எதிர்கொள்ள ஆரம்பித்த பிறகு அந்த மனுவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ள ஊழியர்கள் புராஜக்ட் கொடுக்காமல் பெஞ்சில் உட்கார வைக்கப்படுவது, variable pay வெட்டப்படுவது, ராஜினாமா செய்யும்படி எச்.ஆர் அதிகாரிகளால் மிரட்டப்படுவது போன்றவற்றை மன உறுதியுடன் தைரியமாக கையாண்டு வருகின்றனர்.