யூனியன் பொறுப்பேற்கும் முன்னணி ஐ.டி நிறுவன ஊழியர்கள்

ண்மையான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணங்கள் தாமே மேளதாளம் ஏற்பாடு செய்து கொண்டு நிகழ்வதில்லை. அவற்றை கண்ணுறும் பார்வையாளர்கள் கைத்தட்டி வரவேற்று, உலகிற்கு அறியச் செய்ய வேண்டியிருக்கிறது. ஜூலை 15, 2017 அன்று நடந்த ஊழியர்கள் சங்கக் கூட்டத்தில் புதிய ஜனநாயக ஐ.டி ஊழியர்கள் பிரிவு உறுப்பினர்கள் அத்தகைய ஒரு தருணத்தை படைத்தார்கள். நாங்கள் அதை கைத்தட்டி வரவேற்று உலகிற்கு அறியத் தருகிறோம்.

ஆம், அன்றைய தினம் இந்தியாவின் முன்னணி ஐ.டி நிறுவனங்களான இன்ஃபோசிஸ், டி.சி.எஸ், காக்னிசன்ட், விப்ரோ ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாகிகளாகவும் நிர்வாகக் குழு உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இன்னும் சில முக்கியமான முடிவுகள் சங்கக் கூட்டத்தில் எடுக்கப்பட்டன. அவற்றின் விளைவுகள் இந்திய ஐ.டி துறையில் வெகுகாலம் எதிரொலித்துக் கொண்டிருக்கும்.

தலைவர் :
திரு.ஷியாம் சுந்தர்

துணைத்தலைவர்கள் :
திரு. காசிராஜன்,
திருமதி வாசுகி சீனிவாசன்

செயலாளர் :
திரு.சுகேந்திரன்

பொருளாளர் :
திரு. ராஜதுரை

இணை செயலாளர் :
திரு. ஓம்பிரகாஷ்

நிர்வாகக் குழு உறுப்பினர்கள்
திரு. சரவணன்
திரு. ரவி சங்கர்
திரு. கமால்

இந்தியாவின் சுமார் 40 லட்சம் ஐ.டி/ஐ.டி சேவைத் துறை ஊழியர்களை சங்கமாக திரட்டும் முயற்சியில் இந்நிகழ்வு ஒரு முக்கியமான மைல்கல். ஐ.டி நிறுவனங்கள் இந்தியா முழுவதிலும் அலுவலகங்களைக் கொண்டிருக்கும் நிலையில், நாடு முழுவதிலும் ஊழியர்கள் சங்கங்களை அமைப்பது அவசியமான ஒன்று. அதன்படி பெங்களூரு, ஹைதராபாத், கோயம்புத்தூர், பூனே, கொல்கத்தா, டெல்லி போன்ற நகரங்களிலும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

  • பெங்களூருவில் ஐ.டி ஊழியர்களை திரட்டி அத்தகைய ஊழியர் சங்கத்தை பதிவு செய்வதற்கான முயற்சிகளை பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு ஆதரிக்கிறது.
  • கோயம்புத்தூரில் பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
  • ஹைதராபாதிலும், கொல்கத்தாவிலும் பு.ஜ.தொ.மு வழிகாட்டலின் கீழ் ஊழியர் சங்கம் அமைப்பதற்கான குழுக்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு ஜனவரி 10, 2015 அன்று தோழர் கற்பகவினாயத்தை அமைப்பாளராகக் கொண்டு உருவாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இரண்டரை ஆண்டுகளில் ஐ.டி ஊழியர்களுக்காக பல முக்கியமான வெற்றிகளை ஈட்டித் தந்தது ஊழியர் சங்கம். அத்தகைய ஒரு முயற்சியின் விளைவாக, ஐ.டி துறைக்கு தொழிலாளர் சட்டங்களில் எந்தவித விலக்கும் அளிப்படவில்லை என்றும், ஐ.டி ஊழியர்கள் தொழிற்சங்கம் அமைத்துக் கொள்ள உரிமை உள்ளது என்றும், தொழில் தகராறு சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கும்படி தமிழ்நாடு அரசு கட்டாயப்படுத்தப்பட்டது.

இவ்வாறு பு.ஜ.தொ.மு மாநில குழுவின் வழிகாட்டலின் கீழ் தோழர் கற்பகவினாயகம் தலைமையிலான அணியின் விடாப்பிடியான கடின முயற்சிகளின் விளைவாக, இப்போது ஐ.டி ஊழியர்கள் பல சட்ட உரிமைகளை பயன்படுத்த முடிகிறது. சட்ட விரோத வேலை நீக்கத்துக்கு எதிராக பிரிவு 2A-ன் கீழ் மனு தாக்கல் செய்வது, பல்வேறு மாநிலங்களில் சங்கம் அமைத்து பதிவு செய்வது, கூட்டு பேச்சுவார்த்தை கோருவது, பிரிவு 2K-ன் கீழ் தொழில்தாவா தாக்கல் செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட முடிகிறது.

தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் குழு இந்த பயணத்தின் அடுத்தக் கட்டத்தை தொடர்ந்து, ஐ.டி துறையில் ஜனநாயகத்துக்கான போராட்டத்தில் புதிய உயரங்களை தொடுவதோடு மட்டுமல்லாமல், நமது நாட்டில் அனைத்து பிரிவு மக்களுக்கு ஜனநாயக உரிமைகளை வெல்வதற்கான போராட்டத்திலும் முன்னணி பங்களிப்பு செய்யும் என்று நம்புகிறோம்.

இது தொடர்பான புதிய செய்திகளுக்கு எமது இணையதளத்தை பின்தொடருங்கள்.

More from New Democrats

Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-it-employees-wing-office-bearers-executive-committee/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
மேனேஜரின் பேராசைக்கு பலிகொடுக்கப்படும் ஊழியர்கள்

மீறி வேலையை விட்டு போகச்சொன்னால் நமது சங்கத்தை தொடர்பு கொள்ளுங்கள். அறியாமை, பயம் போன்றவற்றை தவிருங்கள். நாம் பழைய அடிமைகள் இல்லை. கேள்வி கேட்க துணிவோடு எதிர்க்க...

மக்கள் மீது மோடியின் தாக்குதல் : கருப்புப் பணத்தை ஒழித்து விடுமா?

சிலரின் பணத்தை மீட்கலாம் அல்லது செல்லாக் காசாகலாம். இவை அரிசி கழுவும்போது நீரில் மிதந்தோடும் அளவுதான்.

Close