- டி.சி.எஸ் வேலை நீக்கங்களுக்கு எதிராக
- மேனேஜரின் பேராசைக்கு பலிகொடுக்கப்படும் ஊழியர்கள்
- ஐ.டி ஆட்குறைப்புக்கு எதிராக பு.ஜதொ.மு சட்டப் போராட்டம், மக்கள் திரள் பிரச்சாரம்
- ஆள் குறைப்பு அறமாகாது – ஜூனியர் விகடன்!
- ஆட்குறைப்புக்கு எதிராக தொழில்தாவா தயாரிப்பு – பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு
- “ஆட்குறைப்பு இல்லை, திறமை குறைவுதான்” – நாஸ்காம், “அரசு தலையிட வேண்டும்” – பு.ஜ.தொ.மு : விவாதம்
- புகார் கொடுத்த சி.டி.எஸ் ஊழியர்களுக்கு புராஜக்ட் ஒதுக்கவும் – தொழிலாளர் துறை
2017-ம் ஆண்டு ஐ.டி/ஐ.டி சேவைத் துறை ஊழியர்களுக்கு ஒரு கொடுங்கனவாக விடிந்திருக்கிறது. காக்னிசன்ட் நிறுவனத்தில் 7.5% ஊழியர்கள் வேலை இழப்பு, விப்ரோவில் ஆயிரக்கணக்கான மூத்த ஊழியர்கள் வெளியேற்றப்படுதல், ஆயிரத்துக்கும் மேல் கேப்ஜெமினி ஊழியர்கள் பணிநீக்கம், டெக் மகிந்த்ரா ஆட்குறைப்பு, ஐ.பி.எம் ஒப்பந்த ஊழியர்கள் வேலை நீக்கம் என்று அடுத்தடுத்த தாக்குதலை எதிர் கொண்டிருக்கின்றனர் ஐ.டி ஊழியர்கள்.

இரவு பகலாக கடும் வேலைப் பளு, நிச்சயமற்ற பணி வாழ்வு, மோசடியான அப்ரைசல் முறை போன்றவற்றின் காரணமாக மன அழுத்தம், சக ஊழியர்களுடன் ஆரோக்கியமற்ற போட்டி – ஐ.டி ஊழியர்களின் பணிச்சூழல்
இந்தத் தாக்குதலை எதிர்த்தும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட விப்ரோ, காக்னிசன்ட் மற்றும் பிற நிறுவன ஊழியர்களுக்கு ஆதரவாகவும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவு வரும் மே 18-ம் தேதி சென்னை சோழிங்கநல்லூர் சிக்னல் அருகில் மாலை 5 மணி முதல் 7 மணி வரை ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.
உயர் ஊதியம், விரல் நகத்தில் அழுக்குப்படாத அலுவலக வேலை, ஆடம்பரமான வாழ்க்கை என்று சமூகத்தின் சலுகை பெற்ற பிரிவினராக பார்க்கப்பட்ட ஐ.டி ஊழியர்கள் இன்னொரு பக்கம் இரவு பகலாக கடும் வேலைப் பளு, நிச்சயமற்ற பணி வாழ்வு, மோசடியான அப்ரைசல் முறை போன்றவற்றின் காரணமாக மன அழுத்தம், சக ஊழியர்களுடன் ஆரோக்கியமற்ற போட்டி என்று பலவகைகளிலும் பாதிக்கப்படுகின்றனர்.
இப்போது அனைத்துக்கும் உச்சகட்டமாக, எதற்காக எல்லாவற்றையும் சகித்துக் கொண்டார்களோ அந்தப் பணிவாழ்வையே பறித்து ஊழியர்களை தூக்கி எறிய ஆரம்பித்திருக்கின்றன கார்ப்பரேட்டுகள். வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக சலுகை விலை நிலம், வரி தள்ளுபடி, தடையற்ற மின்சாரம் என்று அரசால் ஊக்குவிக்கப்படும் இந்நிறுவனங்கள் பன்னாட்டு நிதி நிறுவன முதலீட்டாளர்களுக்கு கோடிகளை குவிப்பதற்காக நம் நாட்டு ஊழியர்களின் பணி வாழ்வை பலி கொடுக்கின்றன. பாதிக்கப்பட்ட ஊழியர்கள் மன அழுத்தம், குடும்பப் பிரச்சனை, எதிர்காலம் குறித்த பயம் என கடும் நெருக்கடிக்கு உள்ளாகின்றனர்.
அது மட்டுமின்றி ஐ.டி துறை கனவில் பல லட்சம் செலவழித்து படித்து விட்டு திரண்டு நிற்கும் இளைஞர்களின் எதிர்காலத்திலும் மண்ணை அள்ளிப் போட்டு வருகின்றன லாபம் குவிக்கும் எந்திரங்களான ஐ.டி துறை கார்ப்பரேட்டுகள்.

பாதிக்கப்பட்ட ஊழியர்கள் மன அழுத்தம், குடும்பப் பிரச்சனை, எதிர்காலம் குறித்த பயம் என கடும் நெருக்கடிக்கு உள்ளாகின்றனர்.
- சக உழைக்கும் வர்க்கம் என்ற வகையில் ஐ.டி ஊழியர்களுடன் தோளோடு தோள் நின்று போராட களம் இறங்கியிருக்கின்றனர் பிற துறைகளில் பணி புரியும் பு.ஜ.தொ.மு தொழிலாளர்கள். பு.ஜ.தொ.முவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்களும் ஐ.டி ஊழியர்களுடன் இணைந்து ஆட்குறைப்புக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளனர்.
- மேலும், பாதிக்கப்பட்ட ஊழியர்களை திரட்டி தொழிலாளர் துறையில் தொழில்தாவா தாக்கல் செய்வது, பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துவது என்றும் இந்தப் பிரச்சனை சட்ட ரீதியாகவும் ஊடகங்களிலும் பரவலாக கொண்டு செல்லப்படும்.
- தமிழகத்தின் சென்னை, கோவை நகரங்களில் மட்டுமின்றி பெங்களூரு, ஹைதராபாத், புனே/மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களிலும் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் மத்தியில் பிரச்சாரம், சட்டப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
கடந்த 25 ஆண்டுகளாக நமது நாட்டை பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கின்றன தனியார் மயம், தாராள மயம், உலக மயம் என்ற நாட்டு மக்களையும், இயற்கை வளங்களையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு காலனிய அடிமையாக்கும் கொள்கைகள். அந்தக் கொள்கைகளை எதிர்த்து நாடெங்கும் நடைபெற்று வரும் உழைக்கும் மக்களின் புதிய சுதந்திரப் போராட்டத்தில் ஐ.டி ஊழியர்களும் அமைப்பாக ஒருங்கிணைத்து இணையும் நேரம் வந்துள்ளது.

பன்னாட்டு நிதி நிறுவன முதலீட்டாளர்களுக்கு கோடிகளை குவிப்பதற்காக நம் நாட்டு ஊழியர்களின் பணி வாழ்வை பலி கொடுக்கின்றன, ஐ.டி நிறுவனங்கள்
விப்ரோ, காக்னிசன்ட், டெக் மகிந்த்ரா, கேப்ஜெமினி நிறுவனங்களே,
- பல்வேறு பெயர்களில் மோசடியாக செய்யப்படும் ஆட்குறைப்பு நடவடிக்கையை உடனடியாக நிறுத்து!
- கட்டாய பணிவிலகல் கடிதம் வாங்கப்பட்ட ஊழியர்கள் அனைவரையும் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்!
- அப்ரைசல் என்ற மோசடி பணிமதிப்பீட்டு முறையை ரத்து செய்!
ஐ.டி/ஐ.டி சேவை துறை ஊழியர்களே
- சட்ட விரோத, நியாயமற்ற, தொழில்முறையற்ற ஆட்குறைப்புக்கு எதிராக அணிதிரள்வோம்!
- அப்ரைசல் முறையை ஒழித்துக் கட்டி தொழிற்சங்கம் மூலம் ஜனநாயகமான, ஆரோக்கியமான பணியிட சூழலை உருவாக்குவோம்!
உழைக்கும் மக்களே!
- மறுகாலனியாக்க தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் ஐ.டி துறை ஊழியர்களின் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்போம்!
- கார்ப்பரேட்டுகளுக்கும் கார்ப்பரேட் அரசுக்கும் எதிராக மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்துக்கு அணி திரள்வோம்!
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
ஐ.டி ஊழியர்கள் பிரிவு
தொலைபேசி : 90031 98576
மின்னஞ்சல் : combatlayoff@gmail.com