புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவின் ஆரம்ப கட்ட உறுப்பினர்களில் ஒருவரான திரு ஆர். சரவணன் சென்ற வாரம் ஒரு சாலை விபத்தில் மரணமடைந்தார்.
இது தொடர்பாக The Hindu ஆங்கில நாளிதழில் வெளியான செய்தி யின் தமிழாக்கம்:
“வேலூர் மாவட்டம் சோளிங்கரைச் சேர்ந்த 30 வயது ஐ.டி ஊழியர் ஒருவர் சாலை விபத்தில் ஏற்பட்ட காயங்களால் புதன் கிழமை (ஏப்ரல் 5, 2017) அன்று உயிரிழந்தார். கிழக்கு தாம்பரத்தில் வசிக்கும் திரு ஆர். சரவணன் கேம்ப் ரோட்டில் அவரது இரு சக்கர வாகனத்தில் போய்க் கொண்டிருந்தார். ஒரு பேருந்தை முந்திச் செல்ல முயற்சிக்கும் போது கட்டுப்பாட்டை இழந்த அவர் ஒரு லாரியின் மீது மோதி லாரி சக்கரங்களுக்குக் கீழ் விழுந்திருக்கிறார். சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரவணன், புதன் கிழமை அதிகாலையில் விபத்தில் ஏற்பட்ட காயங்களால் உயிரிழந்தார். லாரி ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.”