- டி.சி.எஸ் வேலை நீக்கங்களுக்கு எதிராக
- மேனேஜரின் பேராசைக்கு பலிகொடுக்கப்படும் ஊழியர்கள்
- ஐ.டி ஆட்குறைப்புக்கு எதிராக பு.ஜதொ.மு சட்டப் போராட்டம், மக்கள் திரள் பிரச்சாரம்
- ஆள் குறைப்பு அறமாகாது – ஜூனியர் விகடன்!
- ஆட்குறைப்புக்கு எதிராக தொழில்தாவா தயாரிப்பு – பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு
- “ஆட்குறைப்பு இல்லை, திறமை குறைவுதான்” – நாஸ்காம், “அரசு தலையிட வேண்டும்” – பு.ஜ.தொ.மு : விவாதம்
- புகார் கொடுத்த சி.டி.எஸ் ஊழியர்களுக்கு புராஜக்ட் ஒதுக்கவும் – தொழிலாளர் துறை
ஐ.டி /ஐ.டி சேவைத் துறை நிறுவனங்களின் ஆட்குறைப்பு நடவடிக்கை தொடர்பாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிடப்பட்ட செய்தி
அன்பார்ந்த ஊடகவியலாளர்களே,
பொருள் : விப்ரோ, காக்னிசன்ட் (சி.டி.எஸ்), டெக் மகிந்த்ரா, ஐ.பி.எம் மற்றும் பிற ஐ.டி/ஐ.டி சேவைத் துறை நிறுவனங்களில் நடந்து வரும் பெருவீத ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு எதிரான பு.ஜ.தொ.மு-வின் மக்கள் திரள் இயக்கம்.
கடந்த 2 மாதங்களாக ஐ.டி நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் லே ஆஃப் செய்யப்படுவதாக ஊடகங்களில் செய்தி வெளிவருகின்றன. நூற்றுக்கணக்கான பேர் பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவை தொடர்பு கொண்டு நிறுவனங்கள் தங்களை கட்டாயப்படுத்தி பதவி விலக வைப்பதாக புகார் தெரிவித்திருக்கின்றனர்.
ஊழியர்களுக்கு காரணமின்றி குறைவான தரவரிசை வழங்கி, அதன் அடிப்படையில் வேலையை விட்டு விலகுமாறு எச்.ஆர் அதிகாரிகளால் மிரட்டப்படுகின்றனர். ஆனால், தங்கள் நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடக்கவில்லை என்றும் சில ஊழியர்கள் தாமாகவே பதவி விலகல் கொடுப்பதாகவும் இந்நிறுவனங்கள் ஊடகங்களில் தெரிவிக்கின்றனர்.
ஐ.டி நிறுவனங்களின் இந்த சட்ட விரோத நடவடிக்கையை பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு எதிர்க்கிறது. நேற்று (மே 16, 2017 செவ்வாய்க் கிழமை) ஐ.டி ஊழியர்கள் ஒரு குழுவாகச் சென்று தமிழ்நாடு அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை செயலாளரை சந்தித்து இது தொடர்பாக முறையிட்டோம். வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக மானிய விலையில் நிலம், மின்சாரம், வரிச்சலுகை என ஐ.டி நிறுவனங்களுக்கு அரசு வழங்குகிறது. எனவே, ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை பறிக்கும் இந்த விஷயத்தில் அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்தோம்.
பாதிக்கப்பட்ட ஊழியர்களை திரட்டி தொழிலாளர் துறையில் தொழில் தாவா தாக்கல் செய்யவும் ஏற்பாடு செய்து வருகிறோம்.
இந்த சட்ட விரோத ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கண்டித்தும், ஐ.டி ஊழியர்கள் அனைவரும் தொழிற்சங்கமாக அணிதிரளும்படி அறைகூவல் விடுத்தும் பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு நாளை (மே 18, 2017) மாலை 5 மணி முதல் 7 மணி வரை சென்னை ஓ.எம்.ஆர் சோழிங்கநல்லூர் சிக்னலுக்கு அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.
இது தொடர்பான செய்திகளை உங்கள் ஊடகத்தில் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உங்கள் உண்மையுடன்,
எஸ். கற்பக விநாயகம்,
அமைப்பாளர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவு, தமிழ்நாடு
சென்னை
மே 17, 2017