டி.சி.எஸ் வேலை நீக்கங்களுக்கு எதிராக

ந்தியாவின் முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ் – TCS), 25000-க்கும் அதிகமான ஊழியர்களை வேலைநீக்கம் செய்ய திட்டமிட்டு அமல்படுத்தி வருகிறது. ‘இது வழக்கமான நடைமுறைதான், திறமை குறைந்தவர்களை நீக்கி விட்டு புதியவர்களை சேர்க்கிறோம்’ என்று இதற்கு விளக்கம் சொல்லியிருக்கிறார் டி.சி.எஸ் தகவல் தொடர்பாளர்.

ஆனால், பத்திரிகைகளில் வெளியான செய்திகளும், இணையத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள் வெளியிட்டுள்ள தகவல்களும், எங்களை
தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்ட டி.சி.எஸ் ஊழியர்கள் தெரிவித்த விபரங்களும் மேல் மட்ட ஊழியர்களில் 3-ல் ஒரு பகுதியினர் வேலை நீக்கம்
செய்யப்படுகின்றனர் என்பதை உறுதி செய்கின்றன.

அமெரிக்க, மேற்கு ஐரோப்பிய நாடுகளில் 2008-ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, அந்நாடுகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள்
செலவுகளை குறைக்கும்படி நெருக்கடி கொடுத்தனர். மேலும், ஒவ்வொரு காலாண்டும் லாப வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும் என்ற பங்குச் சந்தையின்
அழுத்தம் தொடர்ந்தது. வருமான சரிவை ஈடுகட்ட, ஊழியர்களுக்கு அளித்து வந்த வசதிகளை படிப்படியாக குறைத்து, வேலைப் பளுவை அதிகரித்தன இந்திய ஐ.டி நிறுவனங்கள். இப்போது, அடுத்த கட்டமாக அனுபவம் வாய்ந்த, அதிக ஊதியம் பெறும் ஊழியர்களை நீக்கி விட்டு குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய முன்வரும் இளைஞர்களை பணியில் அமர்த்துவதன் மூலம் லாப வீதத்தை பராமரிக்கும் அணுகுமுறையை கடைப்பிடிக்க ஆரம்பித்திருக்கின்றன.

அந்த வகையில் 35 வயதே ஆன பணியில் மூத்த 25,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்யும் டி.சி.எஸ் வரும் நிதியாண்டில் 55,000 புதிய ஊழியர்களை எடுக்கப் போவதாக அறிவித்திருக்கிறது.

கல்லூரிப் படிப்பை முடித்த இளம் பட்டதாரி இளைஞர்கள் தமது எதிர்கால முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, குறைந்த சம்பளத்தில் நீண்ட நேரம் உழைப்பது, கூடுதல் சுமைகளை ஏற்றுக் கொள்வது என்ற முறையில் இந்த நிறுவனங்களை தமது உழைப்பால் வளர்த்து வருகின்றனர். ஆனால், அதே இளைஞர்கள் திருமணம் செய்து குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, குழந்தைகளின் படிப்பு, வீட்டுக் கடன், மருத்துவச் செலவுகள் என்று அதிகரித்த தேவைகளைசந்திக்கும் நேரத்தில், நிறுவனத்தின் லாப நோக்கத்திற்காக அவர்களது அனுபவத்தையும் திறமையையும் கணக்கில் கொள்ளாது அவர்களது பணி வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறது டி.சி.எஸ்.

டி.சி.எஸ்சின் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையை புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. இதனை சட்ட ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் எதிர் கொள்வதற்கு வினவு இணையதளத்துடன் இணைந்து பிரச்சாரம், அரங்கக் கூட்டம், மற்றும் இணைய விவாதங்கள் மூலம் ஐ.டி துறை ஊழியர்களை அணி திரட்டி வருகிறது.

இவண்
சுப தங்கராசு,
பொதுச் செயலாளர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு.

மேலும் விபரங்களுக்கு
பேஸ்புக் : https://www.facebook.com/VinavuCombatsLayoff
தொலைபேசி : 9003198576, 94444106479
மின்னஞ்சல் : combatlayoff@gmail.com
இணைய தளம் : http://www.vinavu.com

Series Navigationமேனேஜரின் பேராசைக்கு பலிகொடுக்கப்படும் ஊழியர்கள் >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-press-release-on-tcs-retrenchment-ta/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
ஆசை காட்டி விரித்த ஆதார் சூழ்ச்சி வலை

"சொன்னது எல்லாம் ஏய்க்கிற பேச்சு ஆதார கழுத்தில கட்டி மேய்க்கிற சூழ்ச்சி"

எச்.ஆர் மிரட்டலை எதிர்கொள்வது எப்படி? – ஐ.டி சங்கக் கூட்டம்

பொய் குற்றச்சாட்டுகளுக்கு பயப்பட தேவையில்லை. நிர்வாகம் தனது விருப்பப்படி ஒரு ஊழியரை வேலையை விட்டு நீக்க முடியாது. முறையான சட்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இதை தெரிந்து...

Close