தூசான் தொழிலாளர்களின் போராட்டத்தை சீர்குலைக்க முதலாளிகளின் எச்சில் காசுக்கு ஆசைப்பட்டு போராடிய தொழிலாளர்கள் அனைவரையும் போலீஸ் கைது செய்துள்ளது
தோற்க பிறந்ததல்ல தொழிலாளி வர்க்கம்!
ஆள பிறந்தது!!
என்பதற்கேற்ப நாம் அனைவரும் தூசான் தொழிலாளர்களுக்கு ஆதரவு தர வேண்டும்.
கூடுதல் விபரங்களுக்கு : https://www.facebook.com/ndlftn/
அன்பார்ந்த தோழர்களே / நண்பர்களே,
சென்னை பூவிருந்தவல்லி- சென்னீர்குப்பம் பைபாஸ் சாலையில் இருக்கும் தென்கொரிய நிறுவனமான தூசான் பவர் சிஸ்ட்ம்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தொழிலாளர் விரோதப்போக்கு மற்றும் சட்டவிரோதப் போக்குகளைக் கண்டித்து எமது தூசான் தொழிலாளர் சங்கம் கடந்த 16 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. சுமார் 170 தொழிலாளர்கள் ஆலைக்குள்ளேயும், 11 பேர் ஆலைக்கு வெளியேயும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் நிர்வாகம் நிறுத்தி விட்டது. இதனால் தொழிலாளர்களுக்கு வெளியிலிருந்து உணவு தயாரித்து தரப்படுகிறது. இந்நிலையில் பூவிருந்தவல்லி முன்சீப் நீதிமன்றம், திருவள்ளூர் முதன்மை நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் என பல நீதிமன்றங்களில் நிர்வாகம் பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளதால் அவற்றை எதிர்கொள்ள மூத்த வழக்கறிஞர் திரு.பாலன் அரிதாஸ் அவர்களை எமது சங்கத்தின் சார்பில் நியமித்து உள்ளோம்.
உணவு, வழக்கு செலவுகள் காரணமாக எமது சங்கத்தின் நிதி இருப்பு ஏறக்குறைய பூச்சியம் என்கிற நிலையை எட்டி உள்ளது.
எமது தொழிலாளர்கள் ஒற்றுமை குலையாமல் உறுதியோடு போராடி வருவதை பணம் என்கிற ஒற்றை சொல் வீழ்த்தி விடக்கூடாது என்பதை நாங்கள் உணர்கிறோம். இந்த சூழலில் தொழிலாளி வர்க்கம் தோற்கக்கூடாது என்று விரும்புகின்ற தொழிற்சங்கங்கள், தனிப்பட்ட தொழிலாளர்கள், சமூக உணர்வு கொண்டவர்கள் எமது போராட்டத்துக்கு நிதியளித்து உதவி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
எமது சங்கத்தின் வங்கிக்கணக்கு விபரம்.
Doosan Employees Union.
SB A/c No.9214101004773
Canara Bank, Senneerkuppam B O
Poonamallee
IFSC code CNRB0009214
எமது கோரிக்கைகளை வலுப்படுத்த உதவுவதோடு, இந்த செய்தியை தங்களது நண்பர்கள், உறவினர்களுக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன்
இவண்,
ம.செ.சந்திரமோகன்,
பொதுச் செயலாளர்
9841836348h
கூடுதல் விபரங்களுக்கு : https://www.facebook.com/ndlftn/