எமதருமை ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்களே! இன்னும் என்ன தயக்கம்?

விப்ரோ ஊழியர்களின் உரிமைகளை நிலைநாட்டியுள்ளது, பு.ஜ.தொ.மு !

  • ஐ.டி துறையில் தொழிலாளர் சட்டங்களுக்கு இடமில்லை என்றனர்,
    ஐ.டி துறைக்கு தொழிற்தகராறு சட்டம் உள்ளிட்ட தொழிலாளர் நலச்சட்டங்கள் அனைத்தும் பொருந்தும் என்று அரசை அறிவிக்க வைத்தது, பு.ஜ.தொ.மு!
  • ஐ.டி ஊழியர்கள் தொழிற்சங்கம் துவங்க முடியாது என்றனர் கார்ப்பரேட்டுகள்,
    நாட்டில் முதன்முறையாக ஐ.டி ஊழியர்களை தொழிற்சங்க உறுப்பினராக்கிக் காட்டினோம்!
  • குறைந்த எண்ணிக்கை ஊழியர்களுக்காக தொழிற்சங்கம் வழக்குப்போட முடியாது என்றது, விப்ரோ,
    ஒரேஒரு ஊழியருக்காகக்கூட தொழிற்சங்கம் வழக்குப்போட முடியும் என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பால் விப்ரோவின் வாதத்தை வீழ்த்தினோம்!
  • கட்டாய ராஜினாமா நடக்கவில்லை என்று பதறுகிறது விப்ரோ நிர்வாகம்,
    இவ்வாறாக கட்டாய ராஜினாமாவே செல்லாது என்பதை நிலைநாட்டியுள்ளோம்!
  • பெஞ்சில் உட்கார வைப்பது ஐ.டி துறை நடைமுறை என்றது, விப்ரோ!
    நினைத்தபடி பணி கொடுக்க மறுப்பதற்கு இது ஒன்றும் பண்ணையோ, பெட்டிக்கடையோ அல்ல என்று பதிலடி கொடுத்து பெஞ்சுகளை ஆட்டம் காண வைத்துள்ளோம்!
  • பெஞ்ச் காலத்தில் சம்பளவெட்டு இருக்கும் என்றது, விப்ரோ!
    ஒற்றை ரூபாய்கூட குறையக்கூடாது என்று தொழிலாளர் அலுவலரையே அறிவுரை கூறவைத்துள்ளோம்!

பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர் பிரிவின் உரிமைப்போராட்டம் விப்ரோவுக்கு மட்டுமல்ல,
அனைத்து ஐ.டி நிறுவனங்களுக்கும் பொருந்தக்கூடியதே!

எமதருமை ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்களே!
இன்னும் என்ன தயக்கம்?
பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர் பிரிவில் உறுப்பினராக சேருங்கள்!.
நமது உரிமைகளை நிலைநாட்டுவோம், வாருங்கள்!

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவு

தொடர்புக்கு
சுகேந்திரன், செயலாளர், 90031 98576
விஜயகுமார், சிறப்புத் தலைவர், 94441  06479
ndlfitunion@gmail.com என்ற முகவரிக்கு எழுதுங்கள்
www.new-democrats.com

Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-upholds-the-rights-of-it-employees-ta/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
காண்டிராக்ட் முறைக்கு முடிவு கட்டு! முதலாளித்துவத்துக்கு சவக்குழி வெட்டு! – நோட்டிஸ்

கருத்தரங்கம் : 28.1.2018 காலை 9.30 மணி கேரளா சமாஜம், நேரு பூங்கா அருகில், பெரியார் நெடுஞ்சாலை, சென்னை பொதுக்கூட்டம் : 28.1.2018 மாலை 6 மணி...

இந்தியாவில் இனவெறி? 2500 ஆண்டுகளாக அறியப்பட்ட சாதிவெறி

பாலினம், வயது மற்றும் நிற வித்தியாசமின்றி பார்க்கும் அனைவருடனும் விளையாடும் மகன் எனக்கு இருக்கிறான். அந்த சிறுவன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். என் மகனின் எதிர்காலத்தைப் பற்றி...

Close