«

»

Print this Post

பண மதிப்பு நீக்கமும், முதலாளித்துவமும் – ஐ.டி சங்கக் கூட்டம்

This entry is part 17 of 21 in the series பண மதிப்பு நீக்கம்
 1. கருப்புப் பணத்தின் மீது மோடியின் “சர்ஜிகல் ஸ்டிரைக்”
 2. டாலர்-ரூபாய், அமெரிக்கா-இந்தியா பற்றி இந்துத்துவ பிதற்றல்கள்
 3. ரூபாய் நோட்டு செல்லாததானது – உழைப்பாளிகளுக்கு ஐ.டி சங்கத்தின் மடல்
 4. கருப்புப் பண ஒழிப்பு மோசடி – மக்கள் அதிகார நிலைப்பாடு
 5. கருப்புப் பணத்தை ஒழிக்க முடியுமா?
 6. “10 நாட்களில் பிறக்குமா புதிய இந்தியா” தொலைக்காட்சி விவாதம்
 7. வங்கியில் பணத்தை எடுப்போம், வங்கிக் கணக்கை முடிப்போம் – மக்கள் அதிகாரம் அறைகூவல்
 8. டெல்டா விவசாயம் நெருக்கடியில்! விவசாயிகள் தற்கொலை! ரூபாய் நோட்டு பிடில் வாசிக்கிறார் மோடி!
 9. செல்லாத நோட்டு, கருப்புப் பணம், டிஜிட்டல் பணம் – யதார்த்தம் சொல்லும் பெண்கள்
 10. வங்கிப் பணத்தை எடுப்போம்! வங்கிக் கணக்கை முடிப்போம்!
 11. பணமதிப்பு நீக்கம் – மோடிக்கு பொறுப்பில்லையாம்!
 12. ரூபாய் நோட்டு சாவுகள் : இப்போது வேலைப் பளுவால் வங்கி மேலாளர் இறப்பு
 13. கருப்புப் பண ஒழிப்பு : ஆட்டோ தொழிலாளியின் சவுக்கடி
 14. மக்கள் மீது மோடியின் தாக்குதல் : கருப்புப் பணத்தை ஒழித்து விடுமா?
 15. ரூ 500, 1000 செல்லாது! மோடியின் கருப்புப் பண மோசடி!
 16. பண மதிப்பு நீக்கம் பற்றி ப. சிதம்பரம் – நீங்க நல்லவரா… கெட்டவரா…?
 17. பண மதிப்பு நீக்கமும், முதலாளித்துவமும் – ஐ.டி சங்கக் கூட்டம்
 18. மலையைக் கெல்லி எலியைக் கோட்டை விட்ட ‘திறமை’சாலி மோடி!
 19. “மோடியின் 2000 ரூபாய் திட்டம்” – உழைக்கும் மக்கள் சவுக்கடி, குமுறல் – வீடியோ
 20. பண மதிப்பு நீக்கம் : பணமும் இல்லை, வாழ்வும் இல்லை
 21. 5% வளர்ச்சியை 7% ஆகக் காட்டி மோசடி செய்யும் மோடி அரசு!

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர் பிரிவின் அறைக்கூட்டம் டிசம்பர் 24, 2016 காலை 10 மணியளவில் நடைபெற்றது. சங்க உறுப்பினர்களும்,  சங்க செயல்பாடுகளில் ஆர்வம் கொண்ட பிற ஐ.டி நிறுவன ஊழியர்களும், அரசியல் செயல்பாட்டாளர்களும் என்ற பல்வேறு தரப்பினர் கூடியிருந்தனர்.

முதலில் சங்க நடவடிக்கைகள் பற்றிய உரை, அதைத் தொடர்ந்து பண மதிப்பு நீக்கம் பற்றிய விவாதம், இறுதியில் கேப்பிடலிசம் எ லவ் ஸ்டோரி என்ற ஆவணப் படம் திரையிடல் என்று நிகழ்ச்சி நடைபெற்றது.

ஐ.டி ஊழியர் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் தோழர் கற்பக வினாயகம் சங்க நடவடிக்கைகள் பற்றி விளக்கினார்.

“டி.சி.எஸ்-ல் பணி புரியும் நமது சங்க உறுப்பினர் ஒருவரது வேலையில் சிறப்பாக பணி யாற்றியதற்கான விருதுகள் எல்லாம் வாங்கியிருந்தாலும், ஒரு ஆண்டு நிர்வாகத்துக்கே தெரிந்த ஏதோ காரணத்துக்காக D ரேட்டிங் கொடுத்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து அவரது சம்பளத்தையும் வெட்டியிருக்கிறார்கள்.

இது போன்று ஒரு ஊழியரின் சம்பளத்தை குறைப்பதற்கு சட்டப்படி வழி கிடையாது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, இதை விசாரித்து தீர்வு காணுமாறு நீதிமன்றம் தொழிலாளர் துறைக்கு ஆணை பிறப்பித்தது. இந்த வழக்கு தொழிலாளர் துறையில் தொடர்ந்து நடந்து வருகிறது. பலமுறை நினைவூட்டலுக்குப் பிறகு டிசம்பர் 22-ம் தேதி விசாரணைக்கு வருமாறு, 22-ம் தேதி மாலை கையில் கிடைக்கும்படி அறிவிப்பு அனுப்பியிருந்தார்கள். அவர்களுடன் பேசி முறையிட்டு விசாரணையை ஜனவரி 5-ம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டிருக்கிறது.

இரண்டாவதாக, சி.டி.எஸ் நிறுவனம் ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளருக்கு வேலை செய்யும் குழுவினரை உணவு இடைவேளையை சேர்க்காமல் 9 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று அறிவிப்பு அனுப்பியதை எதிர்த்து தொழிலாளர் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதை விசாரித்து சி.டி.எஸ்-க்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டு சி.டி.எஸ் யாரையும் 8 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்ய கூறவில்லை என்று மறுப்பு கடிதம் அனுப்பியிருக்கிறது.

ndlf-action-in-chennai-tcs-1

கோப்புப் படம்

அதாவது, சட்டப்படி 8 மணி நேரம்தான் வேலை வாங்க வேண்டும் என்பதை சி.டி.எஸ் ஏற்றுக் கொண்டிருக்கிறது. இது நமது சங்கம் ஈட்டிய முக்கியமான வெற்றி. இதை பிரச்சாரமாகக் கொண்டு செல்ல வேண்டும். இணையதளத்தில் கட்டுரையாக எழுதுவது, போஸ்டர் அடித்து ஒட்டுவது, துண்டு பிரசுரங்கள் வினியோகிப்பது, வாட்ஸ்-அப், ஃபேஸ்புக்கில் செய்திகள் அனுப்புவது என்று இதை பரப்புரை செய்ய வேண்டும்.

மூன்றாவதாக, நமது சங்க உறுப்பினர் ஒருவரிடம் வேலை வாய்ப்புடன் கூடிய பயிற்சி என்று பணத்தை வாங்கிக் கொண்டு பின்னர் 6 மாதங்களுக்குப் பிறகு வேலையிலிருந்து நீக்கி விட்ட டி.சி.எஸ் மீது தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த புகார் தொடர்பான வழக்கில் டி.சி.எஸ் தரப்பு கலந்து கொள்ளவே இல்லை. சம்மன் அனுப்பியும் வரவில்லை. எனவே, சமரச முயற்சி தோல்வி என்று தொழிலாளர் துறை அறிக்கை கொடுத்திருக்கிறது. இதன் அடிப்படையில் டி.சி.எஸ் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும்.

இவை நவம்பர் – டிசம்பர் மாதங்களில் தொழிற்சங்கத்தின் முக்கியமான நடவடிக்கைகள்” என்று கூறி தோழர் தன் உரையை நிறைவு செய்தார்.

அதைத் தொடர்ந்து பண மதிப்பு நீக்கம் தொடர்பான விவாதம் நடைபெற்றது.

கருப்புப் பண ஒழிப்பு, கள்ள நோட்டை பிடிப்பது, பயங்கரவாதத்தை ஒழிப்பது ஆகிய காரணங்களுக்காக என்று அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டு மதிப்பு நீக்க நடவடிக்கையின் மூலம் இந்த நோக்கங்கள் எதையும் நிறைவேற்றப் போவதில்லை என்பது பல முறை விவாதிக்கப்பட்டு விட்டது. இப்போது சுற்றோட்டத்தில் இருக்கும் 15.4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளும் வங்கிகளில் போய் சேர்ந்து விடும் என்று தெரிகிறது.

ஆனால், பா.ஜ.கவும் மோடி அரசும் பல இடங்களில் ரெய்டு நடத்துவதாக செய்திகளை தொடர்ந்து வெளியிட்டும், வங்கி ஊழியர்களும், ரிசர்வ் வங்கியும் சேர்ந்து ஒரு நல்ல திட்டத்தை சீர்குலைப்பதாகச் சொல்லியும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதை எதிர்கொண்டு முறியடிக்க வேண்டியிருக்கிறது.

காலாவதி போன வேத, புராண நூல்களில் எல்லா அறிவும் அடங்கியிருக்கிறது என்று பிடிவாதம் பிடிக்கும் இந்தக் கும்பல் தவறு செய்து விட்டோம் என்பதை ஏற்றுக் கொள்ளப் போவதேயில்லை.

‘இப்போது கூட முழு தொகையையும் நோட்டாக வெளியிடப் போவதில்லை, எல்லோரும் மின்னணு பரிமாற்றங்களுக்கு மாறுங்கள்’ என்று சொல்கிறார்கள். ஆனால், இந்திய மக்களின் பொருளாதார நிலைமை காரணமாகவும், இதுவரையிலான சமூகத்தின் தொழில்நுட்ப வளர்ச்சி குறைபாடு காரணமாகவும், மக்களின் பழக்க வழக்கங்கள் காரணமாகவும் அதை அமல்படுத்துவது சாத்தியமேயில்லை.

ஆனால், இந்த நடவடிக்கைக்கு ஐ.டி துறையினர் மத்தியில் கணிசமான ஆதரவு இருக்கிறது. ‘இதனால் எனக்கு பிரச்சனை இல்லை’ என்று பேசுபவர்கள், ‘மோடி இதையாவது செய்தாரே கருப்புப் பணத்தை ஒழிக்க’ என்று சமாதானம் சொல்பவர்கள், எந்த பலனும் கிடைக்கவில்லை என்றால் அதோடு அதைப் பற்றி பேச மறுப்பவர்கள் என்று கண்மூடி ஆதரவாளர்களாக இருக்கிறார்கள்.

இதை மாற்றுவதற்கு அவர்கள் மத்தியில் பரப்புரை செய்ய வேண்டும். ரூபாய் நோட்டு மாற்றிக் கொடுப்பது தொடர்பாக வந்த முறைகேடுகள் அனைத்தையும் வங்கி ஊழியர்கள் மீது சுமத்த முயற்சிப்பது போல மின்னணு பரிமாற்றம் என்று வரும் போது அதில் வரும் பிரச்சனைகளை எல்லாம் ஐ.டி துறை மீது கூட போட ஆரம்பிப்பார்கள்.  அதனால் எனக்கென்ன என்று இருந்து விட முடியாது. சமூகத்தில் நடப்பது நம்மையும் பாதிக்கும். நாம் தனித்து ஒதுங்கி இல்லை.

வெனிசுலாவில் பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட போது மக்கள் போராடினார்கள். நம் நாட்டில் ஏன் போராடவில்லை? ஏனென்றால் 25 ஆண்டுகளாக போராடும் அமைப்புகள் சீர்குலைக்கப்பட்டிருக்கின்றன. தனிநபர் வாதம், சுயமுன்னேற்றம் என்ற பிரச்சாரம் செய்யப்பட்டு வந்திருக்கிறது. போராடுவது தனி மனிதர்களாக இருந்தால் சாத்தியம் இல்லை. அமைப்பாக திரள்வதுதான் மக்களுக்கு பலம். ஐ.டி ஊழியர்களை பொறுத்தவரை தொழிற்சங்கத்தில் அணிதிரள்வது மூலம்தான் நமது பிரச்சனைகளை எதிர்கொள்ளவும், இது போன்ற சமூக பிரச்சனைகளுக்காக போராடுவதும் சாத்தியமாகும்.

எனவே சங்கத்தை வலுப்படுத்துவது, நமது தொடர்புகளில் இருக்கும் நண்பர்களிடம் அரசியல் பேசுவது, விவாதிப்பது, சங்கத்தில் உறுப்பினராக சேர்ப்பது என்று பணியாற்றத் தொடங்க வேண்டும்.

பண மதிப்பு நீக்கம் தொடர்பாக படிக்க வேண்டிய நூல்கள், கட்டுரைகள், பார்க்க வேண்டிய வீடியோக்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை ஐ.டி ஊழியர்கள் மத்தியில் வினியோகிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

24-ம் தேதி மாலை பண மதிப்பு நீக்கம் தொடர்பாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் – வாகன ஓட்டுனர்கள் சங்கம் சோழிங்க நல்லூரில் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தோழர் கற்பக வினாயகம் அனைவரையும் கேட்டுக் கொண்டார்.

இறுதியாக, “Capitalism A Love Story” என்ற மைக்கேல் மூர் ஆவணப்படம் திரையிடப்பட்டது.

முதலாளித்துவ உற்பத்தி முறையில் லாப வேட்டை எங்கு கொண்டு விடுகிறது?

பணம் என்றால் என்ன, வங்கித்துறையின் செயல்பாடுகள் என்னென்ன?

கல்விக் கடன், வீட்டுக் கடன், பங்குச் சந்தை சூதாட்டம் என்று உழைக்கும் மக்களின் வாழ்க்கை எப்படி பொறிக்குள் சிக்க வைக்கப்படுகிறது, அவர்களது வீடு முதலான சொத்துக்கள் பறிக்கப்படுகின்றன?

இதற்கு அரசியல்வாதிகளும் அரசும் எப்படி உள்கையாக இருக்கின்றனர், வங்கித் துறையின் மீதான கட்டுப்பாடுகளை திட்டமிட்டு நீக்கி பொருளாதாரத்தையே ஒரு சூதாட்ட விடுதியாக எப்படி மாற்றினர்

என்று அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை மையமாகக் கொண்ட ஆவணப் படம் இது.

ஆவணப்படம் 2 மணி நேரத்துக்கும் முழுமையாக, பொறுமையாக அனைவரும் பார்த்தனர். படத்தின் இறுதியில் கைத்தட்டி தமது பாராட்டுதல்களை தெரிவித்தனர்.

“மைக்கேல் மூரின் பிற ஆவணப் படங்களையும் பார்க்கலாம். மேலும், இந்தப் படத்தில் அவர் முன் வைத்திருக்கும் பல விஷயங்களை வரலாற்று ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஆழமாக புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்” என்று கருத்து தெரிவிக்கப்பட்டது.

ஐ.டி ஊழியர்களின் இந்த தொழிற்சங்கக் கூட்டம் இன்றைய உலக முதலாளித்துவ கட்டமைப்பின் தலைமையகமான அமெரிக்காவின் நிலைமை, இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு கொள்கைள் உருவாக்க இருக்கும் எதிர்காலத்தை காட்டுவதாக இருப்பதை உணர்த்துவதாகவும் அதை எதிர்கொள்வதற்கு அமைப்புரீதியாக திரள்வதன் அவசியத்தை வலியுறுத்துவதாகவும் அமைந்தன.

Series Navigation<< பண மதிப்பு நீக்கம் பற்றி ப. சிதம்பரம் – நீங்க நல்லவரா… கெட்டவரா…?மலையைக் கெல்லி எலியைக் கோட்டை விட்ட ‘திறமை’சாலி மோடி! >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlt-it-employees-wing-meeting/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
சட்டத்தை மீறும் திருட்டு இன்டெக்ரா, உரிமைக்காக போராடும் தொழிலாளர்கள்!

பகுதி கதவடைப்பு (partial lock out) அறிவித்ததன் மூலம் சட்டத்தை மீற முயற்சித்தது இன்டெக்ரா நிர்வாகம். இது சட்டவிரோத நடவடிக்கை என தொழிலாளர் துறை அறிவித்த பின்னர்...

இன்றைய தேவை உரிமைகளை வெல்வதற்கான டெல்லிக்கட்டு

விவசாயிகளுக்கு மட்டுமா எதிரானது இந்த அரசு, விவசாயிகளுக்கும் ஒட்டு மொத்த மக்களுக்கும் எதிரானது. நமது பொருளாதார சுயேச்சையையும், உழவர்களின் வாழ்வையும் பாதுகாக்க களம் இறங்குவோம்! டெல்லி அதிகாரத்தை...

Close