வேலை நிறுத்தப் போராட்டத்தில் 40,000 வெரிசான் (Verizon) ஊழியர்கள்

நிறுவனத்துடனான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து சுமார் 40,000 வெரிசான் ஊழியர்கள் புதன் கிழமை அன்று வேலை நிறுத்தத்தில் இறங்கினார்கள். இது சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்க தகவல் தொழில்நுட்பத் துறையில் நடக்கும் மிகப்பெரிய வேலை நிறுத்தம்.

வெரிசான் தொழிலாளர்கள்

வேலை நிறுத்தத்துக்கு தயாராகும் வெரிசார் தொழிலாளர்கள்

அமெரிக்க தகவல் தொழிலாளர்கள் (CWA) மற்றும் சர்வதேச மின்துறை தொழிலாளர்களின் சகோதரத்துவம் (IBEW) ஆகிய வெரிசானின் பாரம்பரிய வயர்லைன் தொலைபேசி பணிகளில் ஈடுபடும் வாடிக்கையாளர் சேவை ஊழியர்கள், நெட்வொர்க் டெக்னிசியன்களின் சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருக்கின்றன.

கடந்த 3 ஆண்டுகளில் வெரிசான் ஈட்டிய லாபம் $3,900 கோடி (சுமார் ரூ 2.65 லட்சம் கோடி), 2016-ன் முதல் மூன்று மாதங்களில் ஒவ்வொரு மாதமும் ஈட்டிய லாபம் $180 கோடி (சுமார் ரூ 12,240 கோடி). இருந்த போதிலும் தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்புகளை ஒழித்துக் கட்டுவது, மேலும் மேலும் பணிகளை காண்டிராக்ட்டுக்கு விடுவது, மெக்சிகோ, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு பணிகளை அவுட் சோர்ஸ் செய்வது, தொழில்நுட்ப ஊழியர்களை 2 மாதங்கள் வரை குடும்பத்தை விட்டுப் பிரிந்து வெளியூர்களில் வேலை செய்யக் கட்டாயப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை திணிக்க முயற்சிக்கிறது, வெரிசான். மேலும், 2014-ல் யூனியன் அமைத்துக் கொண்ட வயர்லெஸ் பிரிவு சில்லறை விற்பனை ஊழியர்களுக்கு எந்த விதமான சம்பள உயர்வு, நலத் திட்டங்கள், பணிச் சூழல் மேம்பாடு குறித்து விவாதிக்க மறுத்து வருகிறது வெரிசான்.

வெரிசான் தொழிலாளர்கள்

வேலை நிறுத்தம் செய்யும் வெரிசான் தொழிலாளர்கள்

இந்த வேலை நிறுத்தத்தினால் அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள நியூயார்க், மசாசுசெட்ஸ், விர்ஜினியா உள்ளிட்ட மாநிலங்களில் வெரிசான் வழங்கும் Fios இணையம், தொலைபேசி, தொலைக்காட்சி சேவைகள் பாதிக்கும்.
புதன்கிழமை (ஏப்ரல் 13, 2016) அன்று நியூயார்க்கில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வெரிசான் கடைகளுக்கு வெளியில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்; “வெறுத்துப் போயிருக்கிறோம், தொழிற்சங்கத்தை உடைக்கிறார்கள்” என்று முழக்கமிட்டனர்; “வெரிசானின் கார்ப்பரேட் பேராசைக்கு எதிராக” என்ற அட்டைகளை பிடித்திருந்தனர்.

“எங்களை குடும்பத்தைப் பிரிந்து வெளி மாநிலங்களுக்குப் போய் வேலை செய்ய வைக்க முயற்சிக்கின்றது நிறுவனம். எங்கள் குடும்பங்களை நாங்கள் எப்படி கவனித்துக் கொள்ள முடியும்?” என்கிறார் வெரிசானில் 37 ஆண்டுகளாக பணி புரியும் 59 வயதான தகவல்தொழில்நுட்ப உதவியாளர் அனிதா லோங். “ஒரு மாதத்துக்கு 1 பில்லியன் டாலர் லாபம் சம்பாதிக்கும் நிறுவனம், எங்களுக்கு போதுமான சம்பளம் தர முடியாது என்று எப்படி சொல்ல முடியும்?” என்று கேட்கிறார் புரூக்ளினில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அவர்.

பெர்னி சாண்டர்ஸ்

வெரிசான் தொழிலாளர்களுககு ஆதரவாக பெர்னி சாண்டர்ஸ்

அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் தேர்வுக்கு போட்டியிடும் பெர்னி சாண்டர்ஸ் புரூக்ளின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றினார். “உழைக்கும் அமெரிக்கர்களின் வாழ்க்கையை நாசமாக்க முயற்சிக்கும் இன்னும் ஒரு முக்கியமான அமெரிக்க கார்ப்பரேசன் இது” என்றார் அவர்.

ஜனநாயகக் கட்சி வேட்பளார் தேர்வில் முன்னணியில் இருக்கும் ஹில்லாரி கிளிண்டனும் வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ள தொழிலாளர்களை ஆதரித்துள்ளார். வெரிசான் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். “நமது தொழில்களையும், பொருளாதாரத்தையும் இயங்க வைக்கும் தகவல்தொடர்பு கட்டமைப்பின் ஒரு பகுதியான இந்த ஆண்,பெண் தொழிலாளர்களை நம்பித்தான் நாம் இருக்கிறோம்” என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

செய்திக்கான சுட்டிகள்

Permanent link to this article: http://new-democrats.com/ta/nearly-40000-verizon-workers-on-strike/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
இன்ஃபோசிஸ் பணமூட்டைகளின் குடுமி பிடிச்சண்டை – ஊழியர்கள் நடுக்கடலில்

நிறுவனத்தின் ரகசியங்கள் வெளியில் போய் விடாமல் பாதுகாக்க அந்த தொகை வழங்கியதாக கூறியிருக்கிறது, இன்ஃபோசிஸ். முறைகேடுகளை மறைப்பதற்காக பணம் கொடுக்கப்பட்டதா என்று கேள்வி எழுப்புகிறார் நாராயணமூர்த்தி.

செக்யூரிட்டிகள் – சோற்றுக்கான போராட்டம்!

சரி... சம்பளமாவது சரியாகத் தருவார்களா என்றால், பிரதிமாதம் 10-ம் தேதி முதல் பீல்டு ஆபிசர் எப்போது வருவார் என எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும். அவராகக் கூப்பிட்டு கொடுத்தால்...

Close