- இயற்கை பேரிடர் காலத்தில் நமது பணி பற்றி – ஒரு ஐ.டி ஊழியர்
- கஜா புயல் நிவாரண பணியில் நாமும் இறங்க வேண்டும், ஏன்? – பு.ஜ.தொ.மு
- கஜா புயல் : வீடுகளை கட்டிக் கொடுத்தாலும் கூட வாழ்வதற்கு எந்த பொருட்களும் இல்லை!
- கஜா : அரசியலை புரிய வைப்பதே நீண்ட கால கடமை
- கஜா புயல் : ஒட்டு மொத்த அழிவு, எளிய மக்கள் மீது அதிக சுமை
- கஜா புயல் : யார் முறையான நிவாரணம் வழங்க முடியும்?
- கஜா புயல் நிவாரணப் பணி : எப்படி தயாரித்துக் கொள்ள வேண்டும்?
- கஜா புயல் : நிவாரணம் வழங்குவது லேசுப்பட்ட வேலை இல்லை!
அன்பார்ந்த தொழிலாளர்களே / உழைக்கும் மக்களே!
தானே புயல், வர்தா புயல், சென்னை மழை வெள்ளம் காலங்களை போலவே இப்போதும் கஜா புயல் மீட்பு பணியில் மத்திய, மாநில அரசுகள் ஆர்வம் காட்டவில்லை!

கார்ப்பரேட்களுக்கு ஆதரவாகவும் மக்களுக்கு எதிராகவும் செயல்படும் இந்த அரசு கட்டமைப்பில் மக்களுக்கு எந்த பிரச்சனைக்கும் முழுத் தீர்வும் நிவாரணமும் கிடையாது!
கஜா புயல் தாண்டவத்தால் வீடிழந்து, உடைமையிழந்து, ஆடு, மாடு, மரங்கள் பொருளாதாரத்தை இழந்து சொந்த மண்ணில் அகதிகளாகிவிட்டனர், மக்கள்!
GST மூலம் ஆண்டு 13 லட்சம் கோடி வரை வழிப்பறி செய்யும் அரசுகள் மக்களை காப்பாற்ற பாதுகாப்பு படை, வாகனங்கள் ஏதும் அனுப்பத் தயாரில்லை!
அரசின் மெத்தனப் போக்கிற்கு காரணம் என்ன?
மீத்தேனுக்காக டெல்டா மாவட்டங்களை விழுங்க குறிவைத்து கார்ப்பரேட் கம்பெனிகள் காத்திருக்கிறது.
மத்திய, மாநில அரசுகளின் பொருளாதார கொள்கை மக்களையும் நாட்டையும் சூறையாடி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்ப்பதாக உள்ளது.
சூத்திர சாதியினர் கால்நடைகள், உடைமைகள் வைத்துக் கொள்ளக்கூடாது என்று மனுதர்மம் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் தொழிலாளி அற்பக்கூலி என்கிறது, கார்ப்பரேட் முதலாளித்துவம்!
கார்ப்பரேட் சுரண்டல் கொள்கையும் ஆரிய மனு தர்மப்படி இயங்கும் அரசுகள் மக்களுக்கு எந்த சேவையும் செய்யாது!
உதாரணமாக: கல்வி உரிமை பறிப்பு, இன- மொழி அடையாளங்கள் அழிப்பு, தொடரும் சாதி படுகொலைகள் மனுதர்மம் நூலில் நூற்றாண்டுகள் முன் சொல்லப்பட்ட விஷயங்கள் நடைமுறையை கொண்டிருக்கிறது!
ஒரு வீட்டிற்கு தூய்மை இந்தியா திட்டம் மூலம் ஆண்டுக்கு 365 ரூபாய் கொள்ளையடிக்கும் அரசுகள் புயலில் முறிந்த மரங்கள், மின் கம்பங்கள் அகற்ற செயல்பட மறுக்கிறது!
கார்ப்பரேட்களுக்கு ஆதரவாகவும் மக்களுக்கு எதிராகவும் செயல்படும் இந்த அரசு கட்டமைப்பில் மக்களுக்கு எந்த பிரச்சனைக்கும் முழுத் தீர்வும் நிவாரணமும் கிடையாது!
- கஜா புயல் நிவாரணப் பணியில் இறங்குவோம்!
- துயர் துடைப்போம்! மக்களை பாதுகாப்போம்!
- மாற்று அதிகாரங்களை கட்டியமைப்போம்!
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி !
தமிழ்நாடு – 944444 2374