இன்றைய தேவை உரிமைகளை வெல்வதற்கான டெல்லிக்கட்டு

ன்பார்ந்த ஐ.டி. துறை நண்பர்களே!

ஜல்லிக்கட்டு விளையாடுபவர்களின் உரிமையையும், மாடுகளின் வாழ்வையும் பாதுகாக்க ஜல்லிக்கட்டு விளையாடாதவர்களும், மாடு வளர்க்காதவர்களும் போராடுகின்றனர். நகரங்களில் வாழ்பவர்களும், இணையத்தில் இயங்குபவர்களும் போராடுகின்றனர்.

ஜல்லிக் கட்டுக்கு மட்டுமா எதிரானது இந்த அரசு, ஒட்டு மொத்த விவசாயத்துக்கே எதிரானது.

 • உச்சநீதி மன்ற உத்தரவை காட்டி ஜல்லிக்கட்டை தடை செய்யும் இதே மோடி அரசு
  உச்சநீதி மன்றம் உத்தரவிட்டும் காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்தது
 • சட்ட ஒழுங்கை காரணம் காட்டி போராடும் மக்கள் மீது பாயும் போலீசு
  காவிரியை மறுக்க கர்நாடகாவில் இனவெறியை தூண்டி பா.ஜ.க கலவரம் நடத்திய போது வேடிக்கை பார்த்தது
 • விவசாய அழிவால் திருப்பூருக்கும், பெங்களூருவுக்கும், சென்னைக்கும் வேலை தேடிச் சென்ற விவசாயிகளை
  மோடியின் பண மதிப்பு நீக்க நடவடிக்கை அங்கிருந்தும் துரத்தியது.
 • திரும்பிய இடம் எல்லாம் கதவுகள் அடைக்கப்பட நம்பிக்கை இழந்து உயிரை இழக்கின்றனர் விவசாயிகள்.
 • கார்ப்பரேட்டுகளுக்கு நிலம், கார்ப்பரேட்டுகளுக்கு நீர், கார்ப்பரேட்டுகளுக்கு மின்சாரம்
  விவசாயத்துக்கு உரமானியம் ரத்து, விளைபொருட்ளுக்கு உத்தரவாத விலை இல்லை
  உரம், விதை, எந்திரம் விற்று கொள்ளையடிக்க கார்ப்பரேட்டுகளுக்கு கம்பளம்
  பயிர் பொய்த்தால் இழப்பு வழங்கக் கூட காப்பீடு நிறுவனங்களுக்கு காண்ட்ராக்ட்

விவசாயிகளுக்கு மட்டுமா எதிரானது இந்த அரசு, ஒட்டு மொத்த மக்களுக்கும் எதிரானது.

நமது ஜனநாயக உரிமைகளையும், உழவர்களின் வாழ்வையும் பாதுகாக்க களம் இறங்குவோம்!

டெல்லி அதிகாரத்தை எதிர்ப்போம்! தமிழக உரிமைக்கு குரல் கொடுப்போம்! ஜனநாயகத்தை மீட்போம்!
அன்னிய நிறுவனங்களை முறியடிப்போம்! நாட்டை காப்போம்!

தொடர்பு கொள்ள :
தோழர் கற்பக வினாயகம், அமைப்பாளர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவு

தொலைபேசி : 9003198576
மின்னஞ்சல் : combatlayoff@gmail.com

Permanent link to this article: http://new-democrats.com/ta/need-of-the-hour-fight-for-democratic-rights/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
வெரிசான் இறக்கிய பேரிடி தாக்குதல் : ஐ.டி ஊழியரின் நேரடி அனுபவம்

எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல், எந்த மனசாட்சியும் இல்லாமல், அட்டூழியமாகத்தான் தகவல் தொழில்நுட்பத்துறை இயங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு முடிவு கட்டுவதற்கு எல்லோரும் யூனியனா இணைந்து தடுத்தால்தான் உண்டு

2018-ல் ஐ.டி யூனியனின் முதல் கூட்டம் – அனைவரும் வருக

தொழிலாளர் துறை, நீதிமன்றங்கள், அரசியல்வாதிகள் அடங்கிய இந்த அரசமைப்பு யாருடைய நலனுக்காக செயல்படுகிறது என்ற கேள்வி எழுப்ப வேண்டியதன் அவசியத்தை சென்ற ஆண்டு அனுபவங்கள் நமக்கு உணர்த்தின....

Close