உழைக்கும் வர்க்கத்தின் உண்மை விடுதலையை வெல்ல உறுதி கொள்வோம்

72 ஆவது சுதந்திரதின விழா நாடு முழுவதும் அரசாலும் ஆளும் வர்க்கத்தாலும் அனுசரிக்கப்படுகிறது. உழைக்கும் மக்களால் உளமாற அனுசரிக்கப்படுகிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அப்படி ஓர் உழைக்கும் மக்கள் அனைவரும் விமரிசையாக கொண்டாட வேண்டிய ஓர் சுதந்திரதினம் எப்படி அமையும்?

நமது பள்ளிப் பருவம் முதல் இன்று வரை சுதந்திரம் என்றால் என்ன என்று தெரியாமலேயே சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகிறோம்.

“விடுதலை என்பது ஆங்கிலேயர்களது ஆட்சியிலிருந்து விடுதலை என்பதல்ல, உழைக்கும் மக்களது உழைப்பைச் சுரண்டும் அத்தனை ஒடுக்குமுறையிலிருந்தும் விடுதலை என்பதே ஆகும்” என்றார் பகத்சிங்.

1947-ல் ஆங்கிலேயர்கள் நேரடி ஆட்சியிலிருந்து வெளியேறிவிட்டார்கள். அதற்கு முன்னராக தங்களுக்கான வேலையாட்களை நியமித்து பயிற்சி கொடுத்துவிட்டுத்தான் சென்றுள்ளார்கள். ஆங்கிலேயர்களின் மாணாக்கர்களான பார்ப்பன பனியா ஆளும் வர்க்கம் இன்று அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் தரகு வேலை பார்த்து நாட்டை விற்று வருகிறது.

ஆங்கிலேய காலனிய ஆட்சியாளர்களின் பயிற்சியை பாடமாக்கி, அதற்கான கல்விமுறைகளை பாடத்திட்டமாக்கி நடந்துவரும் இன்றைய கல்வியும், ஆங்கிலேயர்களின் ஆட்சியில் உழைக்கும் மக்கள் போராடி பெற்ற உரிமைகளை பார்ப்பன, பனியா வர்க்கம் பறித்துக்கொண்டு இருக்கும் இன்றைய போலி சுதந்திரத்தையும் எதிர்த்து உண்மையான விடுதலைக்காக குரல் கொடுக்க வேண்டும். அந்தக் குரல் சாதி, மத பேதங்களைக் கடந்ததாக இருக்க வேண்டும்.

ஐ.டி துறையில் சாப்ட்வேர் டெவலப்பர், சப்போர்ட், பி.பி.ஓ, கால் சென்டர் போன்ற வேலைப் பிரிவினைகளும் சாதி போன்றே கிட்டத்தட்ட கடைப்பிடிக்கப்படுகிறது. டைரக்டர்களும் உயர் அதிகாரிகளும் பார்ப்பனர்கள், மார்க்கெட்டிங் வைசியர்கள், எச்.ஆர் சத்திரியர்கள் என்று உழைக்கும் சூத்திரர்களை சுரண்டுகின்றனர். உழைக்கும் மக்களை இதுபோன்ற ஏற்றத்தாழ்வுகளுடன் பிரித்து வைப்பதில்தான் இன்றைய ஆட்சியும் அதிகாரமும் உயிர்வாழ்கிறது. இந்தமாதிரி சாதி மத ஏற்றத்தாழ்வுடன் பழகுபவர்கள் எவ்வாறு சுதந்திரம் பற்றி வெக்கமே இல்லாமல் சுதந்திரதினம் பற்றி பேசமுடிகிறது.

“ஊரில் நிலம் உள்ளது, எங்களுக்கெல்லாம்” என்ற இறுமாப்புடன் சுற்றிவருபவர்களே, உங்களை கூலி வேலையாட்களாக இன்று நகரங்களை நோக்கி அனுப்பியது எது? விவசாயத்தில் இனிமேலும் வழியில்லை என்ற நிலையில் உங்களால் நகரங்களுக்கு வந்து வாழமுடிகிறது.

அதே கிராமங்களில் கூலி வேலை செய்து பிழைத்து வந்தவர்களது நிலைமை என்ன? ஆயிரமாயிரம் ஆண்டுகளாக சாதியின் பெயரைச் சொல்லி ஒடுக்கி வைத்திருந்தது போதாதென்று இன்று நகரங்களில் பணத்தை வைத்து படிப்பு, மருத்துவம், குடிநீர் என்று வாழ்வாதாரங்களில் இருந்து ஒதுக்கி வைப்பது எந்த விதத்தில் நியாயம். இதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?

நாங்களெல்லாம் வரிகட்டுகிறோம் என்று பேசுகிறார்கள். நம்மைப்போல மாதச் சம்பளத்தில் வாழும் நபர்களை விட சில ஆயிரங்களே வாங்கும் சாமானியன் நம்மைவிட அதிக வரிகட்டுகிறார் என்பதை கவனியுங்கள்.

மேலே சொன்ன பார்ப்பன/பனியா கொள்ளையர்கள் தான் நாம் கட்டும் வரியால் பயனடைகின்றனர். நமக்கான உரிமையை, கட்டிய வரிக்கான சேவைகளை கேளுங்கள். அரசுப்பள்ளியை நன்றாக நடத்தச் சொல்லுங்கள், நல்ல தரமான இலவச மருத்துவம் கேளுங்கள், குடிநீர் கேளுங்கள்.

இன்றைக்கு வாழவே வழியற்ற மக்களாக பெரும்பான்மை மக்கள் ஆகிவருகிறார்கள். நாளை ஐ.டி துறையில் வேலை போனால் நமக்கும் இதுதான் நிலைமை. ஏதோ போகிறபோக்கில் சொல்லவில்லை. தமிழகத்தில் ம்டடும் ஆண்டுக்கு 1000 கணக்கானோர் ஐடி துறையில் தற்கொலை என்ற செய்தி வேறு எதைக்காட்டுகிறது.

நமக்கான, ஒட்டு மொத்த நாட்டுக்கான சுதந்திரம் என்பது சாதி மத இழிவுகளிலிருந்தும், பன்னாட்டு கார்ப்பரேட் சுரண்டலிலிருந்தும் முழுமையானதாக இருக்க வேண்டும். அப்படி ஓர் நன்னாள் அமைய பாடுபடுவோம்.

  • 1947 ஆகஸ்ட் 15 ஆங்கிலேய ஆதிக்கம் பார்ப்பன, பனியா ஆதிக்கத்துக்கு கைமாறிய நாள்
  • சூத்திர, பஞ்சம உழைக்கும் வர்க்கத்தின் உண்மை விடுதலையை வெல்ல உறுதி கொள்வோம்

– பிரவீன்

Permanent link to this article: http://new-democrats.com/ta/needed-liberation-for-working-classes/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
ஸ்டெர்லைட்டுக்காக போலீஸ் சுட்டது ஏன்? – அரசு பற்றிய கோட்பாடு

பெரும்பான்மை உழைக்கும் மக்கள் மீது சுரண்டும் வர்க்கத்தின் சார்பில் அதிகாரம் செலுத்தும் அரசு, தொழில் நுட்பங்கள் படைத்தளித்த நவீன கருவிகள் மூலம் வன்முறையை மக்கள் மீது செலுத்துகிறது....

வேலையிடத்தில் பாலியல் தொல்லையா? சகித்துக் கொள்ளாதீர்!

வேலைக்குப் போகும் பெரும்பான்மையான பெண்களுக்கு இதுதான் பணியிட நிலைமை. தேவையில்லாமல் பார்வைக் கணைகள் தொடுப்பது, தவறான கண்ணோட்டத்துடன் தொடுவது, வேலைக்கு பதிலாக அப்பட்டமாக பாலியல் ரீதியான சேவைகளை...

Close