கிருஷ்ணசாமியின் துரோகமும், சபரிமாலாவின் வீரமும்

மது சங்கத்தின் ஆதரவாளர் ஒருவர் “நீட்” தேர்வை எதிர்தத போராட்டங்கள் பற்றிய அவரது கருத்தை அனுப்பியுள்ளார்.

ன்பார்ந்த நண்பர்களே!

“நீட்” தேர்வை எதிர்த்த போராட்டங்கள் தீவிரமாகி வருகின்றன. அனிதா எதை எதிர்த்து போராடி உயிர்நீத்தாரோ அதற்கான மாணவர்களின், மருத்துவர்களின், ஐ.டி ஊழியர்களின் எதிர்ப்பு தமிழகத்தின் சமூக நீதி பாரம்பரியத்தையும், போராட்ட உணர்வையும் வெளிப்படுத்துகின்றன.

இந்தப் போராட்டங்கள் நமக்கு பல்வேறு நபர்களை அடையாளம் காட்டியுள்ளது.

ஒருபுறம் கிருஷ்ணசாமி, ரவிகுமார் போன்ற துரோகிகள் கூறும் எதிர்மறை பாடத்தையும், மறுபுறம் கூலி வேலை பார்த்தாலும் அரசு கொடுத்த இழப்பீட்டை தூக்கி எறிந்த அனிதா குடும்பம், “நீட்” தீர்வை எதிர்த்து ஆசிரியை வேலையை உதறி போராட்டத்தில் இறங்கிய சபரிமாலா போன்ற நேர்மறை அனுபவங்களையும் நமக்கு வழங்கியுள்ளது.

இந்த இரண்டு தரப்பையும் எது இப்படி சிந்திக்க இயக்கியது என்பதே இப்போது நம் இருக்கும் கேள்வி.

கிருஷ்ணசாமியை எடுத்துக் கொள்வோம்.

மசக்கவுண்டர் புதூரில் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு மத்தியில் அதை எதிர்த்து போராடி படித்து மருத்துவராகி, கொடியங்குளம் கலவரத்திற்காக வாதாடி, மாஞ்சோலையில் தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்காக நின்ற கிருஷ்ணசாமியை ஒரு காலத்தில் தமிழ்நாடு பார்த்தது. 1996 தேர்தலில் 5 ஆண்டுகளாக தமிழகத்தை கூட்டு கொள்ளை அடித்த ஜெயாவுக்கு எதிரான அலை தமிழகமெங்கும் வீசியபோதும், சுயேச்சையாக நின்று ஒட்டப்பிடாரத்தில் வென்று எம்.எல்.ஏ ஆன கிருஷ்ணசாமியையும் தமிழ்நாடு பார்த்தது.

கிருஷ்ணசாமி ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராட துவங்கிய ஆரம்ப காலத்தில் இப்படி சிந்தித்திருப்பாரா? தான் இப்படி சீரழிவோம் என்று நினைத்திருப்பாரா? அப்போது ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராட வேண்டும் என்ற உணர்வோடுதான் சிந்தித்திருப்பார். பின்னர் அந்த உரிமைகளை காக்க அதிகாரத்தை பிடிக்க வேண்டும் என்று யோசித்திருப்பார். அதற்காக கட்சி நடத்த பணம் தேவை, அதற்காக சில சமரசங்கள் செய்வது தவறில்லை, அதுதான் ராஜதந்திரம் என்று இந்த இடத்தை அடைந்திருக்கிறார்.

இப்படி ஒவ்வொரு முறையும் கொள்கையின் பெயரைச் சொல்லி கொள்கையை விட்டுக் கொடுத்து சமரசம் செய்து கொண்டதன் விளைவுதான் அவர் அம்பேத்கரின் எதிரியான பார்ப்பனியத்துடன் கைகோர்ப்பதிலும் கூச்சம் இல்லாமல் ஈடுபட வைத்துள்ளது.

இத்தகைய சமரசத்தை கிருஷ்ணசாமியிடம் மட்டுமல்ல ரவிகுமார், கருணாநிதி உள்ளிட்டு பலரிடமும் இந்த சமரசத்தை ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.

“அம்பாள் என்றைக்குடா பேசினாள்” என்று எழுதிய கருணாநிதிக்கும், குஜராத் கலவரத்தின் போது பா.ஜ.கவுடன் கூட்டணி காரணமாக அமைதி காத்த கருணாநிதிக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொண்டவர்களுக்கு மாஞ்சோலை போராட்டத்தை நடத்திய கிருஷ்ணசாமிக்கும், இன்று இந்துத்துவர்களுடன் கைகோர்க்கும் கிருஷ்ணசாமிக்கும் உள்ள வேறுபாடு புரியும்.

இவர்களின் சீரழிவு மக்களிடமிருந்து பிரித்துக் கொண்டு ஆளும் வர்க்கத்துடன் இணைந்து கொள்வதற்காக சமரசம் செய்து கொள்வதிலிருந்து தொடங்குகிறது.

முதலாளித்துவத்தின் உழைப்புச் சுரண்டலை கண்டுகொள்ளாமல் சமரசம் செய்ய ஆரம்பித்ததுமே ஆளும் வர்க்கத்தின் ஊழலில் பங்கேற்று அவற்றுக்கு திரைபோட்டு மறைத்து பிரச்சனையாக்காமல் இருக்க பார்ப்பனியத்துடன் சமரசம் என்று பரிணமிக்கிறது இவர்களது அரசியல் செயல்பாடு.

தி.மு.க-வினர் மீது அ.தி.மு.க அரசு ஊழல் வழக்குகள் போட்ட போது சிறை நிரப்பும் போராட்டம் அறிவித்து 3 லட்சம் தி.மு.கவினர் தமிழகம் முழுவதும் கைதாகினார்கள். ஏன் அனிதா இறப்பை ஒட்டி நீட் தேர்வை எதிர்த்து தமிழகத்தை போராட்டக்களமாக மாற்றவில்லை. இதைக் கேட்டால் தி.மு.கவினர் கண்களில் “ரெய்ட்” பயம் தென்படலாம்.

ஆகவே, எல்லா ஓட்டுக் கட்சிகளும் இப்படித்தான் முதலாளித்துவத்துடன் இணைந்து பார்ப்பனியத்துடன் சமரசம் செய்து கொள்கின்றன. இவர்களின் சொத்து மதிப்பையும் கோழைத்தனத்தையும் பாருங்கள். மறுபுறம் அனிதா குடும்பத்தினர், ஆசிரியை சபரிமாலை போன்றவர்களின் சொத்து மதிப்பையும் நெஞ்சுரத்தையும் ஒப்பிட்டு பாருங்கள். எது யாரை எப்படி சிந்திக்கத் தூண்டுகிறது என்பது எளிதாக விளங்கும்.

சபரிமாலா, அனிதா குடும்பத்தினரின் சிந்தனை ஆகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் சிந்தனையாக பண்பாடாக உள்ளது. இப்போது பார்ப்பனியத்தை எதிர்த்து போராடி வீழ்த்த யார் தகுதியானவர்கள்?

இத்தகைய ஓட்டுச் சீட்டு சீரழிவுவாதிகளா அல்லது நேர்மையான உழைக்கும் மக்களா? உழைக்கும் மக்களிடம் அதிகாரம் போவதற்கு இன்றைய அமைப்பில் வழி இல்லையே என்று நீங்கள் சிந்திக்கலாம். ஆனால், இன்றைய கட்டமைப்பில் அதிகாரத்துக்கு வர வாய்ப்பிருந்தாலும் பார்ப்பனியத்தை வீழ்த்த திராணி இல்லாத கும்பலிடம் தீர்வை எதிர்பார்ப்பதை விட உழைக்கும் மக்கள் அதிகாரத்தை கையில் எடுப்பதை பற்றி சிந்திக்க வேண்டிய தருணம் இது!

– மகேந்திரன்

போராட்டத்துக்காக அரசு ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்த சபரிமாலை கலந்து கொள்ளும் தொலைக்காட்சி விவாதம்

Permanent link to this article: http://new-democrats.com/ta/neet-anitha-struggle-krishnaswamys-and-sabarimalas/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
வாழத் தகுதியான ஒரு வளமான எதிர்காலத்திற்காக போராடு – சுரங்கத் தொழிலாளர் கருத்தரங்கு

4 கண்டங்களின் 22 நாடுகளிலிருந்து உறுப்பினர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். சர்வதேச சுரங்கத் தொழிலாளர் கருத்தரங்கு இந்தியாவில் நடப்பது வரலாற்றில் இதுதான் முதல் முறை.

ஐ-ஃபோனை உற்பத்தி செய்வது யார்? – ஆப்பிளா, சீனத் தொழிலாளர்களா?

சீனாவின் ஷென்செனில் பாக்ஸ்கான் இன்டர்நேஷனல் வேலைக்கு அமர்த்தியுள்ள 3 லட்சம் தொழிலாளர்கள் டெல் மடிக்கணினிகளையும், ஆப்பிள் ஐ-போன்களையும் உற்பத்தி செய்கின்றனர். இந்தத் தொழிலாளர்கள் டெல், ஆப்பிள் மற்றும்...

Close