- கழிவறை முதல் (தூய்மை இந்தியா ) கல்வி வரை எதையும் திறம்பட நிறைவேற்ற முடியாமல் ஊழல் மண்டிப்போய் மூச்சுத் திணறுகிறது நாடு.
- தனியார் மருத்துவக் கல்லூரிகளோடு கூட்டுச் சேர்ந்து வியாபம் ஊழலைத் திறம்பட அரங்கேற்றிவிட்ட பா.ஜ.க நீட் மூலம் கட்டணக் கொள்ளையைத் தடுத்துவிடலாம் என பஜனை பாடுகிறது. இதற்கு உயர் நடுத்தர வர்க்கமும் தாளம் போடுகிறது.
- புதுச்சேரி முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் தனியாரும், அரசும் கூட்டாகத் தில்லுமுல்லு செய்திருப்பது அம்பலமாகியுள்ளது.
புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லூரிகள் கூட்டாகச் சேர்ந்து நிர்வாகம் கோரும் கட்டண உயர்வை அங்கீகரித்தால்தான் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு மாணவர்களைச் சேர்த்துக் கொள்வோம் என மிரட்டுகின்றன.
- இதன் மூலம் நீட் கட்டணக் கொள்ளையை எந்த வித்த்திலும் தடுக்காது என்பது தெளிவாகிறது.
- தமிழகத்தில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. இவை அனைத்தும் மக்களின் வரிப்பணத்தில் இயங்குபவை. மைய அரசு ஒரு பைசா கூட நிதியுதவி செய்வதில்லை. இந்நிலையில் இக்கல்லூரிகளை நீட் மூலம், நீதிமன்றத்தின் துணையோடு கைப்பற்றத் துடிக்கிறது டெல்லி சுல்தான்களின் கும்பல்.
- இதை எதிர்க்கவும், கேள்வி கேட்கவும் வக்கற்ற பினாமி டெட்பாடி அரசு பிளஸ் 1 வகுப்பிற்குப் பொதுத் தேர்வு , மேல்நிலை பாடத்திட்டங்களின் தரத்தை உயர்த்துதல் , அரசுப் பள்ளிகளில் நீட் தேர்வுக்கான பயிற்சி என நரித்தனமாக நீட் தேர்வை நம்மை ஏற்கச் சொல்கிறது.
- முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல் வினாத்தாள் தயாரிப்பில் சமமின்மை; இந்தி-குஜராத்தியில் எளிமையான கேள்விகள், ஆங்கிலத்தில் கடினமான கேள்விகள்; லக்னோவிலுள்ள எம்.சி.சக்சேனா கல்லாரி மூலம் வினாத்தாள் கசிந்தது என இவர்கள் நடத்தும் தேர்வின் இலட்சணம் சந்தி சிரிக்கிறது. அவர்களும் வலிக்காத்து போலவே மார்பை நிமிர்த்தி நடிக்கிறார்கள்.
- எம்.பி.பி.எஸ் படிப்பின் நிலை கவலைக்கிடமென்றால், பல் மருத்துவப் படிப்பும் ஊழலிலிருந்து தப்பவில்லை. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் முதுநிலை பல் மருத்துவ இடங்களுக்கு கவுன்சிலிங் நடந்தபொழுது, 254 இடங்களில் 109 இடங்களே கணக்கில் காட்டப்பட்டுள்ளன. இந்த முறைகேடு அம்பலமானதும் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது தமிழக அரசு.
- நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க மறுக்கும் மோடி அரசு, எய்ம்ஸ், ஜிப்மர், இராணுவ மருத்துவக் கல்லூரிகளை விலக்கி வைத்துள்ளது.
- இப்படி வினாத்தாள் கசிவு, வினாத்தாளில் ஏற்றத்தாழ்வு, எய்ம்ஸ் கல்லூரி இடங்கள் பெரிய விலைக்கு விற்கப்படுவது ஆகியவை குறித்து அம்பலப்படுத்தியிருக்கிறார் ஆனந்த ராய். வியாபம் ஊழலையும் அம்பலப்படுத்தியது இவர்தான். கூடிய விரைவில் இவர் வீட்டுக்கும் ரெய்டு வரும், அதில் ஏதும் சிக்கவில்லை என்றால் அவர் வீட்டுக் குளிர்சாதனப் பெட்டியில் இருந்த கோழிக்கறி மாட்டுக் கறியாக மாறி அவரது உயிரையும் வாங்ககூடும்!
- நீட் உருவாக்கும் மருத்துவர்கள் யாரும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலோ, கிராம்ப்புற , மலைவாழ் மக்களிடையே சென்றோ பணியாற்றப்போவதில்லை.
- நீட் பெற்றெடுக்கும் பிள்ளைகள் நகர்ப்புற கார்ப்பரேட் மருத்துவமனைக்களுக்கு ஏலம் விடப்படுவார்கள். இது பணக்கார்ர்களுக்குத் தரப்படும் மறைமுக மானியமாகும். இதைத்தான் சமூக நீதியாக முன்வைக்கிறது நீட்.
- அவசர நிலைக் காலத்தில் கல்வியை மாநில உரிமைப் பட்டியலிலிருந்து உருவிய இந்திரா காங்கிரஸுக்கு எவ்விதத்திலும் சளைத்ததல்ல அவசர நிலை அறிவிக்காத மோடி அரசு.
- பாடத்திட்டத்தின் தகுதி, தரம், கட்டண முறைப்படுத்தல் மோசடி ஆகிய அனைத்தையும் மீறி இது மாநில உரிமை தொடர்பான பிரச்சினை.
- மாணவர்களும், கல்வியாளர்களும் முன்வந்து கல்வியை மாநில உரிமைப் பட்டியலில் சேர்க்கப் போராட வேண்டும். இதற்குக் குறைவான எந்த ஒரு கோரிக்கையும் போராட்டமும் பார்ப்பன தேசியத்திடம் மண்டியிடுவதாகும்.
(புதிய ஜனநாயகம், ஜூன் 2017 இதழில் வெளியான கட்டுரையிலிருந்து சில குறிப்புகள்)
– கீர்ததி