செய்தியும் ஐ.டி ஊழியர்களின் கண்ணோட்டமும் – ஜூன் 3, 2017

1. ‘உயிருக்கு உலை வைக்கும் அணு உலை’

செய்தி :  கூடங்குளத்தில் மேலும் இரண்டு அணு உலைகளை அமைக்க இந்தியா ரஷ்யாவுடன் ஒப்பந்தம்

கண்ணோட்டம்:

மிழக மக்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, பல்வேறு போராட்டங்களையும் அடக்கி ஒடுக்கி  உற்பத்தி தொடங்கப்பட்ட கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகளை அமைக்க ஒப்பந்தம் போட்டிருப்பது எந்த வகையில் நியாயம்.

ரஷ்யாவுடன் ஒப்பந்தம் என்பது வேறொன்றுமில்லை ரஷ்ய கார்ப்பரேட்டுகளுடன் போடப்பட்ட ஒப்பந்தம் என்றே அர்த்தம்.

முதலாளிகளுக்கு சேவை செய்வது என்பதுதான் மோடி அவர்களின் பிரதான பிரதம உத்தியோகம், அது இந்திய கார்ப்பரேட்டுகளாக இருந்தாலும் சரி, வெளிநாட்டு கார்ப்பரேட்டுகளாக இருந்தாலும் சரி அவர் என்றுமே சளைப்பதே இல்லை.

நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் அழிவை ஏற்படுத்துவதாக இருந்தாலும், கார்ப்பரேட்டுகளின் மூலதனத்தை பெருக்கி கொடுப்பதற்கு எப்படிப்பட்ட மக்கள் விரோத செயலையும் செய்வதில் மோடிக்கு எவ்வித தயக்கமும் இல்லை (இதில் மன்மோகனும் விதிவிலக்கல்ல). மேலும் எதிர்ப்பவர்களை எவ்வவகையிலும் ஒடுக்கலாம் என்பது மோடியின் ‘நற்பண்புகளில்’ ஒன்று.

அதையும் மீறி எதிர்த்து கேள்வி கேட்டால், ‘தேச துரோகி, நக்சல், ஆன்டி இண்டியன், ஆன்டி மோடி மைண்ட் செட்’ என்று குரைக்க எச்சக்களைகள் ஏராளம் இங்குண்டு.

சரி, இந்த நாசகார அணு உலைகளை மேலும் வர விடாமலும், இருப்பதை மூடவும் மக்களாகிய நம்மின் அடுத்தகட்ட நகர்வுகள் என்ன?

2. மோடி அரசை எதிர்ப்பது எப்படி?

செய்தி :  “தலித் அமைப்புகள் ஒன்றிணைந்து மத்திய அரசை எதிர்க்க வேண்டும்”: தொல்.திருமா தலைமையில் நடைபெற்ற பெங்களூரு கூட்டத்தில் பிரகாஷ் அம்பேத்கர் கோரிக்கை. இறைச்சிக்காக மாடுகளை விற்கத் தடை: மத்திய பா.ஜ.க. அரசின் புதிய சட்டத்தை எதிர்த்து அனைத்து தலித் அமைப்புகளும் இணைந்து தேர்தலின் மூலம் முறியடிக்க வேண்டும் என்று அம்பேத்கர் பேரன் பிரகாஷ் அம்பேத்கரும், திருமாவளவனும் கூறியுள்ளனர்.

கண்ணோட்டம்:

த்திரபிரதேசத்தில் தலித்துகள் மீது தாக்குதல் நடத்திய பா.ஜ.க.வினருக்கு எதிராக தலித் மக்களை ஒன்றிணைத்து அதனை மக்கள் போராட்டமாக கொண்டு சென்று ஆளும் பா.ஜ.க. வை அம்பலப்படுத்தி வருகிறார் சந்திரசேகர் ஆசாத். ஆனால் இங்கு திருமா அவர்கள் இந்துத்துவ மற்றும் இடைநிலை சாதிகளின் தலித் வன்முறை மற்றும்  வெறுப்பு அரசியலையும், மனுதர்ம அரசியலையும் தேர்தலின் மூலம் தீர்த்து விடலாம் என கூறுகிறார்.

மக்களின் கொந்தளிப்பை கோபத்தை எவ்வாறு மழுங்கடிப்பது என்ற ஒரு தொலை நோக்கு சிந்தனையோடுதான் திருமாவின் அரசியல் பிரவேசங்கள் இருந்து கொண்டு இருக்கின்றன. அந்த மாய வலையில் இருந்து மக்கள் அறுத்துக்கொண்டு வெளியில் வர வேண்டும்.

டாஸ்மாக்குக்கு  எதிரான மக்களின் குறிப்பாக பெண்களின் எழுச்சிமிகு போராட்டங்களை கவனியுங்கள், அப்போராட்டத்தின் மூலம் அதிகார வர்க்கத்தை எவ்வாறு பணிய வைக்கிறார்கள் என்றும் பாருங்கள். “மக்களிடம் கற்றுக்கொள்ளுங்கள்” என்றார் மாவோ. வாருங்கள் கரம் கோர்ப்போம், கற்று கொள்வோம்.

3. மாடுகளை விற்கத் தடை

செய்தி : இறைச்சிக்காக மாடுகளை விற்க வாங்க மத்திய அரசு விதித்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மற்றும் கேரளாவில் போராட்டங்கள்.

கண்ணோட்டம்:

மாட்டிறைச்சிக்குத் தடையைத் தொடர்ந்து எருமை மாடுகளுக்கு விலக்கு வழங்க ஆலோசனை, தடை நீக்க அறிவிப்பு விரைவில் வெளியாகும், தனிமனித உணவுப் பழக்கத்தில் தலையீடு , திராவிட நாடு கோரிக்கை, கேரளத்தில் பல்வேறு இடங்களில் மாட்டுக்கறி விருந்து, அதில் கோயில் பராமரிப்புப் பொறுப்பில் இருக்கும் சி.பி.எம் தோழர் சுரேந்திரன் உணவுத் திருவிழாவில் கலந்து கொண்டது பற்றிய சர்ச்சை, ஐ.ஐ.டி.யில் மாட்டிறைச்சி உணவுத் திருவிழா, இப்படி பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகள், முகநூல் பதிவுகள், பகிர்வுகள் காண முடிந்தது. சப்கா விகாஸ் , அச்சே தின் , மன் கி பாத் எல்லாம் சால்ஜாப்புகள் , தோல்வியை மறைக்கும் பதற்றத்தில் மக்களை திசை திருப்புவன் மோடி என்ற பதிவுகளையும் காண முடிந்தது.

இதில் மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் பார்ப்பனீய நரித்தனமும், கால்நடை வளர்ப்புத் துறையை கார்ப்பரேட் மயமாக்கும் கயமையும் கவனிக்க வேண்டியது. சுயசார்பு விவசாயப் பொருளாதாரத்தை அழித்து கார்ப்பரேட்டுகள் கையில் குத்தகை விவசாயம், பால் பண்ணை தொழில், இறைச்சி ஏற்றுமதி என்ற மறுகாலனியாக்க கொள்கை பற்றிய விவாதங்கள் பதிவுகள் மிகவும் குறைவு !

தனித்தனியே குமுறுவதையும், பதிவிடுவதையும், நையாண்டி செய்வதையும் அறுவடை செய்து இதை மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றி மெரினாவில் மீண்டும் களம் காண ஒருங்கிணைக்கும் கடமை நம்முன் உள்ளது !

Permanent link to this article: http://new-democrats.com/ta/news-and-views-03-06-2017/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
தொழில்நுட்பம் சமூகப் பிரச்சனைகளை தீர்க்க முடியுமா?

தொழில்நுட்பம் அனைவருக்கும் கூடுதல் வாய்ப்புகளையும், பல வசதிகளையும் ஏற்படுத்தித் தருகிறது என்பது உண்மைதான். ஆனால், சமூகத்தில் ஊறிப் போயிருக்கும் பாகுபாடுகள், வெறுப்புகள், அநீதிகள் இவற்றை தொழில்நுட்பம் மூலம்...

யமஹா : முதலாளியின் சட்ட மீறல், துணை நிற்கும் அரசு, எதிர்த்து போராடும் தொழிலாளிகள்

நாங்கள் வந்த வாகனம், கடந்து வந்த சாலைகள், எதிரிலும், எங்களை கடந்தும் சென்ற வாகனங்கள், இரு பக்கமும் நின்றிருந்த ஆலைகள், ஊரையே மறைத்து நின்ற மேற்கூரை போன்ற...

Close