முதலாளிகளைக் காப்பாற்றும் மோடி அரசு, விவசாயிகளை சந்தையின் தயவில் விடுகிறது

Courtesy : Business Standard

செய்தி : PPA rejig: Centre takes wind out of state discom bullies

“விலையை குறைக்கச் சொல்லி வற்புறுத்துவதன் மூலம் சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்தியாளர்களுடனான ஒப்பந்தங்களை மீறும் மாநில மின் விநியோக நிறுவனங்களுக்கு எதிராக மத்திய அரசு கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அரசு விநியோக நிறுவனங்களின் இந்தச் செயல் கடன் மற்றும் முதலீட்டாளர்களின் ஊக்கத்தைக் குறைக்கும் என்று வங்கிகள் தெரிவித்துள்ளன”

“சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின் சக்தி ஏலங்களில் நிலவும் கடும் போட்டியும் உபகரணங்களின் விலை வீழ்ச்சியும் காரணமாக கட்டணங்கள் கணிசமாக குறைந்துள்ள இன்றைய நிலையில் முந்தைய ஒப்பந்தங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணங்கள் மிகவும் அதிகம். இதனால் செலவுகள் அதிகமாக இருந்தபோது ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருந்தாலும் மின்சாரத்தை தற்போது சாத்தியமான குறைந்த விலையில் விற்குமாறு மாநில விநியோக நிறுவனங்கள் தனியார் மின் உற்பத்தியாளர்களைக் கோரி வருகின்றன”

“இது தொடர்பாக இந்திய வங்கிகள் சங்கம், நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சகங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், மாநிலங்களின் இந்த நடவடிக்கைகள் ஒப்பந்தத் திட்டங்களின் நம்பகத்தன்மையை அச்சுறுத்துவதாகவும், இது ஒப்பந்த நிறுவனங்கள் வாங்கியுள்ள கடன்களை அபாயகரமானதாக மாற்றும் என்றும் குறிப்பிட்டுள்ளது”

“ஒப்பந்த நிறுவனங்களுக்கு கட்டணக் குறைப்பு தொடர்பாக அழுத்தம் கொடுக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, உ.பி. மற்றும் ஜார்கண்ட் ஆகியவை அடங்கும்”

கண்ணோட்டம் : 

விவசாய பொருட்களின் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் படும் துயரத்தை மோடி அரசு எப்படி பார்க்கிறது என்பதை நாம் அறிவோம். குறைந்தபட்ச ஆதார விலை என்பதுதான் அரசு விவசாயிகளுடனான தனது சமூக ஒப்பந்தத்தை பூர்த்தி செய்யும் வழிமுறையாகும். விவசாய உள்ளீட்டு பொருட்களின் உயரும் செலவினங்களுக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரங்கள் தொடர்ந்து வணிகமயமாதலுக்கும் ஈடாக குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்படாத நிலையில், அரசு கொள்முதல் என்பதே நடைமுறையில் கைவிடப்பட்டு விவசாயிகள் ‘சந்தை சக்திகளின்’ இரக்கத்தை எதிர்பார்த்து நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் .

ஆனால் தனியார் முதலீட்டாளர்களின் இலாபத்தை உறுதிப்படுத்தும் வகையில் சந்தை சக்திகள் செயல்பாட்டில் மோடி அரசு தலையிடுகிறது. சந்தை நிலவரத்தின் படி மின்சாரத்தை வாங்கும் விலையை குறைக்க பேச்சுவார்த்தை நடத்தும் பொதுத்துறை விநியோக நிறுவனங்கள் மீது மோடி அரசு சவுக்கை விளாசுவதன் பின்னால் உள்ள தர்க்கம் இதுதான்.

தனியார் முதலீட்டாளர்களுக்கு சாதகமான ஒப்பந்தங்களின் மீது மிகவும் அக்கறையாக இருக்கும் மோடி அரசாங்கம் அந்த ஒப்பந்தங்கள் மதிக்கப்பட வேண்டும் என்றும் அதனால் ஏற்படும் இழப்புகளை மாநில மின்சார வாரியங்கள் ஏற்க வேண்டும் என்றும் கூறுகிறது. அந்தச் சுமை இறுதியில் அதிக மின்கட்டண வடிவில் பொதுமக்கள் தலையில்தான் கட்டப்படும்.

ஆனால் விவசாய உற்பத்தி பொருட்களை விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும் விலையில் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற விவசாயிகளுடனான அரசின் சமூக ஒப்பந்தம் என்ன ஆனது?

இந்திய வங்கிகள் தனியார் நிறுவனங்களின் வருவாயை உறுதிப்படுத்த அரசாங்கத்திற்கு கடிதம் எழுதுகின்றன. ஆனால் விவசாயிகளின் வருமானம் சுருக்கப்பட்டு நெருக்கடியில் தள்ளப்படுவதைப் பற்றி இந்த வங்கிகள் என்ன செய்தன? விவசாயிகள் வங்கிக் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு ஏற்ப அதிகமான விலையில் விவசாய உற்பத்தி பொருள்களை 100% கொள்முதல் செய்யுமாறு ஏன் இவர்கள் அரசை நிர்பந்திக்கவில்லை? மாறாக,

மேலும் படிக்க : Distress in power market visible in low spot prices

Permanent link to this article: http://new-democrats.com/ta/news-and-views-18082017-ta/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
முதலாளித்துவத்தின் அப்பட்டமான தோல்வி, சோசலிசம் ஒன்றுதான் தீர்வு!

அனைவரும் இந்த கம்யூனிட்டி கிச்சனில் சென்று சாப்பிட்டு வருவார்கள் அந்த கம்யூனிட்டி கிச்சனில் குழந்தைகளுக்கு ஏற்ற மாதிரியும்,முதியவர்களுக்கு ஏற்ற மாதிரியும், கர்ப்பிணிகளுக்கு ஏற்ற மாதிரியும் சத்தான உணவுகளை...

சிறுபான்மை இனத்தவருக்கு மருத்துவ சேவை மறுக்கும் அமெரிக்க முதலாளித்துவம்

இந்த முதலாளித்துவ முறைக்குள் நின்று கொண்டு இந்த ஏற்றத்தாழ்வுகளையும் குறைபாடுகளையும் அழித்துவிட இயலுமா? நியாயமான மற்றும் சிறந்த சுகாதார வசதிகளை அனைத்து அமெரிக்க மக்களுக்கும் வழங்க முடியுமா...

Close