இஸ்ரேல் தொழிலாளர்களின் உரிமையை பறிக்கும் யூத அரசு பயங்கரவாதம்

செய்தி :  Israeli High Court signals end of right to strike at state-owned enterprises (அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் வேலைநிறுத்தம் செய்வதற்கான உரிமை இல்லை – இஸ்ரேலிய உயர் நீதிமன்றம்)

ரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்கள் அரசால் மேற்கொள்ளப்படும் சந்தை சீர்திருத்தங்களுக்கு எதிராக இனிமேலும் வேலைநிறுத்தம் செய்ய முடியாது என்று இஸ்ரேல் உயர் நீதிமன்றம் ஒரு ஆரம்பகட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது.

அரசின் கொள்கைக்கு எதிரான வேலைநிறுத்தம் அரசியல் ஆதாயத்துக்காக செய்யப்படுவதால் அது சட்டவிரோதமானது என்ற அரசின் வாதத்தை ஏற்று, உயர் நீதிமன்றம் “வேலைநிறுத்த உரிமையை” உறுதிப்படுத்திய அதன் முந்தைய தீர்ப்பை மாற்றியுள்ளது.

இதனால் 12,500 தொழிலாளர்களின் வேலைக்கு உடனடி ஆபத்து ஏற்படுத்தக்கூடிய இத்தீர்ப்பு, மின்சாரத்துறையை முற்றிலுமாக தனியார்மயமாக்குவதற்கு வழிவகுக்கிறது. இத்தீர்ப்பு உறுதி செய்யப்பட்டால், அது இஸ்ரேலிய தொழிலாளர்களின் உரிமைகளை கடுமையாக பாதிக்கும்.

இஸ்ரேல் மின்சார நிறுவனத்தில் (இஸ்ரேல் எலக்ட்ரிக்கல் கார்ப்பரேஷன் (IEC)) 12,500 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். மின்சார உற்பத்தியில் அரசு ஏகபோகத்தை முடிவுக்கு கொண்டு வர, கடந்த மூன்றாண்டுகளாக சந்தை சீர்திருத்தங்களை அமல்படுத்தி வருகிறது இஸ்ரேல் அரசு.

தனியார்மயமாக்கல் திட்டம் என்பது அரசு நிறுவனம் மின்சாரம் உற்பத்தி செய்வதை நிறுத்திவிட்டு அதன் மின் நிலையங்களை தனியார் துறைக்கு விற்கத் தொடங்கும் என்பதாகும். சீர்திருத்தங்கள் என்ற பெயரில் திணிக்கப்படும் இந்த திட்டம் ஏற்கனவே 800 வேலைகளைப் பறித்துள்ளது.

இஸ்ரேல் தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு ஹிஸ்ட்ரட்ருட் (Histadrut) தனியார்மயமாக்கல் சுமார் 5,000 முதல் 6,000 வேலைகளைப் பறிக்கும் என எதிர்பார்க்கிறது. இதை எதிர்த்து IEC இல் உள்ள தொழிலாளர்கள் கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மின்கட்டண ரசீது வழங்க மறுத்தல் போன்ற நடவடிக்கைகளில் பங்கேற்றனர்.

கடந்த மே மாதம் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் செய்யும் உரிமையை ஆதரித்த பிராந்திய மற்றும் தொழிலாளர் நீதிமன்றங்களின் முந்தைய தீர்ப்புகளை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம். இருப்பினும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த அரசு, வேலைநிறுத்தம் செய்பவர்கள் அரசின் கொள்கையை எதிர்ப்பதால், இந்த வேலைநிறுத்தம் அரசியல் நோக்கங்களைக் கொண்டது என்றும் இது இஸ்ரேலிய தொழிலாளர் சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானது என்றும் வாதிட்டது. தீங்குவிளைவிக்கும் அல்லது நிதி இழப்பை ஏற்படுத்தும் இத்தகைய வேலைநிறுத்தங்கள் அனுமதிக்கப்படக்கூடாது என்று கூறி தனியார் மின்சார நிறுவனங்கள் அரசாங்கத்தை ஆதரித்தன.

வேலைநிறுத்தம் செய்யும் உரிமையின் மீது கடும் கட்டுப்பாடுகளை சுமத்தும் இத்தீர்ப்பு பற்றி உலக அனைத்துத்துறை தொழிலாளர் சங்கம் (IndustriALL Global Union) மிகவும் கவலை தெரிவிக்கின்றது. இதுபோன்ற ஒரு தீர்ப்பு பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைக்கு எதிராகவும் அதேபோல் சங்கம் சேரும் உரிமை தொடர்பான சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) உடன்படிக்கை 87 மற்றும் கூட்டுபேர உரிமை தொடர்பான உடன்படிக்கை 98-க்கு எதிராகவும் அமையும்.

கண்ணோட்டம் :

இஸ்ரேல் அரசும் அமெரிக்காவில் இருக்கும் செல்வாக்கான யூதக் குழுக்களும் தொடர்ந்து பாலஸ்தீனத்தை யூதர்களின் எதிரிகளாக சித்தரிக்கின்றனர். இந்தத் தீர்ப்பு உழைக்கும் மக்களின் உண்மையான எதிரிகள் யார் என்பதைக் காட்டுகிறது. உலகெங்கிலும் உள்ள பிற அரசுகளை போலவே, இஸ்ரேல் அரசும் “தீங்கு விளைவிக்கும் அல்லது நிதி இழப்பை ஏற்படுத்தும் வேலை நிறுத்தங்கள் அனுமதிக்கப்படக்கூடாது” என்று கூறும் மேல்தட்டு வர்க்கத்தின் நலன்களுக்காகவே வேலை செய்கிறது.

தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன.

மொழிபெயர்ப்பு : மணி

Permanent link to this article: http://new-democrats.com/ta/news-and-views-21082017-ta/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக ஐ.டி ஊழியர்கள்

விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ள ஏப்ரல் 3-ம் தேதி அன்று மாலை மாலை 4 மணி முதல் 5 மணி வரை...

சீருடையை பறித்து சிறுமிகளை துன்புறுத்திய தனியார் பள்ளி

இந்த அரசும் அரசு நிறுவனங்களும் ஏற்கனவே பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை இழந்து அவர்களை வஞ்சித்து வருகின்றன. தம்மால் வகுக்கப்பட்ட விதிகளையே நடைமுறைப்படுத்த முடியாத அளவுக்கு தோல்வியைத் தழுவியுள்ளன.

Close