கிராமப்புற தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம் : உரிமைக்கான போராட்டம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள தபால் ஊழியர்கள், கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் தலைமை தபால் நிலைய ஊழியர்கள் மற்றும் டிவிஷனல் அலுவலக ஊழியர்களுக்கு இணையான சம ஊதிய கோரிக்கையை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.

அனைத்திந்திய கிராமின் டாக் சேவக் தொழிற்சங்கத்தின் வேலூர் பிரிவின் தலைவர் எஸ். மூர்த்தி கூறுகையில் பல ஆண்டுகளாக எங்கள் உரிமைகளுக்காக போராடுகிறோம். கிராமப்புறங்களில் ஒரு தலைமை தபால் அலுவலகத்தில் அல்லது துணை அலுவலகத்தில் உள்ள ஒரு தபால்காரரின் அதே வேலையைத் தான் நாங்கள் செய்கிறோம். ஆனால் நாங்கள் நிரந்தர பணியாளர்களாக இல்லாததால் அவர்களுக்கு நிகரான சம்பளமும், ஓய்வு பெற்ற பின்னர் கிடைக்க வேண்டிய ஓய்வூதியமும் கிடைப்பதில்லை

முறைப்படுத்தப்பட்ட தபால் ஊழியர்களுக்கு இணையான சம ஊதியத்தை வழங்க பரிந்துரைத்த கமலேஷ் சந்திரா குழு அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இவர்கள் கோரி வருகின்றனர்இவர்களில் பெரும்பாலான தொழிலாளர்களுக்கு ரூ 5,000 முதல் ரூ8,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. “நாங்கள் எந்தவொரு மருத்துவத் திட்டத்தின் கீழும் வருவதில்லைஎன்ற அவர் மொத்த தபால் ஊழியர்களின் எண்ணிக்கையில் 80 சதவிகிதம் கிராமப்புற ஊழியர்கள்என்றும் சுட்டிக்காட்டினார்.

இவர்களின் தொடர்ந்த வேண்டுகோளுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், தொழிலாளர்கள் ஆகஸ்ட் 16 புதன்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.

மேலும் படிக்க Rural Postal Staff Go on Indefinite Strike

சிலர் கேட்கலாம் ஏன் வேலைநிறுத்தம்? அது தொழிலாளர்கள் செய்யும் ஒரு பொறுப்பற்ற செயல் அல்லவா? ”

இது தொடர்பாக சட்டம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம் (legalserviceindia.comலிருந்து)

இன்று, உலகின் ஒவ்வொரு நாட்டிலும் அது ஜனநாயகமோ, முதலாளித்துவமோ அல்லது சோசலிசமோ, தொழிலாளர்களுக்கு வேலைநிறுத்தம் செய்வதற்கு உரிமை உண்டு. ஆனால் இந்த உரிமையானது கடைசி ஆயுதமாக இருக்க வேண்டும், ஏனெனில் இந்த உரிமை தவறாக பயன்படுத்தப்பட்டால், அது தொழிற்துறையின் உற்பத்தி மற்றும் நிதி வருவாயைப் பாதிக்கும்

தொழிற்சங்க சட்டம் 1926, முதன்முறையாக, பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கத்தின் தொழிற்தகராறு சம்பந்தமான சில நடவடிக்கைகளை வர்த்தகப் பொது விதியை மீறாத வகையில் அங்கீகரிப்பதோடு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வேலைநிறுத்தத்திற்கு உரிமையை வழங்கியுள்ளது. இப்போது தொழிற்சங்கங்களின் சட்டப்பூர்வ ஆயுதமான வேலைநிறுத்தம் செய்வதற்கான உரிமை, சட்டத்தால் வரையறுக்கப்பட்ட வரம்புக்குள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மட்டுமே அங்கீகரிக்கப்படுகின்றன

1947-ம் ஆண்டு தொழில்தகராறு சட்டத்தின் படி வழங்கப்பட்டுள்ள சட்டபூர்வ வேலை நிறுத்த உரிமையின் படி,

இச்சட்டத்தின் பிரிவு 2 (q), வேலைநிறுத்தம் என்பதற்கான வரையறையில், எந்த ஒரு தொழிற்துறையிலும் செயல்படும் தொழிலாளர்களின் கூட்டமைப்பு, வேலை செய்து கொண்டிருக்கின்ற அல்லது பணி நியமனம் வழங்கப்பட்டுள்ள ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்களின் ஒரு பொதுப் புரிதலின்படி, கருத்தொற்றுமையின் அடிப்படையில் பணி செய்ய மறுப்பது என்று குறிப்பிட்டுள்ளது.

1947 ஆம் ஆண்டின் தொழிற்தகராறு சட்டத்தின் பிரிவு 22 (1), வேலைநிறுத்தம் செய்வதற்கான உரிமையின் மீது சில தடைகளை விதித்துள்ளது. இதன்படி பொதுத்துறை சேவை நிறுவனங்களில் பணியாற்றும் எந்தவொரு நபரும் ஒப்பந்தத்தை மீறும் வகையில் கீழ்கண்ட விதிகளின் படி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது தடைசெய்யப்பட்டுள்ளது:

() வேலைநிறுத்தம் பற்றிய அறிவிப்பை குறைந்தது ஆறு வாரங்களுக்கு முன்னர் முதலாளிக்கு தெரிவிக்காமல் அல்லது

() அத்தகைய அறிவிப்பை வழங்கிய பதினான்கு நாட்களுக்குள் அல்லது

() மேற்கூறிய எந்தவொரு அறிவிப்பிலும் குறிப்பிடப்பட்டுள்ள வேலைநிறுத்தத்தின் தேதிக்கு முன்னதாகவோ அல்லது

() சமரச நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட அதிகாரியின் முன்னிலையில் நிலுவையில் உள்ளபோதோ மற்றும் அத்தகைய நடவடிக்கை முடிந்த ஏழு நாட்களுக்கு முன்னதாகவே வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது.

அதாவது மேற்சொன்ன விதிகளுக்கு அப்பால் வேலை நிறுத்தம் சட்டபூர்வமானது.

மொழிபெயர்ப்பு : மணி

Permanent link to this article: http://new-democrats.com/ta/news-and-views-22082017-ta/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
உட்காரும் உரிமைக்காக தொழிலாளி வர்க்கத்தின் போராட்டம்

நாள் முழுவதும் உட்காராமல் நின்று கொண்டே இருக்க வேண்டும், தண்ணீர் குடிக்கவோ, சிறுநீர் கழிக்கவோ கூட அனுமதி கிடையாது. உணவு அருந்த பத்து நிமிடம் இடைவேளை, அதற்குள்...

ஐ.டி துறை : வேலையே மாயம்!

1990-களில் இந்தியாவை உலகின் மென்பொருள் வல்லரசாக ஆக்குவதாக அறிவித்த தகவல் தொழில்நுட்பத் துறை என்ற கப்பல், 37 லட்சம் ஊழியர்களை சுமந்து கொண்டு பனிப்பாறையின் மீது மோதி...

Close