நீரவ் மோடியின் 11,200 கோடி ஆட்டை – தேவை நரேந்திர மோடியின் “துல்லிய தாக்குதல்”

This entry is part 22 of 22 in the series பண மதிப்பு நீக்கம்
  1. கருப்புப் பணத்தின் மீது மோடியின் “சர்ஜிகல் ஸ்டிரைக்”
  2. டாலர்-ரூபாய், அமெரிக்கா-இந்தியா பற்றி இந்துத்துவ பிதற்றல்கள்
  3. ரூபாய் நோட்டு செல்லாததானது – உழைப்பாளிகளுக்கு ஐ.டி சங்கத்தின் மடல்
  4. கருப்புப் பண ஒழிப்பு மோசடி – மக்கள் அதிகார நிலைப்பாடு
  5. கருப்புப் பணத்தை ஒழிக்க முடியுமா?
  6. “10 நாட்களில் பிறக்குமா புதிய இந்தியா” தொலைக்காட்சி விவாதம்
  7. வங்கியில் பணத்தை எடுப்போம், வங்கிக் கணக்கை முடிப்போம் – மக்கள் அதிகாரம் அறைகூவல்
  8. டெல்டா விவசாயம் நெருக்கடியில்! விவசாயிகள் தற்கொலை! ரூபாய் நோட்டு பிடில் வாசிக்கிறார் மோடி!
  9. செல்லாத நோட்டு, கருப்புப் பணம், டிஜிட்டல் பணம் – யதார்த்தம் சொல்லும் பெண்கள்
  10. வங்கிப் பணத்தை எடுப்போம்! வங்கிக் கணக்கை முடிப்போம்!
  11. பணமதிப்பு நீக்கம் – மோடிக்கு பொறுப்பில்லையாம்!
  12. ரூபாய் நோட்டு சாவுகள் : இப்போது வேலைப் பளுவால் வங்கி மேலாளர் இறப்பு
  13. கருப்புப் பண ஒழிப்பு : ஆட்டோ தொழிலாளியின் சவுக்கடி
  14. மக்கள் மீது மோடியின் தாக்குதல் : கருப்புப் பணத்தை ஒழித்து விடுமா?
  15. ரூ 500, 1000 செல்லாது! மோடியின் கருப்புப் பண மோசடி!
  16. பண மதிப்பு நீக்கம் பற்றி ப. சிதம்பரம் – நீங்க நல்லவரா… கெட்டவரா…?
  17. பண மதிப்பு நீக்கமும், முதலாளித்துவமும் – ஐ.டி சங்கக் கூட்டம்
  18. மலையைக் கெல்லி எலியைக் கோட்டை விட்ட ‘திறமை’சாலி மோடி!
  19. “மோடியின் 2000 ரூபாய் திட்டம்” – உழைக்கும் மக்கள் சவுக்கடி, குமுறல் – வீடியோ
  20. பண மதிப்பு நீக்கம் : பணமும் இல்லை, வாழ்வும் இல்லை
  21. 5% வளர்ச்சியை 7% ஆகக் காட்டி மோசடி செய்யும் மோடி அரசு!
  22. நீரவ் மோடியின் 11,200 கோடி ஆட்டை – தேவை நரேந்திர மோடியின் “துல்லிய தாக்குதல்”

ஒரு இந்தியக் குடிமகனின் கடிதம்

பெறுநர் : திரு நரேந்திர மோடி அவர்கள், இந்திய பிரதமர்

மதிப்பிற்குரிய ஐயா,

2016 நவம்பர் 8-ம் தேதி நீங்கள் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துக் கொண்டிருந்த போது, நீரவ் மோடி என்ற வைர வியாபாரி பஞ்சாப் தேசிய வங்கியிலிருந்தும், பிற இந்திய வங்கிகளிலிருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் பணத்தை ஆட்டை போட்டுக் கொண்டிருந்திருக்கிறார். (அது வரையில் ரூ 6,498 கோடி). அதைத் தொடர்ந்து மார்ச் 2, 2017 முதல் மே 2, 2017 வரையிலான 63 நாட்களில் நீரவ் மோடி இன்னும் ரூ 3,032 கோடி ரூபாயை அள்ளிச் சென்றிருந்திருக்கிறார்.

அப்போதுதான் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றாமல் விட்டு விட்ட வெளிநாட்டு வாழ் இந்தியர்களும், நேபாள மக்களும் ரிசர்வ் வங்கியின் கதவுகளையும், நீதிமன்ற கதவுகளையும் தட்டிக் கொண்டிருந்தார்கள். பண மதிப்பழிப்பு என்ற “துல்லிய தாக்குதல்” ஊழலையும், லஞ்சத்தையும், பயங்கரவாத நடவடிக்கைகளையும், கருப்புப் பணத்தையும் அழிக்கும் ஆயுதம் என்று சாதித்த நீங்கள் அதில் ஒரு இம்மியளவு கூட சலுகை கொடுக்க தயாராக இல்லை.

ஆனால், இப்போது நீரவ் மோடி காட்டியிருப்பது போல, கொசுக்கள் ரத்தத்தை உறிஞ்சி விட்டு தப்பிப் போகும் ஓட்டைகளை நீங்கள் அடைத்துக் கொண்டிருந்த போது, வாளி வாளியாக ரத்தத்தை வடித்துக் கொண்டு இரத்தக் காட்டேறிகள் வெளியேறும் ஜன்னல்கள் திறந்து கிடந்திருக்கின்றன. அவற்றின்ந வழியாக நமது மக்களின் இரத்தமும், உழைப்பும் உறிஞ்சப்பட்டுக் கொண்டிருந்திருக்கிறது.

நீரவ் மோடி போன்றவர்கள் நமது நாட்டை கொள்ளை அடிக்கும் வழி முறை பற்றி தெரியாத அப்பாவியாக நீங்கள் இருந்திருக்கிறீர்கள் என்றே வைத்துக் கொள்கிறேன். அப்படியானால் உங்கள் நிர்வாகத் திறமை பற்றி கேள்வி எழுகிறது. அதை வேண்டுமானால் மன்னித்து விட்டு விடுகிறோம்.

ஆனால், பெல்ஜியத்தில் பிறந்து, அமெரிக்காவில் படித்து, டாவோஸ் மாநாட்டில் கலந்து கொள்ளும், ஐந்து நட்சத்திர வாழ்க்கை வாழும் நீரவ் மோடி போன்ற மேட்டுக் குடி கயவர்கள் எந்த வழிகளில் நமது நாட்டை மொட்டை அடிக்கிறார்கள் என்று இப்போது நமக்கு தெரிய வந்திருக்கிறது.

இந்த வழிகளை அடைப்பதற்கு இன்னொரு “துல்லிய தாக்குதலை” அறிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்திய முதலாளிகள் சார்பாக வங்கிகள் கொடுத்திருக்கும் அமைத்து கடன் கடிதங்களையும், பொறுப்பு ஏற்பு கடிதங்களையும் உடனடியாக ரத்து செய்து விடுங்கள் (யாருக்குத் தெரியும், இதை பயன்படுத்தி எத்தனை பயங்கரவாத அமைப்புகள் பணத்தை திரட்டி எல்லையில் நமது வீரர்களை கொலை செய்து கொண்டிருக்கின்றன என்று). முதலாளிகள் எல்லோரையும் வங்கிகளுக்கு முன்பு வந்து வரிசையில் நின்று இந்த கடன் கடிதங்கள் நியாயமான தேவைக்கானவைதான் என்று நிரூபிப்பதற்கான ஆவணங்களை கொடுக்கச் சொல்லுங்கள்.

ஊழலை ஒழிப்பதற்கு இந்த சின்ன சிரமத்தை சகித்துக் கொள்ளும்படி உங்கள் நண்பர்களான அதானி, அம்பானி மற்றும் பிற குஜராத்தி முதலாளிகளை கேட்டுக் கொள்ளுங்கள். எல்லையில் நமது வீரர்கள் தமது உயிரையே தியாகம் செய்யும் போது இதைக் கூட சகித்துக் கொள்ளக் கூடாதா என்று விளக்குங்கள்.

செய்வீர்களா?

அக்கறையுடனும், கவலையுடனும்
ஒரு இந்திய குடிமகன்

Series Navigation<< 5% வளர்ச்சியை 7% ஆகக் காட்டி மோசடி செய்யும் மோடி அரசு!

Permanent link to this article: http://new-democrats.com/ta/nimos-11-2k-cr-loot-want-another-surgical-strike-from-namo-ta/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
CTS CEO Frank D’Souza
புகார் கொடுத்த சி.டி.எஸ் ஊழியர்களுக்கு புராஜக்ட் ஒதுக்கவும் – தொழிலாளர் துறை

“லட்டு இருப்பதால்தான் ஈக்கள் மொய்க்கின்றன. லட்டை அகற்றி விட்டால் எல்லோரும் கலைந்து விடுவார்கள்" என்று நிர்வாகத் தரப்பும், தொழிலாளர் அலுவலரும் பேசிக் கொண்டதை கேட்ட ஊழியர்கள், ஊழியர்கள்...

“7500 ரூபால வாடக கொடுப்பனா, சாப்டுவனா, பிள்ளகள படிக்க வப்பனா”

"நீதான் ஆஸ்பிட்டல் இன்சார்ஜ். ஹோல் இன்சார்ஜ். டாக்டர் இல்லனா, பாரு, பார்மசி இல்லனா, பாரு, லேப இல்லனா, பாரு, எல்லாத்தயும் பண்ணு, ஆனா, நான் சம்பளம் மட்டும்...

Close