நீரவ் மோடியின் 11,300 கோடி ஆட்டை – மக்களை முட்டாளாக்கும் ஊடகமும் மோடி அரசும்

டகங்களும், சி.பி.ஐ-ம், மோடி அரசும், ஏன் எதிர்க்கட்சிகளும் கூட நம்மை முட்டாளாக்கிக் கொண்டிருக்கின்றன. ரூ 11,300 கோடியை பஞ்சாப் வங்கியின் கீழ்நிலை ஊழியர்கள் 2 பேர் மூலமாக நீரவ் மோடி திருடி விட்டதாக கதை சொல்கின்றனர்.

இது ஒரு லட்சம், ரெண்டு லட்சம் கிடையாது சார், ரூ 11,00,000,000,000,000 (11-க்குப் பிறகு 11 சைபர்)

வங்கியில் 5 லட்சம் ரூபாய் கடன் கேட்டால் அதை கிளை மேலாளர் கொடுத்து விடலாம், ஒரு சில கோடி கடனுக்கு மண்டல கடன் பிரிவின் ஒப்புதல் தேவைப்படலாம். பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான கார்ப்பரேட் கடன்கள் இயக்குனர் குழு மட்டத்தில் முடிவெடுக்கப்பட வேண்டும். ரூ 11,00,000,000,000,000 (11-க்குப் பிறகு 11 சைபர்) – பணத்துக்கான பொறுப்பை ஒரு SWIFT ஆப்பரேட்டரும், அவரது சூப்பர்வைசரும் சேர்ந்து உருவாக்கி விட்டதாக நம்பச் சொல்கிறார்கள்.

நீரவ் மோடியின் உலகளாவிய இந்திய பிராண்ட் (இந்திய முதலாளிகளின் கனவு இலக்கு)

அப்படியே வங்கியின் நடைமுறைகள் அவ்வளவு அபத்தமாக இருந்தாலும்

 • வங்கியின் உள் தணிக்கைக் குழு 7 ஆண்டுகளாக இதை கண்டுபிடிக்கவில்லை
 • வங்கியால் அமர்த்தப்படும் வெளி தணிக்கையாளர்களும் இவ்வளவு பெரிய ஓட்டையை கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறார்கள்.
 • வங்கிகளை கண்காணித்து முறைப்படுத்த வேண்டிய ரிசர்வ் வங்கியும் குறட்டை விட்டுக் கொண்டிருந்திருக்கிறது.
 • பஞ்சாப் வங்கியின் பொறுப்புணர்வு கடிதத்தின் அடிப்படையில் கடன் கொடுத்த பிற வங்கிகளும் ஒருவர் கூட 7 ஆண்டுகளாக இதை சரிபார்க்கவில்லை.
 • இந்த கீழ்நிலை ஊழியர்கள் 7 ஆண்டுகளாக பணி மாற்றம் செய்யப்படாமல் இந்த மோசடியை தொடர்ந்து நடத்த அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் (இதுவும் வங்கி நடத்தை விதிமுறைகளுக்கு மாறானது)

நீரவ் மோடியின் பிராண்டிங்

இதற்கிடையில், வங்கியின் கோர் பேங்கிங் மென்பொருள் – இன்ஃபோசிஸ்-ன் ஃபினக்கிள் – இது போன்ற வெளிநாட்டுக்கு அனுப்பும் SWIFT பரிமாற்றங்களை பதிவு செய்வதில்லை என்று சொல்கிறார்கள். அப்படியே மென்பொருள் இதை கண்காணிக்கா விட்டாலும், அதைத் தெரிந்து வைத்திருக்கும் நிர்வாகம், இத்தனை பெரிய ஓட்டையை தினமும் அறிக்கை வாங்கி கண்காணித்திருக்க வேண்டுமே! அதைச் செய்யாமல் வங்கியின் உயர் மட்ட மேலாளர்கள் என்ன புல் வெட்டிக் கொண்டிருந்தார்கள்? இதற்கு பொறுப்பேற்று எத்தனை பேர் ராஜினாமா செய்திருக்கிறார்கள்.

யாரும் இல்லை.

ஒரு ஆட்டோ ஓட்டுனர் ரூ 11,300 கோடியை ஈட்ட வேண்டுமானால் 8 லட்சம் பிறவி எடுத்து உழைக்க வேண்டும்.

வங்கிகளின் டிஜிட்டல் அமைப்பு இந்த லட்சணத்தில்  இருக்கும் போதுதான் நாட்டின் 120 கோடி மக்களையும் டிஜிட்டல் உலகுக்குள் இழுக்கிறார், மோடி. பணத்தை எல்லாம் வங்கிக்குள் போட்டு பத்திரமாக முதலாளிகளின் மோசடிக்கு ஒப்படைக்கச் சொல்கிறார்.

 • ரூ 11,300 கோடியில் முகேஷ் அம்பானியின் ஆன்டிலா மாளிகை போல இரண்டு கட்டிடங்கள் கட்டி விடலாம்
 • ரூ 11,300 கோடியில் ரூ 10 லட்சம் சம்பளத்தில் 1 லட்சம் ஐ.டி ஊழியர்களுக்கு ஆண்டு சம்பளம் கொடுத்திருக்கலாம்.
 • ஒரு ஆட்டோ ஓட்டுனர் ரூ 11,300 கோடியை ஈட்ட வேண்டுமானால் 8 லட்சம் பிறவி எடுத்து உழைக்க வேண்டும்.

அரச குடும்பத்துடனும் பிரதமர் மோடியுடனும், ராகுல் காந்தியுடனும் உறவாடிய நீரவ் மோடி

இந்தப் பணத்தை பயன்படுத்திதான்

 • நீரவ் மோடி “உலகளாவிய இந்திய ஆடம்பர நகை பிராண்ட்”-ஐ உருவாக்கிக் கொண்டிருந்திருக்கிறார்.
 • இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவை தனது பிராண்ட் தூதராக நியமித்துக் கொண்டார்.
 • தனது நகை டிசைன்களை அறிமுகப்படுத்த ஆடம்பர விருந்துகளை நடத்தினார். (அதில் ராகுல் காந்தி கலந்து கொண்டதாக பா.ஜ.க ஊடகங்கள் தெரிவிக்கின்றன)
 • சமீபத்தில் ரூ 105 கோடி மதிப்பிலான ஒரு நகை செட்-ஐ டிசைன் செய்திருக்கிறார்.
 • மும்பையில் ஆடம்பர அலுவலகம் திறந்திருக்கிறார் (அந்த அலுவலகத்தை காங்கிரசின் அபிஷேங் சிங்வியின் மனைவியும் மகனும் இயக்குனராக இருக்கும் நிறுவனம் நீரவ் மோடிக்கு வாடகைக்கு விட்டதாக நிர்மலா சீதாராமனின் ஆய்வு கண்டுபிடித்திருக்கிறது)

மொத்தத்தில் இந்திய மக்களின் பணத்தில் ஊதாரி வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார், நீரவ் மோடி.

இதுதான் வாழ்க்கையில் வெற்றி பெற்றதற்கான அடையாளம் என்று சொல்கின்றனர் இந்திய மேட்டுக் குடியினர்.

ஆனால், இதுதான் வாழ்க்கையில் வெற்றி பெற்றதற்கான அடையாளம் என்று சொல்கின்றனர் இந்திய மேட்டுக் குடியினர். கோடிக்கணக்கான கூலித் தொழிலாளர்கள் வேலை கிடைக்கும் வரை சாப்பிட வழியில்லாமல் இருக்கும் நாட்டில், ஒரு வீட்டுக் கடனுக்காக நூறு படி ஏறி இறங்கி, வாழ்நாள் முழுதும் தவணை கட்டும் நடுத்தர வர்க்கம் வாழும் நாட்டில் இருந்து கொள்ளை அடித்துதான் இத்தகைய “வெற்றி”யை சாதிக்கின்றனர் இந்தக் கயவர்கள்.

இதில் நீரவ் மோடி ஏதோ விதி விலக்கு என்று யாரும் நினைத்து விடலாம்.  இந்திய முதலாளிகள் இப்படி மக்கள் பணத்தில்தான் மஞ்சள் குளித்துக் கொண்டிருக்கிறார்கள், பொறுப்பில்லாத ஊதாரி வாழ்க்கை நடத்திக் கொண்டு தம்மால்தான் நாடே இயங்குவதாக பீலா விடுகிறார்கள்; உழைக்கும் மக்களை சுரண்டுவதற்கு புதுப்புது திட்டங்கள் தீட்டுகிறார்கள்.

இப்போது நீரவ் மோடி நியூயார்க் நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் ஆடம்பர அறை எடுத்து பதுங்கியிருக்கும் நேரத்தில், சி.பி.ஐ-ஓ அவரது நிறுவனத்தின் ஒரு கணக்காளரையும், பஞ்சாப் வங்கியின் ஓய்வு பெற்ற துணை மேலாளர் ஒருவரையும், ஒரு கீழ்நிலை கிளர்க்கையும் கைது செய்து நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறது.

பா.ஜ.க.வோ நீரவ் மோடிக்கும் ராகுல் காந்திக்கும் உறவையும், நீரவ் மோடிக்கு வாடகைக்கு இடம் கொடுத்த காங்கிரஸ் பின்னணியையும் பீராய்ந்து கொண்டிருக்கிறது.

நீரவ் மோடி தங்கியிருக்கும் ஹோட்டல், டிரம்ப் இன்டர்நேஷனல் ஹோட்டல் அண்ட் டவர் என்ற கட்டிடத்தில் இருந்து 5 நிமிடத்தில் நடந்து செல்லும் தூரத்தில்தான் இருக்கிறது என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் நெருக்கமான நட்பு என்று இவர்கள்தான் சொல்கிறார்கள். மோடி ஒரு ஃபோனை போட்டு டிரம்புக்கு சொல்லி, அதிரடி தாக்குதல் படைகளை அனுப்பி நீரவ் மோடியை பிடித்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்வாரா?

டிரம்பும் சரி, மோடியும் சரி தமக்கோ, தமது கோடீஸ்வர நண்பர்களுக்கோ தேவைப்படும் போது சட்ட நடைமுறைகள், சர்வதேச விதிமுறைகள் இவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் அதிரடி நடவடிக்கை எடுக்கத் தயங்காதவர்கள்தானே!

நரேந்திர மோடி செய்வாரா.

– அக்கறையுள்ள இந்தியக் குடிமகன்

Permanent link to this article: http://new-democrats.com/ta/nimos-11-3k-crore-loot-media-and-modi-government-making-fools-of-people-ta/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
பல்லாயிரம் ஐ.டி ஊழியர்கள் வேலைபறிப்பு: கார்ப்பரேட் கனவான்களின் கழுத்தறுப்பு!

இணையத்தில் மட்டுமே குமுறல்களை பகிர்ந்து கொள்கிறோம். இணையத்தை விட்டு வெளியில் வந்தாக வேண்டிய தருணத்தில் இருக்கிறோம். நாஸ்காம் கருப்புப் பட்டியலில் சேர்த்து விட்டால் எந்த ஜென்மத்திலும் வேலை...

ஸ்விகி தொழிலாளர்கள் போராட்டம் – தேவை ஒரு புதிய அணுகுமுறை

"சரிங்க, இதெல்லாம் உங்க ஓனருக்குத் தெரியுமா" "ஆபீஸ்ல சொல்றோம்ல அவ்வளவுதான். இந்த கம்பேனிக்கு யார் ஓனர்னே எங்களுக்குத் தெரியாதுங்க"

Close