ஆசிரியர்கள்/அரசு ஊழியர்கள் மட்டுமில்லை, ஐ.டி ஊழியர்களும் ஒடுக்கப்படுகின்றனர்

31.01.2019

பத்திரிகை செய்தி (டவுன் லோட் பி.டி.எஃப்)
ஆசிரியர்கள்/அரசு ஊழியர்கள் மட்டுமில்லை, ஐ.டி ஊழியர்களும் ஒடுக்கப்படுகின்றனர்

அன்பான ஊடக நண்பர்களுக்கு,

பொருள் : காக்னிசன்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி திரு ராஜ் மேத்தா ஊழியர்களை “dead wood” என்று பேசியதையும் அதைத் தொடர்ந்து அந்நிறுவனத்தில் கடந்த 6 மாதங்களாக நடந்து வரும் சட்ட விரோத பணி நீக்கங்களையும் கண்டித்து

பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு தொழிற்சங்க சட்டம் 1926ன் கீழ் முறையாக பதிவு செய்யப்பட்ட, உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களில் பணி புரியும் ஐ.டி ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் ஆகும்.

ஊழியர்களை “Deadwood” என்று சித்தரிக்கும் திரு ராஜ் மேத்தாவின் அறிக்கை ஊடகங்களில் வெளியானது

ஆகஸ்ட் 3, 2018

200 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதை எகனாமிக் டைம்ஸ் நாளிதழ் உறுதி செய்தது.

அக்டோபர் 11, 2018

பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு இது தொடர்பாக விளக்கம் கேட்டு திரு ராஜ் மேத்தாவுக்கு கடிதம் அனுப்பியது.

அக்டோபர் 15, 2018

செப்டம்பரில் முடியும் காலாண்டில் காக்னிசன்ட் நிறுவனத்தில் வேலையை விட்டு போகும் ஊழியர்களின் எண்ணிக்கை 20% என்ற செய்தி

அக்டோபர் 31, 2018

இந்த கருத்துக்கு மன்னிப்பு கேட்டு அதை திரும்பப் பெறுமாறு திரு ராஜ் மேத்தாவுக்கு பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு கடிதம். அதன் நகல்கள் தொழிலாளர் ஆணையர், தமிழ்நாடு தொழிலாளர் துறை செயலர், சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு அனுப்பப்பட்டன

டிசம்பர் 6, 2019

சென்னை, குறளகத்தில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகத்தில் திரு ராஜ் மேத்தாவின் அறிக்கையையும் சட்ட விரோத பணி நீக்கங்களையும் கண்டித்து பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு மனு கொடுத்தது

ஜனவரி 28, 2019

இவ்வாறு நூற்றுக் கணக்கான ஊழியர்களின் சட்ட விரோதமான ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு பொறுப்பாக திரு ராஜ் மேத்தா இருக்கிறார்.

கடந்த 6 மாதங்களில் சட்ட விரோத பணி நீக்கத்தினால் பாதிக்கப்பட்ட காக்னிசன்ட் ஊழியர்கள் எமது சங்கத்தைத் தொடர்பு கொள்ளவும். தனிப்பட்ட முறையில் தொழிற்தகராறு சட்டம் 1947, பிரிவு 2A-ன் கீழ் சம்பள நிலுவையுடன் மீண்டும் பணியில் சேர்க்குமாறு கோரலாம். அதே நேரம், பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு மூலமாக சட்ட விரோத ஆட்குறைப்பு நடவடிக்கைக்கான நிவாரணத்தை தொழிற்தகராறு சட்டத்தின் பிரிவு 2K-ன் கீழ் தாக்கல் செய்ய முடியும்.

ஊடக நண்பர்கள், இந்த பத்திரிகை செய்தியை வெளியிட்டு இந்தியா முழுவதும் உள்ள 40 லட்சம் ஐ.டி ஊழியர்களுக்கும் குறிப்பாக தமிழகத்தில் உள்ள 4 லட்சம் பேருக்கு சென்றடைய உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உங்கள் உண்மையுடன்,

(சுகேந்திரன்)
செயலாளர்

(டவுன் லோட் பி.டி.எஃப்)

More from New Democrats

Permanent link to this article: http://new-democrats.com/ta/not-only-teachers-govt-employees-it-employees-also-suffer-ta/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
கான்பூர் தோல் பதனிடும் தொழில்களை அழிக்கும் பா.ஜ.க ஆட்சி

2014 முதலே தோல் தொழில் நசியத் துவங்கியது. கான்பூரிலுள்ள தோல் அங்காடியான "பெக் பாக்" வெறிச்சோடிப் போனது. தோல் வியாபாரிகள் கழகத்தில் ப்ரெசிடெண்ட், அப்துல் ஹக், அவரது...

செல்வத்தை குவிக்கும் 1%, வேலை வாய்ப்பு இழக்கும் 99%

பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயுள்ள இடைவெளி அதிகரித்துக் கொண்டே செல்வது சமூகத்தில் கலகங்களை உருவாக்கும் என்றும் கடந்த ஆண்டில் மட்டும் இது தொடர்பான போராட்டங்கள் கணிசமான அளவில் அதிகரித்துள்ளன...

Close