சீறும் செவிலியர் போராட்டம் – பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு ஆதரவு

ழைப்பில் தேய்ந்து
வறுமையில் காய்ந்த
வாழ்க்கையை
மீட்டெடுக்க
போராட்டத் தீ பற்றிக்கொண்டது
எங்கும் பரவட்டும்
எலும்புகள் கூட விட்டு வைக்காமல்
கொள்ளையர்களின் கூடாரம்
உடனே சாம்பலாகட்டும்

டி.எம்.எஸ் வளாகத்தில் போராடும் செவிலியரை சந்தித்து ஆதரவு தெரிவித்த பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு துணைத்தலைவர் வாசுகி சீனிவாசன்

வயிற்றில் சுமக்கும்
குழந்தை போல
பணியில் நோயாளிகளை
சுமக்கின்றவர்கள் செவிலியர்
அட்டைப்புழுவாய்
அவர்கள் உழைப்பை
உறிஞ்சிய பிறகு
ஆதாரமாய் உயிர் வாழ
ஒழுங்கான
ஊதியம் தர மறுக்கிறது அரசு

ஒரு பக்கம்
வருமானத்துக்கு அதிகமாய்
சொத்து சேர்த்ததாய்
சோதனை நாடகம் நடக்கிறது,
இன்னொரு பக்கம்
வருமானமே போதாமல்
வாழவே முடியாமல் செய்கிறது
இரக்கமில்லாத இந்த அரசு

ஒவ்வொரு நாளும்
ஒரு பகட்டுடையில்
உலா வரும் அதிகாரிகளுக்கும்
அரசியல்வாதிகளுக்கும்
எப்படி புரியும்?
ஒரே சீருடையில்
மக்களுக்காக உழைக்கும்
செவிலியரின் போராட்டம்..

யாருடைய பிள்ளை அழுதாலும்
சுயநலமில்லாமல்
ஓடிவந்து வைத்தியம் பார்த்தவர்கள்,
இப்போது தம்முடைய பிள்ளை
பசியில் அழுகிறது, தவிக்கிறார்கள்
யார் கைகொடுப்பது?

எத்தனை
உயிர்கள் பிழைக்க
காரணமாய் இருந்திருப்பார்கள்,
இப்போது
அவர்கள்
உயிர் ஆபத்தில்
தவிக்கிறது
யார் கைகொடுப்பது?

இரவெல்லாம் விழித்திருந்து
நோய்களை
குணப்படுத்த உழைத்தவர்கள்
இப்போது
கழிப்பறை கிடைக்காமல்
கஷ்டத்தில் துடிக்கிறார்கள்,

தவிக்கும் வாய்க்கு
தண்ணீர் கொடுங்கள்
என்றார்கள்
நம் முன்னோர், ஆனால்
செத்தாலும்
தண்ணீர் தர மறுக்கிறது
இன்றைய ஆளும் அரசு

லஞ்ச ஊழலில்
பெயர்போன நீதிபதிகளிடம்,
உரிமைக்காக
போராடும் செவிலியர்கள்
வேலையை பறிக்கும் அதிகாரம் ,
ஜனநாயக போர்வைக்குள்
பாசிச விசமாக
பாய்ந்து மிரட்டுகிறது

ஆளும் ரவுடி கும்பல்களான
“ஆட்சியாளர்களும்”
“அதிகாரிகளும்”
வாழ்வாதார போராட்டத்தை
வளர விடாமல்
திட்டம்போட்டு தாக்குகின்றன

தாயின் வயிற்றில்
பசிக்கு துடிக்கும்
குழந்தையை போல
உங்களது உள்ளிருப்பு போராட்டம்,
எப்படியும் சுகபிரசவம்தான்
மனிதம் இல்லாத
இந்த அரசு
காக்கிகளை வைத்து
கலைத்து விடாத வரையில்

போராடி பெற்ற
அரசாணையை(191)
போராடித்தான்
அமல்படுத்த
வேண்டிருக்கிறது,
அநாகரீக அரசை
அகற்ற வேண்டிய தருணம்
வந்துவிட்டது

உடலில் உண்டான
பலவித நோய்களுக்கு
மருத்துவம் பார்த்த நீங்கள்
இப்போது
சமுகத்தில் உண்டான
“பொருளாதார ஏற்றத்தாழ்வு”
என்கிற நோய்க்கு
மருத்துவம் பார்க்க போராடுகிறீர்கள்

அநீதியான அரசுதான்
அந்தக் கிருமி
ஆதலால் அதை
அறுவை சிகிச்சை செய்து
அகற்ற போராடுங்கள்
நாங்களும் துணை நிற்கிறோம்!

– சுகேந்திரன், செயலாளர்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவு 

Permanent link to this article: http://new-democrats.com/ta/nurses-strike-ndlf-it-solidarity/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் – மீம்ஸ்

ஹஸ்ரத் மகல், காஷ்மீர், பெங்களூரு, மூணாறு, சாவித்ரிபாய் பூலே, ஜோதிபா பூலே, சர்வதேச உழைக்கும் மகளிர் தினம்

மேட்டூர் கெம்பிளாஸ்ட் ஆலைத் தொழிலாளர்கள் போராட்டம்

தொழிலாளர்களின் இந்தப் போராட்டத்தை முடக்குவதற்கு, போலீசு, நீதிமன்றம் என்று ஆளும்வர்க்கத்தின் அனைத்து கரங்களையும் கார்ப்பரேட் நிர்வாகம் பயன்படுத்துகிறது. இதனை எதிர்த்து "தொழிலாளர் ஒற்றுமை" என்ற ஒரே ஆயுதத்தை...

Close