அன்றாடம் மக்கள் அவசியம் பயன்படுத்தும் வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. நாடாளுமன்றத்தில் இதைப் பற்றிய விவாதத்தின் போது நாட்டின் நிதியமைச்சர் நான் வெங்காயம் சாப்பிடும் குடும்பத்தில் இருந்து வரவில்லை என்று பதிலளிக்கிறார். அமைச்சரின் அலட்சியத்தையும், திமிரையும் சமூக வலைத்தளங்களில் மக்கள் பரவலாக விமர்சித்துக் கொண்டிருந்தாலும் இந்த அரசால் பொருளாதார வீழ்ச்சியை மட்டுமல்ல வெங்காய விலை உயர்வைக் கூட சரி செய்ய முடியாது என்பதே உண்மை.
வெங்காய விலையேற்றத்தின் காரணம், பொருளாதார வீழ்ச்சி, பொருளாதார வீழிச்சியை சரிக்கட்ட அரசு எடுக்கும் நடவடிக்கைகள் ஏன் கைகொடுக்கவில்லை போன்ற விசயங்களைப் பற்றி பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் அவர்கள் ஆதான் தமிழ் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விவரிக்கிறார்.
நன்றி: ஆதான் தமிழ் யூட்யூப் சேனல்