மோடி 2013-ம் ஆண்டு பா.ஜ.க-வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தமிழகத்தில் ஓட்டு வேட்டையாட திருச்சி வந்த போது பா.ஜ.க-வின் இளைஞர் மாநாட்டில் இப்படி பேசினார்.
“… தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்படுகிறார்கள்”
“நமது மீனவர்களை இலங்கைக்கு ஏன் கொண்டு செல்கிறார்கள் என்று உங்களுக்கு தோன்றலாம்”
“இதற்கான தைரியம் இந்த நாடுகளுக்கு ஏன் வந்தது. விஷயம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும் கடலில் இல்லை, டெல்லியில் உள்ள பலமில்லாத அரசின் காரணமாகத்தான் இந்த நாடுகளுக்கு இந்த தைரியம் வந்துள்ளது.”
“கடற்கரையோரம் முழுவதும் வசிக்கும் நமது மீனவர்களை பாதுகாக்க, அவர்களது பிழைப்பை நடத்த வாய்ப்பு ஏற்படுத்த வேண்டுமென்றால், டெல்லியில் இருக்கும் பலவீனமான ஆட்சியை தூக்கி எறிய வேண்டும்”
“… அண்டை நாடுகள் பலவீனமான ஆட்சியின் காரணமாக இந்தியாவை ஏளனமாக பார்க்கிறார்கள். அதனால்தான் இந்தியர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது”
மோடி ஆட்சிக்கு வந்த பிறகும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்கிறது. மோடி அரசோ இலங்கை அரசுடன் கூடிக் குலாவுகிறது. இலங்கை இராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கிறது. இப்போது இலங்கை கடற்படையினால் சுடப்பட்டு கழுத்தில் குண்டு பாய்ந்து உயிரிழந்திருக்கிறார் 21 வயதான மீனவ இளைஞர் பிரிஸ்டோ. துப்பாக்கிச் சூட்டில் ஜெரோன் என்ற மீனவர் படுகாயமடைந்துள்ளார்.
அப்போது பொய் சொல்லி ஆட்சியைப் பிடித்து தொடர்ந்து தமிழக மக்களுக்கு விரோதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் மோடி அரசு பிரிட்ஜோ படுகொலைக்கு ஆழ்ந்த கவலை தெரிவிக்கிறது. பா.ஜ.க-வின் சுப்பிரமணிய சாமி தமிழர்களை ஏளனம் செய்கிறார்.