பண மதிப்பு நீக்கம் பற்றி ப. சிதம்பரம் – நீங்க நல்லவரா… கெட்டவரா…?

 1. கருப்புப் பணத்தின் மீது மோடியின் “சர்ஜிகல் ஸ்டிரைக்”
 2. டாலர்-ரூபாய், அமெரிக்கா-இந்தியா பற்றி இந்துத்துவ பிதற்றல்கள்
 3. ரூபாய் நோட்டு செல்லாததானது – உழைப்பாளிகளுக்கு ஐ.டி சங்கத்தின் மடல்
 4. கருப்புப் பண ஒழிப்பு மோசடி – மக்கள் அதிகார நிலைப்பாடு
 5. கருப்புப் பணத்தை ஒழிக்க முடியுமா?
 6. “10 நாட்களில் பிறக்குமா புதிய இந்தியா” தொலைக்காட்சி விவாதம்
 7. வங்கியில் பணத்தை எடுப்போம், வங்கிக் கணக்கை முடிப்போம் – மக்கள் அதிகாரம் அறைகூவல்
 8. டெல்டா விவசாயம் நெருக்கடியில்! விவசாயிகள் தற்கொலை! ரூபாய் நோட்டு பிடில் வாசிக்கிறார் மோடி!
 9. செல்லாத நோட்டு, கருப்புப் பணம், டிஜிட்டல் பணம் – யதார்த்தம் சொல்லும் பெண்கள்
 10. வங்கிப் பணத்தை எடுப்போம்! வங்கிக் கணக்கை முடிப்போம்!
 11. பணமதிப்பு நீக்கம் – மோடிக்கு பொறுப்பில்லையாம்!
 12. ரூபாய் நோட்டு சாவுகள் : இப்போது வேலைப் பளுவால் வங்கி மேலாளர் இறப்பு
 13. கருப்புப் பண ஒழிப்பு : ஆட்டோ தொழிலாளியின் சவுக்கடி
 14. மக்கள் மீது மோடியின் தாக்குதல் : கருப்புப் பணத்தை ஒழித்து விடுமா?
 15. ரூ 500, 1000 செல்லாது! மோடியின் கருப்புப் பண மோசடி!
 16. பண மதிப்பு நீக்கம் பற்றி ப. சிதம்பரம் – நீங்க நல்லவரா… கெட்டவரா…?
 17. பண மதிப்பு நீக்கமும், முதலாளித்துவமும் – ஐ.டி சங்கக் கூட்டம்
 18. மலையைக் கெல்லி எலியைக் கோட்டை விட்ட ‘திறமை’சாலி மோடி!
 19. “மோடியின் 2000 ரூபாய் திட்டம்” – உழைக்கும் மக்கள் சவுக்கடி, குமுறல் – வீடியோ
 20. பண மதிப்பு நீக்கம் : பணமும் இல்லை, வாழ்வும் இல்லை
 21. 5% வளர்ச்சியை 7% ஆகக் காட்டி மோசடி செய்யும் மோடி அரசு!
 22. நீரவ் மோடியின் 11,200 கோடி ஆட்டை – தேவை நரேந்திர மோடியின் “துல்லிய தாக்குதல்”

ணமதிப்பு நீக்கம் பற்றி சத்தியமூர்த்தி பவனில் 23-ம் தேதி மாலை ப.சிதம்பரம் நிகழ்த்திய உரையில் ஒரு வழக்கறிஞர் போல இதன் சட்ட நடைமுறைகளை, விதிமீறல்களை விளக்கினார். ரிசர்வ் வங்கியின் இயக்குனர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், அமைச்சரவை கூடி எடுக்க வேண்டிய முடிவை வெளியிலிருந்து திணித்து பெயரளவில் இயக்குனர் குழு பரிந்துரை, அமைச்சரவை ஒப்புதல் என்று நடத்தியிருக்கிறார்கள் என்று அம்பலப்படுத்தினார்.

p-chidambaram16 பேர் இருக்க வேண்டிய ரிசர்வ் வங்கி இயக்குனர் குழுவில் இப்போது 4 பேர்தான் இருப்பதையும், அதில் 3 பேர் மட்டுமே 8-ம் தேதி நடந்ததாக சொல்லப்படும் கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் குறிப்பிட்டார். அந்தக் கூட்டத்திலும், அமைச்சரவை கூட்டத்திலும் என்ன விபரங்கள் முன் வைக்கப்பட்டன, யார் என்ன கருத்தை சொன்னார்கள் என்ற விபரங்கள் என்பது வெளியிடப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு தனது அமைச்சரவை சகாக்களையே நம்பாமல் அவர்களது செல்ஃபோன்களையும் பிடுங்கி வைத்துக் கொண்டு 8 மணிக்கு உரையாற்றுவது வரை வெளியில் விடாமல் வைத்திருந்தார் மோடி என்று கிண்டல் செய்தார்.

எத்தனை நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன, அவற்றை மாற்றிக் கொடுக்கத் தேவையான நோட்டுகளை அச்சிட முடியுமா, 86% பணத்தை மதிப்பு நீக்கம் செய்வதால் என்ன விளைவுகள் ஏற்படும், ஏ.டி.எம் எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளனவா என்று எந்தக் கேள்வியும் கேட்காமல் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறார் பிரதமர் மோடி என்று விமர்சித்தார்.

ஜிம்பாப்வே, வட கொரியா, வெனிசுலோ போன்ற பொருளாதாரம் தடுமாறும் நாடுகளின் வரிசையில் இந்தியா சேர்ந்து விட்டதாக கிண்டல் செய்தார். “நாங்கள் வல்லரசு, உலகின் முன்னணி நாடுகளின் வரிசையில் நிற்கிறோம் என்று பீத்திக் கொண்டிருப்பவர்கள் இப்படித்தான் நம் நாட்டை கேலிப் பொருளாக்கி விட்டார்கள். உலகின் முன்னணி பொருளாதார நிபுணர்கள் அனைவரும் இந்த முடிவை விமர்சிக்கிறார்கள். ரூபாய் நோட்டு மதிப்பு நீக்கம் செய்வதற்கான தேவை – பெருமளவு பண வீக்கம், அல்லது அன்னியச் செலாவணி வீதம் கடும் ஏற்ற இறக்கம் – இல்லாமல் இப்போது இதை செய்ய வேண்டிய தேவை என்ன? இது கருப்புப் பணத்தை ஒழிக்காது, கள்ள நோட்டை பிடிக்க உதவாது, கள்ள நோட்டுகள் 1 ஆண்டில் மீண்டும் புழக்கத்தில் வந்து விடும்” என்று விளக்கினார்.

ஆனால், இந்த நடவடிக்கையின் விளைவுகள் விளக்கும் போது இந்த நாட்டில் 45 கோடி தொழிலாளர்கள் அமைப்பு சாரா உழைப்பாளர்களாக, அதில் 15 கோடி பேர் கூலித் தொழிலாளர்களாகவும் 30 கோடி பேர் சுயதொழில் (மளிகைக் கடை, தெருவோரக் கடை, சிறுதொழில்) செய்பவர்களாகவும் இருப்பதாகக் குறிப்பிட்டார். அவர்கள் தினமும் காலையில் உழைப்பாளர் கூடும் முனையில் வேலைக்கு காத்திருந்து 200 ரூபாய் 300 ரூபாய் கூலி சம்பாதிப்பவர்கள் என்றார். அவர்களது வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது என்றார்.

கார்ப்பரேட்டுகளின் சேவகர் ப. சிதம்பரம்

கார்ப்பரேட்டுகளின் சேவகர் ப. சிதம்பரம்

இதைச் சொல்வதற்கு இந்த பெரிய மனிதருக்கு வெட்கமாக இல்லை என்பதுதான் ஆச்சரியம். பெரும்பான்மையான ஆண்டுகள் இவரது கட்சி முன்நின்று, தலைமை ஏற்று நடத்திய 70 ஆண்டு கால இந்தியாவில் பெரும்பான்மை மக்களின் நிலைமை இதுதான் என்பது பற்றி அவரிடம் என்ன கருத்து இருக்கிறது.

1990-களுக்குப் பிறகு இவர் முதலில் வர்த்தக அமைச்சராகவும், பின்னர் நிதி அமைச்சராகவும், குறிப்பிட்ட காலம் உள்துறை அமைச்சராகவும் இருந்து அமல்படுத்திய தனியார்மயம, தாராளமய, உலகமய கொள்கைகள் மக்கள் மீது நடத்திய தாக்குதலின் விளைவுதான் இத்தனை கோடி பேரை  ஏதுமற்றவர்களாக முச்சந்தியில் நிறுத்தி அலைக்கழிக்கிறது என்பதைப் பற்றி அவருக்கு வெட்கமில்லை.

கருப்புப் பணம் எப்படி உருவாகிறது என்பதை விளக்கும் போது தனியார் மருத்துவக் கல்லூரியில் கட்டணத்தை பணமாக, கருப்புப் பணமாக தரச் சொல்கிறார்கள், அதுதான் கருப்புப் பணத்தின் ஊற்று என்கிறார்.

கல்வியில் தனியார் மயம், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது, இயற்கை வளங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விடுவது என்று கோர தாண்டவம் ஆடிய இந்திய அரசின் பயங்கரவாதத்தைப் பற்றி இப்போதும் பேசவில்லை, எப்போதும் பேசப் போவதில்லை.

மூன்றாவதாக, கருப்புப் பணம் எப்படி உருவாகிறது என்று சொல்லும் போது, உள்ளூர் பரிமாற்றத்தை மட்டும் குறிப்பிட்டு விட்டு நிறுத்தி விட்டார். மிகப்பெரிய பொருளாதார நிபுணராக, அமைச்சராக இருந்த அவருக்கு, பி-நோட்டுகள் எனப்படும் பங்களிப்பு குறிப்புகள் (p-note) மூலம் கருப்புப் பணம் வெளிநாடுகள் வழியாக இந்திய பங்குச் சந்தைக்குள் பாய்வதையும், அன்னிய நேரடி முதலீடு என்ற பெயரில் மொரீஷியஸ் வழியாக வரி கட்டாமல் பாயும் பணத்தையும் குறிப்பிட மறந்து விட்டார் அல்லது மறைத்து விட்டார்.

நோக்கியாவும், வோடஃபோனும், வேதாந்தாவும் வரியும் கட்டுவதில்லை, கணக்கும் காட்டுவதில்லை, அவர்களுக்கு வழக்காடுவதும், அரசியல் செய்வதும்தான் தனது வாழ்க்கைப் பணியாக இருந்து வருகிறது என்பதை மறந்து விட்டார்.

ப சிதம்பரத்தின் பேச்சு பண மதிப்பு நீக்க விவகராத்தில் மோடி அரசின் முகமூடியை கிழிப்பதற்கு உதவியிருக்கிறது. ஆனால், இதை செம்பை எடுத்து பத்திரமாக உள்ளே வைக்க வேண்டிய யோக்கியனின் பேச்சு என்ற அளவில்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

Series Navigation<< ரூ 500, 1000 செல்லாது! மோடியின் கருப்புப் பண மோசடி!பண மதிப்பு நீக்கமும், முதலாளித்துவமும் – ஐ.டி சங்கக் கூட்டம் >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/pchidambaram-on-demonetization/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
உ.பி.யில் பா.ஜ.க-வின் மக்கள் விரோத மதவாத அரசியல்

குழந்தைகளின் மரணத்துக்கு இதுதான் உண்மை காரணம். எனவே அவை இந்த அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலைகளே! இந்தக் கொலைகளை முன்னின்று நடத்திய மத்திய மாநில அரசுகளை எப்படி...

கூகிளின் குறுஞ்செய்தி ஆப்-ஐ எதற்காகவும் பயன்படுத்த வேண்டாம்

கூகிளின் குறுஞ்செய்தி ஆப்-ஐ எதற்காகவும் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கிறார் ஸ்னோடன் கட்டுரையிலிருந்து "நீங்கள் எதுவும் கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபடவில்லை, பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிடவில்லை என்பதாலேயே உங்களைப்...

Close