திருச்சி உஷா டிராஃபிக் போலீஸ் வசூல் வேட்டை அடாவடியால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நியூஸ் 18 தொலைக்காட்சியில் நடந்த விவாத நிகழ்ச்சியிலிருந்து ஒரு சில பகுதிகள். வீடியோ நன்றி நியூஸ் 18.
வழக்கறிஞர் அஜிதா போலீசின் தன்மையை தெளிவாக விளக்குகிறார்.
- ஒரு பெண், கர்ப்பிணி பெண், உயிரிழப்பு இந்த மூன்றும் சேர்ந்ததால் இவ்வளவு பேசப்படுகிறது. டிராஃபிக் போலீசின் நடத்தை புதிய விஷயம் இல்லை. மக்களை மனிதர்களாகவே பார்க்காத ஒரு போக்கு.
- ஏட்டு கீழ்நிலை காவலரை எப்படி கூப்பிடுகிறார், சப் இன்ஸ்பெக்டரை இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டரை ஏ.சி, ஏ.சியை டி.சி?
- காவலர்களுக்கு 8 மணி நேரம், 10 மணி நேரம், 12 மணி நேரம் வேலை வாங்கப்பட்டு விலங்குகளாகவும் காட்டுமிராண்டிகளாகவும் மாறி மக்களை அடிக்கிறார்கள். வசதியாக இருக்கிற வீட்டில் இருந்து திருடன் உள்ளே போனா மரியாதை வேற, கருப்பு தோலுக்கு மரியாதை வேற, வெள்ளை தோலுக்கு வேற.
- கிரிமினல்களாக இருக்கிற அரசியல்வாதிகளுக்கு சப்போர்ட் செய்யத்தான் காவல்துறை என்று சொல்வதில் என்ன தப்பு. 25 லட்சம் ரூபாய் காரை நிறுத்த முடியலை. ஒரு சாதாரண மனிதரை விசாரிக்கும் முறையும், கொஞ்சம் பளபளத்த உடல் உள்ளவரை விசாரிக்கிறதும் வேற.
- ஒரு சாதாரண மனிதனின் பார்வையில போங்க, இந்த உடையெல்லாம் மாத்திகிட்டு தமிழ்நாட்ட சுத்தி வாங்க, மதிப்பு என்னென்னு உங்களுக்கு தெரியும்.
உஷா கொல்லப்பட்டதை தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் கூடியது ஏன்?
“போலீஸ் துறையில் சங்கம் அமைக்க வேண்டும், வேலை நேரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும், மேலதிகாரிகளுக்கு சேவை செய்வதை ஒழித்துக் கட்ட வேண்டும்.”
இறுதியாக NewsGlitz வெளியிட்டிருக்கும் ஒரு காவலரின் வெறுப்பு வாக்குமூலம்
வீடியோ நன்றி நியூஸ் 18