பத்திரிகை செய்தி : விவசாயிகளுக்கு ஆதரவாக ஐ.டி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஐ.டி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பல்லாவரம் பேருந்து நிலையம், அம்பேத்கர் சிலை அருகில்
ஏப்ரல் 18 செவ்வாய்க் கிழமை மாலை 4 மணி முதல் 7 மணி வரை

டந்த ஒரு மாதகாலத்துக்கும் மேலாக டெல்லியில் தமது கோரிக்கைகளுக்காக போராடி வரும் தமிழக விவசாயிகளை ஆதரித்து மெப்ஸ் (MEPZ) வளாகத்தில் பணிபுரியும் ஐ.டி ஊழியர்களும், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவும் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.

மெப்ஸ் வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தக் கோரி பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு சார்பில் கொடுக்கப்பட்ட கடிதத்திற்கு அனுமதி மறுத்த காவல் துறை பல்லாவரம் பேருந்து நிலையம், அம்பேத்கர் சிலை அருகில் ஏப்ரல் 18, 2017 செவ்வாய்க் கிழமை மாலை 4 மணி முதல் 7 மணி வரை ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மெப்ஸ், டைடல் பார்க், டி.எல்.எஃப் வளாகங்கள் மற்றும் பிற பகுதிகளில் பணிபுரியும் ஐ.டி ஊழியர்கள் கலந்து கொண்டு போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தமது ஆதரவை தெரிவிக்க உள்ளார்கள். இது தொடர்பாக இணைய தளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும், வாட்ஸ்-அப் குழுக்களிலும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

ஐ.டி ஊழியர்கள் ஆதரிக்கும் விவசாயிகளின் கோரிக்கைகள்

  • மத்திய அரசு தமிழக விவசாயிகளின் அனைத்து வங்கிக் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். மாநில அரசு கந்து வட்டி, நுண்கடன் கும்பல்களிடமிருந்து விவசாயிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.
  • அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூ 25,000 வறட்சி நிவாரணம் வழங்குவதற்கான நிதி ஆதாரங்களை மத்திய அரசு வழங்க வேண்டும். விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
  • மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைத்திட வேண்டும். மாநில அரசு விவசாய பாசனத்துக்கான நீர்நிலைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். ஆற்று மணல் குவாரிகளை இழுத்து மூட வேண்டும்.
  • மத்திய மாநில அரசுகள் விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலையை நிர்ணயித்து கொள்முதல் செய்ய வேண்டும். மத்திய அரசு நெடுவாசல் திட்டம் உட்பட விளைநிலங்களை பாதிக்கும் அனைத்து ஹைட்ரோகார்பன் திட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும்.
  • மாநில அரசு நெடுவாசல் திட்டத்துக்கு அனுமதி மறுக்க வேண்டும்.

தொடர்புக்கு
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவு
தொலைபேசி : 90031 98576
மின்னஞ்சல் – combatlayoff@gmail.com
இணைய தளம் – new-democrats.com

விவசாயிகள் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடி தொடர்பாக new-democrats.com தளத்தில் முன்பு வெளியான பதிவுகள்

More from New Democrats

Permanent link to this article: http://new-democrats.com/ta/press-release-ta-it-employees-demo-in-support-of-tn-farmers/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
இந்தியத் தகவல் தொழில் நுட்பத்துறைக்கு கெட்ட கனவான 2017-ம் ஆண்டு!

நிறுவன மேலாளர்கள் தமது நலன்களையும், பங்குதாரர்களையும் நலன்களையும் கவனித்துக் கொள்கிறார்கள், ஊழியர்களின் நலனை பாதுகாக்க ஊழியர்களை தவிர யார் முன்வருவார்கள்?

இந்த அரசு இரத்தத்தாலும், நிறத்தாலும் மட்டும் இந்தியர்களுடையது

கிராமப்புறங்களில் பழைய முறையிலான சட்டபூர்வமான, பொது அதிகார நியாயவுரிமையை நிலவுடைமை   ஆதிக்க வர்க்கத்தினர் இழந்தாலும் பழைய சாதிய உறவுகள் நீடித்தன. மேலும், வர்க்கப் போராட்டங்களில் பரந்துபட்ட மக்கள்...

Close