தனியார் கல்வி மோசடி பேர்வழிகளின் கொட்டம் – இந்தியாவில் மட்டுமில்லை

ந்த மாதத் தொடக்கத்தில் தனது தொழிலை இழுத்து மூடிய ஐ.டி.டி தொழில்நுட்ப நிலையம் 20 ஆண்டுகளுக்கு மேலாக அநியாய கட்டணத்துக்கு எதற்கும் உதவாத பட்டங்களை விற்றிருக்கிறது. அதன் மூலம் ஏழ்மை பின்னணி கொண்ட முதல் தலைமுறை பட்டதாரி இளைஞர்கள் பலரை தீர்க்க முடியாத கடன் சுமையில் மூழ்கடித்திருக்கிறது. இந்த மோசடி பேர்வழிகள் 1990-களிலிருந்தே சட்ட திட்டங்களுக்கு போக்கு காட்டிக் கொண்டு கொழுத்திருகின்றனர். நம் ஊர் தனியார் மருத்துவக் கல்லூரிகளும், பொறியியல் கல்லூரிகளும் அதிகாரிகளை கையில் போட்டுக் கொண்டு கொள்ளை அடிப்பதை போலவே இருக்கிறதா?

itt-scamஐ.டி.டி கல்லூரி 38 மாநிலங்களில் உள்ள 136 வளாகங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்களை ஏமாற்றியிருக்கிறது. ஒரு விற்பனை பொருள் (பட்டப் படிப்பு), வாடிக்கையாளர்கள் (மாணவர்கள்), பங்குதாரர்கள், காலாண்டு வருமான இலக்குகள் கொண்ட வணிக நிறுவனமாகவே இயங்கியிருக்கிறது. ஒரு இளநிலை பட்டத்துக்கு $77,000 வரை வசூலித்திருக்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் $17.8 கோடி (சுமார் ரூ 1,192 கோடி) அளவுக்கு முன்னாள் இராணுவ வீரர்களுக்கான அமெரிக்க அரசின் மானியத்தை இந்தக் கல்லூரி கைப்பற்றியிருக்கிறது. சென்ற ஆண்டில் இந்தக் கல்லூரியின் வருமானத்தில் 70% அமெரிக்க மத்திய அரசின் கல்வி உதவி திட்டங்களிலிருந்துதான் வந்திருக்கிறது. நம் ஊரில் தாழ்த்தப்பட்ட மாணவர்களின் உயர்கல்விக்கான அரசு மானியத்தை கைப்பற்றுவதற்காகவே சில பொறியியல் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டு பணம் குவிப்பது குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள்! அதாவது, தனியார் கொள்ளை அடிப்பதற்கு மக்களின் வரிப்பணத்தை வாரி விடுவதுதான் புதிய தாராளவாத கொள்கை.

நடைமுறையில் எந்த பலனும் இல்லாத ஒரு பட்டத்துக்காக வாங்கிய கடனை அடைப்பதற்கே வாழ்க்கை முழுவதும் செலாவாகப் போகிறது என்கிறார் ஒரு மாணவர். அவர் வாங்கிய $70,000 கடன் வட்டியோடு சேர்ந்து குட்டி போட்டு $200,000-ஐ (சுமார் ரூ 13.4 லட்சம்) எட்டியிருக்கிறது. அமெரிக்காவானாலும், இந்தியாவானாலும் கடன் வாங்குபவர்களை பிழிவதில் நிதி மூலதனக் கும்பல் ஒரே போலவே உள்ளது.

இன்னும் பல முன்னாள் மாணவர்களைப் போலவே, எந்த விதமான தொழில்முறை பயிற்சியும் தேவைப்படாத ஒரு வேலையில்தான் அவர் அமர்த்தப்பட்டார். குறிப்பாக, பள்ளிப் படிப்பு கூட தேவைப்படாத ஒரு கணினி விளையாட்டு சோதிக்கும் வேலையில்தான் அவரை அமர்த்தியிருக்கிறது ஐ.டி.டி. இன்னொரு மாணவர் ஒரு மணி நேரத்துக்கு $5.95 (அமெரிக்காவில் சட்டப்படியான குறைந்த பட்ச ஊதியம் மணிக்கு $7.5) மட்டுமே கிடைக்கக் கூடிய டெலி-மார்க்கெட்டிங் பணியில் அமர்த்தப்பட்டார். “ஐ.டி.டி படிப்பு எந்த விதத்திலும் பலனில்லாதது” என்கிறார் அவர்.

செய்தி ஆதாரம்

 

Permanent link to this article: http://new-democrats.com/ta/private-education-scam-not-only-in-india-ta/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
சி.எஸ்.ஆர் (CSR) என்ற கார்ப்பரேட் மோசடி – ஒரு ஐ.டி ஊழியரின் அனுபவம்

நம்மை தனியாக பிரித்து, இதுதான் செய்யணும், அதுதான் செய்யணும் என்று முடக்கி விடுகிறார்கள். உலகம் தெரியாமல் இதற்குள்ளாகவே இருந்து விடுகிறோம். வெளியில் போய் நிறைய பேர் கிட்ட...

ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்களுக்கு கம்யூனிஸ்ட் அறிக்கை

கார்ப்பரேட்டுகளுக்கிடையே வளர்ந்துவரும் போட்டியும், அதன் விளைவாக எழுகின்ற வணிக நெருக்கடிகளும் ஊழியர்களின் சம்பளங்களை எப்போதும் ஏற்ற இறக்கத்துக்கு உள்ளாக்குகின்றன. தொடர்ந்து அதிவேக வளர்ச்சி காணும் எந்திர சாதனங்களின்...

Close